Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மோடி பிரதமரானால் "தீர்வு" கிடைக்குமா!?

மோடியின் ஆட்சி பற்றி பிரமைகளும், நம்;பிக்கைகளும், எதிர்பார்புக்களும் கொண்ட் "தீர்வு" பற்றிய "தமிழினின்" உணர்வுகள் எதார்த்தமானவையல்ல. தமிழகத்தைச் சேர்ந்த தமிழினவாதிகளின் சந்தர்ப்பவாத பிழைப்புவாத நிலைப்பாட்டை, குருட்டுத்தனமாக வழிபடுவதாகும். கடந்த 60 வருடத்துக்கு மேலாக நம்பி அழிந்த தமிழ் மக்களின் பகுத்தறிவற்ற முட்டாள்தனமுமாகும்.

இந்தியாவின் ஆளும் வர்க்கக் கொள்கை என்பது, பிராந்திய மற்றும் உலக மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இதை மீறி எந்த தனிநபரோ, கட்சிகளோ முடிவுகளை எடுக்க முடியாது.

ஆளும் வர்க்க நலனையே மோடி முன்னெடுக்க முடியுமே ஒழிய, தனிப்பட்ட விருப்புகளையோ கூட்டுச் சேர்ந்த கட்சிகளின் விருப்பதையோ அல்ல. அவர் முன்னெடுக்கும் இந்துத்துவம், சாதியத்தை அடிப்படையாக கொண்ட இந்து பாசிசத்தை முன்னிறுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களையும் உழைக்கும் மக்களையும் ஒடுக்கும் மக்கள் விரோத ஆட்சியாகவே இருக்கும். மக்கள் சார்ந்த அரசாக இருக்காது. அதுபோல் இலங்கை மக்களைச் சார்ந்த பிரந்திய வல்லரசாகவும் இருக்காது. முற்றாக இலங்கை அரச பாசிசத்துக்கு நிகரான மோடி தலைமையிலான பாசிசமாகவே இருக்கும்.

இவ்விரண்டும் பிரந்தியத்தில் கூட்டுச் சேர்ந்து மக்களை ஒடுக்குவதையே முன்னிறுத்தும். இதற்காக அவை ஒன்றுபட்டு செயற்படுவதில் இருந்துதான், இலங்கை தமிழ் மக்களைக் கையாளும். தமிழ் மக்களை முன்னிறுத்தி, இலங்கை அரசுக்கு எதிராக ஒருநாளும் செயற்படாது. தமிழனின் நம்;பிக்கையும் எதிர்பார்ப்பும் இனவாதம் சார்ந்த கானல் நீராகும்.