Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பேராசிரியர் சாய்பாபா கைது: மாணவர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வரும் ஜி.என். சாய்பாபாவை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக கருதி மகாராஷ்டிர காவல்துறையினர், அவரை பல்கலைக்கழக வளாகத்தில் கைது செய்தனர்.

பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் சட்டவிரோத கைது குறித்து மகாராஷ்டிரா பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை விடுதலை செய்ய கோரியும் ஆர்வலர்கள் இன்று சனிக்கிழமை இந்திய தலைநகர் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழக மாணவனொருவன் கூறுகையில், பேராசிரியரும் ஜனநாயக உரிமை ஆர்வலருமான சாய்பாபா மகாராஷ்டிரா பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையை நாம் பெரிதும் கண்டிக்கிறோம். அவரை தாமதிக்காமல் வெகுவிரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

தென்ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியர்சாய்பாபா மாவோயிஸ்டுகளுக்காக செயற்படும் ஒரு அமைப்பை இயக்கி வந்ததாக பொய்க்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படுள்ளது குறிப்பிடத்தக்கது

இந்திய ஆளும் அதிகார வர்க்கம் அந்நிய ஏகாதிபத்தியங்களுடன் சேர்ந்து நடாத்தும் கனிம கொள்ளைக்கு இடையுறாக  இருக்கும் ஆதிவாசி மற்றும் பழங்குடி  மக்கள் மீது பச்சை வேட்டை (GREEN HUNT) என்ற பெயரில் நடாத்தும் ஆக்கிரமிப்பு யுத்தத்தினை நடாத்திக் கொண்டிருக்கின்றது.

இந்திய ஆளும் தரப்பினரது இந்த பாசிச நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பக்கம் சார்ந்து அங்கு நடக்கின்ற உண்மைகளை வெளிக் கொண்டு வருபவர்கள் மீதும் அந்த மக்களிற்கு மனிதாபிமான உதவிகள் செய்பவர்கள் மீதும் பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கைதுகள் தொடர்கின்றன. கடந்த வருடம் அரசபடையின் கொடுரத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு மருத்துவ உதவியளித்த பினாயக்சென் இன்று சாய்பாபா....