Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

திருச்சி (தஞ்சை) மாநாட்டிற்கு சென்ற சிவாஜிலிங்கம் திருப்பி அனுப்பப்பட்டார்.

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

தஞ்சையில் இரண்டு நாட்கள் நடைபெறும், ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து செல்வதற்காக சென்ற ஜனாதிபதி வேட்பாளர் (சுயேட்சை) சிவாஜிலிங்கம், திருச்சி விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்ப்பபட்டுள்ளார்.

தங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிவாஜிலிங்கம் வரவில்லையென்பதை இந்தியா நாடுகடத்தலின் மூலம் சொல்லாமல் சொல்லியுள்ளது. புலிகளுக்கே அந்நிலையென்றால் சிவாஜிலிங்கம் எம்மாத்திரம்!

2005-ல் ஜனாதிபதித் தேர்தலின் போது, புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் – இன்று தமிழ்மக்கள் எதிர்;கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், அழிவுகளுக்கும் காரணம் – இரா சம்பந்தன்

நீங்கள் அசல் கிரிமினல் வக்கீல்கள். உங்களின் வக்கீல் வாதங்களை, பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலை, தமிழ்மக்களின் அவல வாழ்வோடு வைத்து கூத்தாடுகின்றீர்;கள்.  பிரபாகரனின் மண்டை பிளக்கப்படும் வரை, உங்கள் சிந்தனைச் செயற்பாடு, அவரின் மண்டைக்கூடாகவே வந்தது. இப்போ யாருக்கூடாக சொல்கின்றீர்கள் – செயற்படுகின்றீர்கள் என்பது பரம ரகசியமல்ல.

பொன்சேகாவின் யுத்தம் சம்பந்தப்பட்ட அண்மைக்கால கூற்றுக்களால்…. முப்படையினர் வெளிநாடுகளுக்கு செல்லமுடியாத நிலை. மேஜர் ஜெனரல், மற்றும் 58-ம் படைப்பிரிவின் அதிகாரிகள் அனைவருக்கும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இனிமேல் இங்கிலாந்திற்கோ, சிங்கப்பூருக்கோ தனிப்பட்ட அல்லது மருத்தவ தேவைக்குத்தானும்  செல்லமுடியாது. நான் 58-ம் படைப்பிரிவை சேர்ந்தவன் அல்லவென்று அவர்களால் சத்தியக்கடதாசி கூட கொண்டுசெல்ல முடியாது.. இராணுவ அதிகாரிகள் தமது பிள்ளைகளுக்கு வைத்தியம் செய்வதற்கும் வெளிநாடு செல்லமுடியாது. -பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்சர் பீரிஸ்

பீரிஸ் படுகொலைகளைச் செய்த 58-வதைப் பற்றி கவலைப்படுகின்றார். தமிழ்மக்களுக்கு இவர்கள் 58ல்; இருந்து முட்கம்பி வேலிவரை செய்ததை கவலைப்பட யாரும் இல்லை!

வெள்ளைக் கொடிகளுடன் வந்தவர்களை ராணுவம் கொல்லவில்லை. பிரபாவின் பெற்றோர், சூசையின் மனைவி ஆகியோரையும் ராணுவமே காப்பாற்றியது. இலங்கை ராணுவம் மிலேச்சத்தனமான ராணுவம் அல்ல. நான் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களை விட்டுவிட்டு ஐக்கியநாடுகள்சபை மனித உரிமைகள் சபை ஆகியவற்றின் கேள்விகளுக்கே பதில் அளிக்க வேண்டியுள்ளது. – ஜனாதிபதி

நீங்கள் நீதி வழுவா நெறிமுறையில் ஓர் மாமன்னன். பூமியன் மனுநீதி கண்ட சோழன். ஓர் கன்றுக்குட்டியைக் கூட காரணம் இல்லாமல் கொல்லவே மாட்டிர்கள்!?

சிவாஜிலிங்கமும் நானும் யுத்தத்திற்கு எதிரானவர்கள். அத்துடன் நாங்கள் இருவரும இடதுசாரிகள்;.? -நவசமசமாஜக்கடசித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தினா

நான்காம் அகிலக்காரர்கள் செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்தான்!

ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த்;தேசியக் கூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களின்  நலன் கருதியதாகவே இருக்கும். தமிழர் கூட்டமைப்பு

கடந்த அறுபது ஆண்டுகாலமாக நீங்கள் தமிழ்மக்கள் நலன் கருதியதால் தான், அவர்கள் “அடிமைகளற்ற, அநாதைகளற்ற சுதந்திர புருசர்களாக” வாழ்கின்றார்கள்.

உதயன் சுடரொளி, இரண்டு பத்திரிகைகளும் ஐ.தே.க. நிகழ்ச்சி நிரலில்தான் இயங்குகின்றன. -சிவாஜிலிங்கம்

அதேபோல் உங்களுக்கும் ஓர் நிகழ்ச்சிநிரல்  உண்டுதானே? இதை இந்தியா நாடுகடத்தலின் ஊடாக  சொல்லியுள்ளதே!

பிரபாகரன் உயிரோடுதான் இருக்கின்றார். அதுபற்றிய விபரங்கள் நேரம் வரும்போது சொல்வேன். றோ சிங்கள உளவு அமைப்புக்கள் அறிந்து கொள்ளத் துடிக்கும் அந்த பேருண்மையை நிச்சயம்  தன்னால் இப்போ சொல்ல முடியாது  -  பழநெடுமாறன்

இவரின் இந்த தங்கமலை ரகசியத்தால், பகுத்தறிவற்ற பாமரக் கூட்டமொன்றும் உயிர் வாழ்கின்றது

டென்மார்க்கில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு இருவாரங்களாக நடைபெற்றது. 194 நாடுகள் கலந்துகொண்டன. கலந்துகொண்டவர்களின் முக்கிய விவாதம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரியமில வாய்வை கட்டுப்படுத்துவது எப்படி என்பதே. வெப்ப வாயுகளின் வெளியேற்றத்தால் பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர்வதால், குட்டித் தீவுகள் நீர்pல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென தீவுநாடுகள் கோரிக்கை விட்டன. வெப்ப வாயு வெளியேற்றத்தை குறிப்பிட்ட அளவு தடுத்தால், உற்பத்தி பாதிக்கமென சீனா, இந்தியா, பிரேசில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கூறி தீவு நாடுகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளன. தற்போது வாயு வெளியேற்ற கட்டுப்படுத்தலை அமெரிக்கா கவனிக்குமாம்

நல்ல கவனிக்கும். எளியோரைத் தாழ்த்தி, வலியோரை வாழவைக்கும், உலகே உன் செயல்தான் மாறாதோ?

டிசம்பர் 13 நள்ளிரவு எரிபொருள் நிரப்பும் பொருட்டு உக்ரைன் நாட்டு இல்யுஸின் 76ரக சரக்கு விமானம் தாய்லாந்தில் தரையிறங்கியது. தரையிறங்கிய பின் அமெரிக்காவின் வெளிநாட்டடு ராணுவப் புலனாய்வுப பிரிவு வழங்கிய தகவல்களின அடிப்படையில் அவ்விமானம் சோதனையிடப்பட்டது. சோதனையின் போது, 40 தொன் எடையுள்ள ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை எறிகுண்டுகள், எறிகணைகள், நச்சுததன்மை கொண்ட ரசாயன அழிவாயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

உக்ரைன் நாட்டு தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான இவ்விமானம் வடகொரியாவிற்கு ஆயுதம் ஏற்றிச் செல்கையில், வழியில் எரிபொருள் நிரப்புவதற்காய், அசர்பைஜான், எமிரேட்ஸ் நாடுகளில் தரையிறங்கி  சென்றுள்ளது. வடகொரியாவில் ஆயுதங்களை ஏற்றிவிட்டு திரும்பி வரும்வழியாக தாய்லாந்து, இலங்கை  ஆகிய இரு நாடுகளும் பயணவழிப் பாதைகளுள் ஓன்றாகும். இதனால் இவ்வாயுதங்கள் சீன ஆசீர்வாதத்துடன் இலங்கைக்கு வந்தாக துப்புத் துலக்குவோர்pன் கணிப்பு. துப்புத் துலக்குவோரும் அவர்களின் கூட்டாளிகளும் இதை கடந்த காலங்களில் செய்யவில்லையோ?

மகிந்த ராஜபக்சாவிற்கு தமிழ்மக்கள் வாக்களிப்பதன ஓன்றுமில்லை.  -டக்ளஸ் தேவானந்தா

வடக்கின் வசந்தமே! ஜனநாயக நீரோட்ட ஊற்றே, தமிழ்மக்களிடம் இழப்பதற்கு எதுதான் உள்ளது?

வடகிழக்கு மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை .அவர்களுக்கு வாக்ககளிக்க சந்தர்ப்பம் வழங்கவேண்டும். அதனாலேயே இரண்டு வருடங்கள் முன்கூட்டி ஜனாதிகதித் தேர்தலை நடாத்துகின்றேன். – ஜனாதிபதி

ஜனாதிபதியின் ஜனநாயகப் பற்று புல்லரிக்கின்றது. காதில் பூ வைப்பதற்கும் ஓர் அளவு வேண்டும்