Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பாஸிசம் என்றால் என்ன?

1935-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந திகதி கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7-வது காங்கிரஸில் டிமிட்ரோவ் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து….

பாஸிசம் அதிகாரத்தில் இருப்பது என்பது, "நிதி மூலதனத்தின் ஆகப்படுமோசமான, பிற்போக்கான, ஆக அதிகமான ஆதிக்க இனவெளி கொண்ட, ஆகப் படுமோசமான ஏகாதிபத்திய நபர்களின் பகிரங்கமான, பயங்கரத்தன்மை கொண்ட சர்வாதிகாரமாகும்".

 

இன்று ஆழமான பொருளாதார நெருக்கடி வெடித்திருப்பதை ஒட்டி முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி மிகவும் கூர்மையாக அழுத்திக் கொண்டும், உழைக்கும் மக்கள் மேலும் மேலும் புரட்சிகரத்தன்மை கொண்டும் இருப்பதை ஒட்டி பாஸிஸம் மிக விரிவான அளவில் தாக்குதலில் இறங்கியுள்ளது.

ஏகாதிபத்திய வட்டாரங்கள் நெருக்கடியின் சுமை முழுவதையும் உழைப்பாளர்களின் முதகிலேயே சுமத்தி வைக்க தீவிர முயற்சி செய்துகொண்டு இருக்கின்றார்கள். அதனால்தான் அவர்களுக்கு பாஸிசம் தேவைப்படுகின்றது.

அவர்கள் பலவீனமான நாடுகளை அடிமைப்படுத்துவதன் மூலம், ஒரு யுத்த்தின் மூலம் உலகை மீண்டும் புதிதாகப் பங்கு போட்டுக் கொள்வதன் மூலம் தங்கள் சந்தைப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். அதனால அவர்களுக்கு பாஸிசம் அவசியப்படுகின்றது.

அவர்கள் புரட்சிகரமான தொழிலாளர்கள், விவசாயிகள் இயக்கத்தை அடித்து வீழ்த்துவதன் மூலம், உலகப் பாட்டாளி வர்கககத்தின் புரட்சிகர சக்திகளின் வளர்ச்சியை முன்கூட்டியே தடுப்பதற்கு முயற்சி செய்கின்றார்கள். அதனால்தான அவர்களுக்கு பாஸிசம் அவசியப்படுகின்றது;…

பாஸிசத்தின் வெற்றியின் குணாம்சம் என்ன?

இந்த வெற்றி ஒருபக்கம் பாட்டாளி வர்க்கத்தின் பலவீனங்களை எடுத்துக் காட்டுகின்றது. பூர்சுவா வாக்கத்துடன் சமரசம் செய்து அதனுடன் கூட்டாளியாக நிற்கும் சமூக--ஐனநாயகத்தின் சீர்குலைவுக் கொள்கையின் காரணமாய் ஸ்தாபன ரீதியில் வலுவிழந்து பாட்டாளி வர்க்கம் சிந்திச் சிதறி சின்னாபின்னமாகிக் கிடப்பதைக் காட்டுகின்றது. மறுபக்கத்தில் பூர்சுவா வர்க்கம் தன்னுடைய பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டம் உருவாவதைக் கண்டு பயப்படுகின்றது. பூர்சுவா வர்க்கம் தனது சர்வாதிகாரத்தை, தங்கள் பழைய முறைகளில் பூர்சுவா ஐனநாயகம் பாராளுமன்ற முறைகள் மூலம் நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை என்பதையே காட்டுகின்றது.

மிகவும் படுமோசமான பிற்போக்கான பாஸிச வகைதான் ஜேர்மன் வகை பாஸிசமாகும். அது தன்னை தேசிய சோஸலிசம் என்று சிறிதும் வெட்கமில்லாமல் ஆவணவத்துடன் கூறிக்கொள்கின்றது. அதற்கும் சோஸலிசத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.


கிட்லர் பாஸிசம் பூர்சுவா தேசியவாதம் மட்டுமல்ல, அது கீழ்த்தர இனவெறிமிக்கதாகும். அது ஓர் அரசியல் கொள்ளைக் கூட்டத்தின் அரசாங்க அமைப்பு. அது தொழிலாளி வர்க்கத்தின் மீதும், புரட்சிகரத்தன்மை கொண்ட விவசாயிகள், குட்டி பூர்சுவாக்கள், படைப்பாளிகள் ஆகியோர் மீதும் ஆத்திமூட்டி நரவேட்டையாடி சித்திரவதை செய்யும் ஆட்சியாகும். அது மத்திய காலத்து காட்டுமிராண்டித்தனமும், கீழ்த்தரமான இனவெறியும் கொண்டது. அது இதர நாடுகள் மீதும் தேசங்கள் மீதும் கொடுர ஆக்கிரமிப்புத் தன்மை கொண்டதுமாகும்.

ஒட்டோ பவர் என்பவர் குறிப்பிடுவதைப் போல பாஸிசம் என்பது, இரு வர்க்கங்களுக்கும்--அதாவது பாட்டாளி வர்க்கம், முதலாளி வர்க்கம் ஆகிய இரு வர்க்கங்களுக்கு அப்பால் தனித்து நிற்கும் அரசாங்க அதிகாரத்தின் வடிவமல்ல. பிரிட்டிஸ் சோஸலிஸ்ட் பிரெயில்ஸ் போர்டு பிகடனப்படுத்துவதைப் போல, பாஸிசம் என்பது குட்டி முதலாளித்துவ வாக்கம் எழுச்சி பெற்று, கலகம் செய்து அரச அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டிருக்கின்றது என்பதல்ல. தவிரவும் பாஸிசம் என்பது வர்க்கங்களுக்கு அப்பால் உள்ள அரசல்ல. குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாங்கமுமல்ல. அல்லது நிதி மூலதனத்தின் மீது மேல் நிற்கும் "கழிசடைப் பாட்டாளிப் பகுதியின் சர்க்காருமல்ல.

பாஸிசம் நிதி மூலதனம் தன்னின் அதிகாரமாகும். அது தொழிலாளி வாக்கம், புரட்சிகரத் தன்மை கொண்ட விவசாயிகள், புத்திஐPவிகள் பகுதிக்கம் எதிரான பயங்கரமான வன்முறை மிக்க பழி தீர்க்கும் ஸ்தாபனமாகும். வெளிநாட்டுக்கொள்கையில் பாஸிசம் மிகவும் கொடுரமான வடிவத்திலான இனவெறி கொண்டதும் இதர நாடுகள் மீது மிகவும் கீழ்த்தரமான வெறுப்பைத் தூணடிவிட்டுறு தூபம் போடும் சக்தியுமாகும்.

இதை, பாஸிசத்தின் உண்மையான குணாம்சத்தைப் பற்றிக் குறிப்பாக வலியுறுத்திக் கூறவேண்டும். ஏனென்றால் பல நாடுகளில் பாஸிசம் சமுதாய வாய்ச் சவடாலுக்குப் பின்பாக மறைந்து கொண்டு, நெருக்கடியின் காரணாக வெளியே விரட்டப்பட்டு நிற்கும் குட்டி முதலாளித்துவ ஐனப்பகுதியை தனது செல்லாக்கின் கீழ் எப்படியோ வைத்துக்கொள்கிறது. சிலசமயம் பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளையும் கூட தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வந்து விடுகிறது. இந்த ஐனப்பகுதிகள் பாஸிசத்தின் உண்மையான வர்க்க குணாம்சத்தையும் அதன் உண்மையான இயல்பையும் புரிந்து கொண்டார்களானால் அவர்கள் பாஸிசத்திற்கு நிச்சயம் எந்த ஆதரவும் தரமாட்டார்கள்.

பாஸிசத்தின் வளர்ச்சியும் பாஸிச சர்வாதிகாரமும் பல்வேறு நாடுகளில் பலவேறுபட்ட வடிவங்களில் வந்திருக்கின்றன. அந்தந்த நாட்டு வரலாறு, சமுதாயம், பொருளாதாரம் ஆகிய நிலைமைகளுக்குத் தக்கபடி தேசிய தனித்தன்மைகளும் குறிப்பிட்ட நாட்டின் சர்வதேச ஸ்தாபனத்தைப் பொறுத்தும் பாஸிசம் உருவமெடுக்கிறது.

சிலநாடுகளில் பிரதானமாக பாஸிசத்திற்கு ஒரு விரிவான மக்கள் தளம் இல்லாமலும் பாஸிச-முதலாளித்துவ வர்க்கத்தின் முகாமுக்குள்ளேயே பல்வேறு கோஸ்டிகள் சண்டை போட்டுக்கொண்டும், சண்டைகள் கூர்மையடைந்தும் உள்ள நாடுகளில் பாஸிசம் உடனடியாக பாராளுமன்றத்தை நீக்குவதில்லை. இதர முதலாளித்துவக் கட்சிகளையும், சமூக ஐனநாயக் கட்சிகளையும் அனுமதித்து ஓரளவு சட்டபூர்வமான தன்மையை நிலைநிறுத்திக் கொள்கின்றது.

இதர தேசங்களில் புரட்சி விரைவில் ஏற்படும் சூழ்நிலையைக் கண்டு ஆளும் முதலாளி வர்க்கம் பயப்படும் இடங்களில் பாஸிசம் தங்கு தடையின்றி தனது அரசியல் ஏகபோக ஆதிக்கத்தை ஸ்தாபிக்கிறது. அதை உடனே செய்கிறது அல்லது
போட்டியாக உள்ள அத்தனை கட்சிகளையும் குழுக்களையும் அடக்கி ஒடுக்குகின்றது. அதன்மீது பயங்கரமான தாக்கதல்களையும் தீவிரப்படுததுகின்றது.

பாஸிசம் தனது நிலை குறிப்பாக மிகவும் கடுமையாக ஆகும்போது, தனது வர்க்கத் தன்மையை கொஞ்சமும் மாற்றாமல், தனது அடித்தளத்தை விஸ்தரிக்கவும், எல்லா முயற்சி எடுத்துக்கொள்ளவும், பயங்கர சாவாதிகார நடவடிக்கைகளோடு இணைந்து கரடு முரடான மோசடியான பெயரளவிலான பாராளுமன்ற வேலைமுறைகளைக் கூட கையாள்வதை நிறுத்திக் கொள்வதில்லை.


(தொடரும்)