Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புரட்சிக்கான “ஆஸ்தானக்” கொமிசார்!

‘எங்கள் புதிய ஜனநாயகக் கட்சியின்

புரட்சிக்கான ஆஸ்தானக் கொமிசார்’

நுர்று மலர்கள் மலரட்டும்,

நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்

என்றிடுவார்! – இருப்பினும்

இவரறியாக் கருத்துக்கள் வந்திட்டால் – யாரிவர்

இச்சமூக – விஞ்ஞான – மெய்ஞ்ஞானங்களை

இவர் எங்கே படித்திட்டார்?

இவரென்ன ‘மெய்நிகர்க் கொமிசாரோ’? – எனக்

குழம்பிடுவார் அவர் தம் ‘அரசசபை’யில்!

வந்தது பழையதோ புதியதோ

விஞ்ஞானமோ மெயஞ்ஞானமோ எனவும் ஆராயார்

எழுதிடுவார் எழுந்தமானத்திலோர் விமர்சனம்!

எழுதியோன்

இவர் முன்னிதைப் பகிரங்கமாக

பகிர்த்தாராய்ந்தால்

பதிலின்றி மௌனமே காப்பார்!

பின் அப்பால் சென்று – இதன்

பொருள் குற்றம் குற்றமேயென்பார்! – இவரோ

கூந்தலில் வாசனை இயற்கையாயும் வருமென்பார்!

புலியைப் பாசிசம் என்றிட்டால் – அதைப்

போராட்ட சக்தி என்றிடுவார்!

மூத்தகவிஞர் புலியைப் போற்றிட்டாலும் – அவர்

முக்காலும் முற்போக்குக் கொண்டவரே என்றிடுவார்! – இவர்

முற்போக்கேன் உங்கள் பதிப்பில் இல்லயெனறிட்டால் -

இது தான் எங்கள் ‘புதிய ஜனநாயக

சமூக விஞ்ஞான’ அரசியல் என்றிடுவார்!

ஓ! ஆஸ்தானக் கொமிசாரே!

இவ்வுலகு ஒற்றைப் பரிமாணமின்றிய

பன்முகத் தன்மையியுள்ளது!

ஒற்றை-இரட்யைல்ல

பல்தேசியங்களினால் பர்ணமித்துள்ளது! இது

நூறு மலர்களாய்,

நூறு கருத்துக்களாய்

முட்டிமோதுகின்றது!  இதில்

அடக்கி-ஓடுக்கலுக்கெதிரானவை

மக்கள் விடிவிற்காயானவை

முன்னேறிப்பாயும் –

மற்றவை வழக்கிழந்தே போகும்! – இதற்கு

நீங்களல்ல, மக்களே

சரியான பட்டத்தை வழங்குவர்!

எப்பொருள் யார்  யார் வாய் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!

-அகிலன் (07/08/2010)