Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசால் கடத்தப்பட்ட பல்கலை மாணவன் நிரோஷனின் விடுதலை கோரி பாரிய ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவனான யோகராஜா நிரோஷனை உடனடியாக விடுதலை செய்ய கோரி  பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்  ஒன்று நேற்று (8/8/2014) சப்ரகமுவ பல்கலைக்கழக வளாக பகுதியில் அனைத்து பல்கலைக்ககை மாணவர் ஒன்றியம் நடாத்தியது. இதில் பெரும் அளவிளான மாணவர்கள் கலந்து கொண்டதுடன் பல்கலைக்க்கழகத்திற்கு வெளியால் ஊர்வலமாக சென்று நகரத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர்.

பல்கலைக்கழகங்களின் உள் இனவாதத்தினை தூண்டிவிட்டு இரட்டை வேடம் ஆடாதே!

அரச பயங்கரவாதத்தை நிறுத்து!

போன்ற கோசங்களை முழங்கி, அரசின் இனவாத நிகழ்ச்சி நிரலுக்கு பலியாகப்போவதில்லை என உறுதி எடுத்துக் கொண்டனர். மேலும் போராட்டம் விஸ்த்தரிக்கப்படும் என அறிவித்தனர்.

மகிந்த குடும்ப சர்வாதிகார அரசால், தமது குடும்ப சர்வாதிகாரத்தினை இலங்கை தீவில் நிறுவும் பொருட்டு மீண்டும் இனவாத, மதவாத நடவடிக்கைகள் மிகவும் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசு தனது குண்டர்கள் மூலம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்குள் தமிழ் மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வண்ணம் சுவரொட்களை ஒட்டியதுடன் தமிழ் மாணவர் ஒருவரை இரவில் அடித்து கயிற்றில் கட்டி கொலை செய்ய முயற்சித்தது.

அதனைத் தொடர்ந்து பரீட்சை எழுதிக்கொண்டிருந்த தமிழ் மாணவன் நிரோசனை பரீட்சை மண்டபத்தில் புலிகளுடன் தொடர்வுடையவர் என்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளது.

 சப்ரகமுவபல்கலைக்கழகம் உட்பட தெற்கில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகிற போராட்டங்கள் அனைத்தும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் ஒன்றிணைந்தே போராடுகின்றனர். மேலும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இனவாதம் மதவாதம் குறித்து பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதனை இனவாதம், மதவாதத்தினை இருப்பாக கொண்ட அரசும் ஏனைய  அரசியல் கட்சிகளும் தமது அதிகாராத்திற்கு பெரும் பிரச்சனையாக இனம் கண்டு கொண்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழக மாணவர்களின் ஜனநாயக உரிமைகளுக்க்கான போராட்டங்களின் மீது அரசு கட்டவிழ்த்து விடும் வன்முறை குறித்து பாராமுகமாக இருக்கின்றனர்.

இது குறித்த முன்னைய பதிவுகள்

1. பத்து நாட்களில் வெளியேற வேண்டும் இல்லையேல் தமிழ் மாணவிகள் அனைவரும் கற்பழிக்கப்படுவீர்கள்! காடையர்கள் எச்சரிக்கை!

2.அரசாங்கம் பல்கலைக்கழக மாணவனை கடத்தியுள்ளது!

3. கடத்தப்பட்ட மாணவனை உடன் விடுதலை செய்ய வேண்டும்! இல்லையேல் பாரிய ஆர்ப்பாட்டம்!