Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர் குமார் நாடுகடத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தம்!

தோழர் குமாரை நாடு கடத்துவதற்கு  தற்போதுள்ள மைத்திரி  அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு எதிராக, முன்னிலை சோசலிசக் கட்சியினாலும், சகோதர அமைப்புகளினாலும் பல போராட்டங்கள் நாடு முழுவதும், வெளிநாடுகளிலும்  நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 02.02.2015 அன்று  தோழர் குமார் குணரத்தினம் சார்பில், கொழும்பு சுப்ரீம் கோட்டில் அடிபடை மனித உரிமைகளைக் கோரும் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படுமென்று கூறப்பட்டது. அதன் படி இன்று முற்பகல் கூடிய கொழும்பு சுப்ரீம் கோட் நீதிபதிகள், குமார் குணரத்தினம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான நீதி விசாரணை செய்வதா இல்லையா என்ற முடிவை, இன்று (10.02.2013) தாம் எடுக்கவில்லை என்றும், அது மிக விரைவில் வேறு ஒரு திகதியில் முடிவு செய்யப்படும் என அறிவித்தனர்.  

மேலும், அடிப்படை மனித உரிமைகளைக் கோரும் மனு மீதான விசாரணை செய்யும் முடிவை சுப்ரீம் கோட்  எடுக்கும் வரையான காலத்தில், தோழர். குமார் குணரட்ணத்தை கைது செய்யவோ அல்லது நாடு கடத்தவோ முயற்சிக்கக் கூடாதென  அரசுக்கு சும்ரீம் கோட் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.