Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஐயா நெடுமாறனின் கருத்துகளுக்கு வை.கோ., சீமான் போன்றவர்கள் பதில் சொல்வார்களா?

தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்கள். இந்த நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. இதனால் இதுபோன்ற கொள்கை முரண்பட்ட கூட்டணிகளை ஆதரிக்க இயலவில்லை'

பி.ஜே.பி. தலைவர்கள் பற்றி…

தமிழ்நாட்டு பி.ஜே.பி. தலைவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினையில் தீவிரமாகப் பேசுகிறார்கள். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகித்துச் செயல்பட்டார்கள். அதே கட்சியில் சுஷ்மா ஸ்வராஜ், சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பேசிவருகிறார்கள். தமிழக பி.ஜே.பி. தலைவர்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை தமிழக பி.ஜே.பி. தலைவர்கள் மட்டும் ஈழத் தமிழர் பற்றி பேசுவது தமிழ்நாட்டு மக்களைத் திருப்திப்படுத்துவதற்காகத்தான். அகில இந்தியத் தலைமை இந்தப் பிரச்னையை அடியோடு புறக்கணித்துவிட்டது.!

ஜெயலலிதா அம்மையார் பற்றி…

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக சட்டமன்றத்தில் தீர்மானங்களை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றினார் என்பது உண்மையே. ஏழு சிறைவாசிகளின் விடுதலை விஷயத்தில் அக்கறை காட்டினார் என்பதும் உண்மையே. அதே நேரத்தில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாக அரசு அனுமதியோடு கட்டப்பட்ட முற்றத்தின் பூங்காவை இடித்து நாசம் செய்தது ஏன்?

அதுமட்டுமா. ஈழத் தமிழரை ஆதரித்துப் பேசியதாகப் பல தலைவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. பிரபாகரன் படம் தாங்கிய பதாகைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஈழத் தமிழர் ஆதரவுக் கூட்டங்கள் நடத்துவதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று மண்டப உரிமையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் அச்சிடக் கூடாது என்று அச்சகங்கள் மிரட்டப்படுகின்றன.

ஈழத் தமிழருக்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது மட்டும் போதும் என முதல்வர் நினைக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. எதிர்க்கட்சியாகக்கூட வர முடியாததற்கு ஈழத் தமிழர் பிரச்சினைதான் காரணம் என்பதை ஜெயலலிதா உணர்ந்திருக்கிறார். அந்த நிலை தனக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஈழத் தமிழர் சம்பந்தமாக சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றினாரே தவிர, உருப்படியான செயல்களை செயல்படுத்தத் தவறிவிட்டார்! என கனல் கக்குகின்றார் நெடுமாறன் ஐயா அவர்கள். இவைகளை எம்மவர்களும் கண்க்கில் கொள்ள வேண்டும்.

தமிழக முதலாந்தர அங்கிடுதத்திகளான (ஈழ உணவாளர்கள் வை.கோ. சீமான் தகடுதத்தத்தங்கள்) பற்றிய ஐயாவின் கணிப்பு மேற் சொன்னவர்களுக்கெல்லாம வருமா? இதெல்லாம் தேர்தல்கால சகஜமப்பா தோதல் முடிய ஐயாவுடன் இவர்களும் மகிந்தாவிற்கு எதிராக கை குலுக்க ஐயாவும் கைகோர்த்து பிரபாகரனுக்காக நடந்ததை மறப்போம் எனும் காலம் தோதல் முடியக் கனியும்! ஏனெனில் இவர்களெல்லாம் தமிழ்ஈழக் குட்டையின் மட்டைகள் அல்லவா? இதற்கு சந்தர்ப்பவாத சங்கை ஒத்தூதும் எம்மவாகளிற்கும் குறைச்ல் இல்லைத்தானே?....