Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழில் - முன்னிலை சோசலிசக் கட்சியின் கருத்தரங்கு

இன்று அரசியல், சமூகம், பொருளாதரம், இனங்களுக்கு இடையிலான சமத்துவம் என அனைத்துத் தளங்களிலும் இலங்கை பாரிய சீரழிவைச் சந்தித்த வண்ணமுள்ளது. பொருளாதராம் சீனா, இந்தியா உள்ளடங்கிய ஆதிக்க நாடுகளில் கட்டுப்பாட்டில் உள்ளது.

நாட்டின் வளங்கள் அனைத்தும் ஆட்சியாளர்களால் மேற்கூறிய நாடுகளின் பல்தேசியக் கம்பொனிகளுக்கு அடி மாட்டு விலையில் விற்கப்படுகிறது. வேலை இல்லா நிலை, பொருட்களில் விலை உயர்வு, விவசாயம் மற்றும் மீன்பிடி இயற்கையாலும் அதிகார வர்க்கத்தாலும் வஞ்சிக்கப்பட்ட நிலை போன்றவற்றால் மக்கள் வாழ்க்கை நிலை குலைந்த வண்ணமுள்ளது. இவை ஒரு பக்கமிருக்க தமிழ் பேசும் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான வரலாறு காணாத ஒடுக்குமுறையும், இன- மதவாத அச்சுறுத்தல்களும் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் தலை விரித்தாடுகிறது. இவை அனைத்துக்கும் பின்னால் இன்றைய அரசும், அதன் பரிவில் வாழ்வோரும் இயங்குகின்றனர் - காரணமாக இருகின்றனர்.

இன்னிலையில் இடதுசாரிகளின் கடமை என்ன? வேலை முறை என்ன? என்பது பற்றிய பிரசாரக் கூட்டங்களை முன்னிலை சோசலிசக் கட்சியும், அதன் அதரவு சக்திகளும் நாடு முழுவதும் நாடாத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கார்த்திகை மாதம், 9ஆம் திகதி, காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்தில் "வேலைத்திட்டத்தை மக்கள் மயப்படுத்தல்" என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கு இடம் பெறவுள்ளது. இக் கருத்தரங்கில் நாட்டின் யாப்பு முறைமை மற்றும் பொருளாதாரம், இடதுசாரிய அரசியல் போன்ற விடயங்கள் இடதுசாரிய கட்சிகளின் பங்குபற்றலுடன் பேசப்படவுள்ளது. இந்நிகழ்வுக்கு உங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.

கருத்தரங்கு விபரம் :

இடம் : யாழ்.வீரங்கம் மண்டபம்

காலம் : கார்த்திகை, 9 ஆம் திகதி 2014

நேரம் : காலை 10 மணி .