Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பாடசாலைகளில் பணம் அறவிடுவதை உடனடியாக நிறுத்து..!

"தற்போதைய காலங்களில் அரச பாடசாலைகளினுள் மாணவர்களிடமிருந்து பணம் அறவிடப்படுதல், பெற்றோரிடம் பலவகையான வேலைகளை சுமத்துதல் போன்ற அரச கல்வி முறைமையினை அதாவது இலவச சுதந்திர கல்வித் திட்டத்தினை பாதிக்கின்ற பல செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

வறிய மாணவர்கள் கல்வி கற்பதற்கு இன்று பாடசாலைகளில் இடம் இல்லாமல் போகும் நிலை தோன்றியுள்ளது. கல்வியானது சகலரதும் உரிமையாகும். அது விற்பனைப் பண்டமல்ல.

ஆகையால் நாம் ஒன்றிணைத்து போராட வேண்டும் " என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பொது மக்களிடம் தெரிவிக்கின்றது.

மேலும் பாடசாலைகளில் பணம் அறவிடப்படுவது பற்றி தகவல்கள் இருப்பின் அவற்றை வழங்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.