Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பாலஸ்தீனம் மீதான தாக்குதலை கண்டித்து கொழும்பில் மாபெரும் ஆர்பாட்டம்! (படங்கள்)

இன்று வியாழக்கிழமை, 31.07.2014 பிற்பகல் 04 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக, பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குலை கண்டித்தும், பாலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி அவர்களுக்கு ஆதரவாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிறுத்தியும் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் இலங்கையின் அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் பங்குகொண்டன. முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மா-லெ கட்சி, நவசம சமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மவோயிஸ்ட்) போன்ற அனைத்து இடதுசாரிக் கட்சிகளுடன் மத்திய மாகாண சபை ஐ.தே.க உறுப்பினர் அசாத்சாலி தலமையிலான தேசிய ஒற்றுமை முண்னனி ஆகியன கலந்துகொண்டன.

அத்துடன் உழைப்பாளர்கள், மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி அவர்களுக்கு ஆதரவாக கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னாள் அணிதிரண்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் பெரும்தொகையான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கோசங்ளை எழுப்பினர்

ஆற்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோசங்களிர் சில:

1 பாலஸ்தீனயர்களை வழ்வதற்க்கு இடம்விடு!

2 ஆள்கொல்லி ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஓடுக்கப்பட்ட இஸ்ரேல் - ஈராக் - பாலஸ்தீன மக்களே ஒன்றிணையுங்கள்!

3 ஒடுக்கப்பட்ட உலக மக்களே வாழ்வுக்குப் பதிலாக மரணத்தை உரிமையாக்கும் ஏகாதிபதிதியத்துக்கு எதிராக ஒன்றிணையுங்கள்!