Fri11222019

Last updateFri, 22 Nov 2019 3pm

அன்னம் இனிச்சிதறுண்டு வெற்றிலையில் அமரும்......

எம் உயிரை வதைத்த மன்னவனே எமக்கினியும்
தளபதியும் சேனைகளும்  களம்மாறும் தேர்தலிற்காய்
படை நடத்தி உயிர்குடித்த பொன்சேகா சிறைபுகுவார்
தேர்தல் களமாட-- கூட்டமைப்பு வீறுகொண்டு
இனமான உணர்வுகொள்ளும் .....

 

விரல்நுனியில் மைகாட்டி வட்டுக்கோட்டை.—புலத்து
வீரமறவர்  நாடுகடந்து வென்றெடுப்பர்
தரைவிரிக்க பாயில்லை தறப்பாழுமில்லை—மீள்
குடியமர்வு வெறும்தரையில் வாக்காய் நிறைக்க
அன்னமினி சிதறுண்டு வெற்றிலையில் அமருமோ யாரறிவார்;;;....

நாடாளும்  கோத்தபாய நாட்டாண்மை
கொடிகட்டிப் பறக்குது பார்--பாசிசமாய்
பாராளும் அதிபதிகள் வாய்மூட கர்சிக்கும் -மமதை
ஜநாவின் இருப்பையே யாருக்காய் --அருகிருப்பாய் என்கிறது
ஊரோடு அழிக்கையில் ஊமையானாய்-உடனிருந்து
சரண்புகுந்தோர் உயிரெடுத்த—கோழையொடு சரணானாய்..

பிரபா மரணஉயில் பெற்றாய்--கொதியடங்க
எண்ணையில்லை தோண்ட –மக்கள்
எரியுண்ட சாம்பலிலே பண்ணை அமையுங்கள்--ஆசிய
பேட்டை ரவுடிகள் கொட்டமடிக்க—ராஜபக்ச குடும்பம்
மக்கள் எலும்பையும் உருக்கித்தரும் வறுகிப்போங்கள்..

பாவம் மக்கள் பயபீதியொடு காலம் -பறித்தெடுத்த
பிள்ளைகளின் நினைவோடு உருக்குலைந்து
இளமையிலே கிழமாக போர் தின்று போட்டிருக்கு
கொடுமையிலும் கொடுமை –தம் கோலோச்ச தலமைகள்
இனவாதம் ஏற்றி இருப்பை தக்கவைத்து
தடுமாறும் இனங்கள்--பகைவிலக்க விலங்கிட்டார்
அறுதிப் பெரும்பான்மைக்கு அடித்தது யோகம்
இனவாதத் தீயில் குளிர்காயும் எல்லோருக்கும் தான்....

‘காத்திருப்போம் --கருத்துரைப்போம்
 இன இணைவு எழுட்சி கொள்ள வழிசமைப்போம்’