Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"நோபல்' எழுத்தாளர் கேபோ மறைவு!

பிரபல தென் அமெரிக்க இலக்கியவாதியான கேப்ரியல் கார்ஸியா மார்குவேஸ், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த மார்ச் 31 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வார சிகிச்சைக்குப் பின் மெக்ஸிகோ நகரில் உள்ள சொந்த வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் வியாழக்கிழமை இறந்தார். "கேபோ' என இலக்கிய வட்டத்தில் செல்லமாக அழைக்கப்பட்டார் மார்குவேஸ்.

தனது இலக்கியப் படைப்புகளில் தென் அமெரிக்க கண்டத்தில் சர்வாதிகார ஆட்சியாளர்களின் கொடுமையான அடக்குமுறைக்கு ஆளான லத்தீன் மொழி பேசும் மக்களின் துயரங்களை விரிவாகச் சித்தரித்தவர். அவரது "மேஜிகல் ரியாலிஸம்' என்ற புதுமையான படைப்பிலக்கிய முறை உலகப் புகழ் பெற்றதாகும்.!