Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

மீண்டும் புதிய மிடுக்குடன் பேசவேண்டும்

முப்பது வருடங்களின் முன்னர் தமிழ்ச்சினிமாவில் சிவாஜிகணேசனனின் சிம்மக்குரல் கர்ச்சனையும் கண்ணீரும் கம்பீரத்தின் வெளிப்பாடுகளாக மிளிர்ந்து தமிழ் இரசிகர்களை ஆட்படுத்தியிருந்ததுண்டு@ இன்று அவற்றை விவேக் மீளச்செய்யும்போது எந்தவகையிலும் கம்பீரம் வெளிப்படுவதில்லை, சிரிப்புத்தான் வெடித்துக் கிளம்பும். இந்தச் சோகம் இன்று எமது அரசியலிலும் காட்சி தருகின்றது.

 

மூன்று தசாப்தங்களின் முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி கர்ச்சித்த வீராவேச வாய்ச்சவடால்களைத் தொடர்ந்த கண்ணீர் வெள்ளத்தை இன்று தமிழர் கூட்டமைப்பு மீட்டுக்காட்ட முன்வருகிறபோது எமக்காக எவரும் அழக்கூட முன் வரமாட்டார்கள். உலகம் கூடிக் கைகொட்டிச் சிரியாதோ?

முந்திய துயரம் மீளக் கொண்டுவரப்படுகையில் முன்னர்போல சோக  இரசனை வெளிப்படுவதற்குப்பதில் சிரிப்பையே உண்டாக்கும் என மார்க்ஸ் ஒருதடவை குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் இந்தத் துயரமே அரங்கேறியுள்ளது.முப்பது வருடயுத்தத்தில் சிந்திய இரத்தமும் கண்ணீரும் எந்தப்படிப்பினையையும் தந்துவிடவில்லை. எனுமாறு மீண்டும் அதே தவறுகளுடன் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக மற்றும் சிறுபான்மை மக்கள் இயங்க முற்பட்டுள்ளார்கள். அதுவே தமது சவாரிக்கு வாய்ப்பானது என்ற குதூகலத்துடன் அதிகார வர்க்கமும் அரசியல்கோமாளிகளும் உற்சாகமாக கூத்தடிக்கிறார்கள்.

வரலாறு காணாத வேட்பாளர் மனுத்தாக்கல் ஏப்பரலில் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இடம்பெற்றுள்ளது பற்றிய செய்தியைப்பார்க்கும்போது எமது அரசியல் கோமாளித்தனம் முழுதாய் வெளிப்பட்டுள்ளமையை விளங்கிக்கொள்வோம். மூன்று தசாப்தங்களின் இரத்தம் சிந்திய அரசியலான யுத்தத்தில் மறைந்திருந்த கோமாளித்தனந்தான் இன்றைய இரத்தம் சிந்தாத யுத்தமான அரசியல் மோதலுக்காக இத்தனை கோமாளிகளைக் ~களம்’ இறக்கியுள்ளதா? என்ன நடந்தது, இனி என்ன செய்ய வேண்டும், எங்கிருந்து தொடங்குவது, இலக்கு எது எனும் தேடல்கள் ஏதுமின்றி குழம்பிய குட்டைக்குள் வாக்கு மீன்கள் தேடும் எமது அரசியல்வாதிகளை என்னவென்பது?

குறிப்பாக, வடக்கு – கிழக்கில் எந்தவொரு மார்க்கம் பற்றிய தெளிவுமின்றி இருபதுக்கு மேற்பட்ட குழுக்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தலை முகங்கொள்வது விசனத்துக்குரியது. மும்முனையில் இயங்கும் சிங்கள பேரினவாத சக்திகளை சிங்கள மக்கள் தெளிவாக வரிசைப்படுத்திவிட இயலும். தமிழர் மத்தியில் முன்வந்திருக்கும் இருபதுக்குமேற்பட்ட சக்திகளை அவர்களால் இலகுவில் வரிசைப்படுத்திவிட முடியாது. தெற்கிலும் பல குழுக்கள் இறங்கியிருந்தாலும் அரசுதரப்பு, எதிர்க்கட்சி, மூன்றாவது சக்தியாக வெளிப்பட்டு விதூசகனாக மாறிக்கொண்டிருக்கும் ஜே.வி.பி. என்பவற்றிடையிலான போட்டி குறித்த தெளிவு மக்களுக்கு உள்ளது. பேரினவாதத்தை நாகரிகமாக முன்வைப்பதும் வாழ்க்கைப்ப்hடு முன்னெடுப்பும் சார்ந்து தமக்கான அரசியல் சக்தியை அவர்கள் இனங்காண முடியும்.

தமிழ் மக்கள் மத்தியில் இத்தனை தெளிவு இருக்க முடியாது. ஏதோவொரு வகையில்மக்களின் கவனிப்புக்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்த சக்திகள் பிளவுபட்டுக் களமிறங்கியுள்ளார்கள். ஒவ்வொரு பகுதிக் குறுநில மன்னர்களைத் தெரிவுசெய்யத்தான் வாய்ப்புள்ளது. தெளிவான ஒரு அரசியல் தலைமை குறித்த அக்கறை செலுத்துகிறவர்களுக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்துவதாக அமையும் அம்சம் இது.

அத்தகைய ஒரு ஆளுமைமிக்க தலைமை தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுவிட்டுவிடக்கூடாது என்பதில் சிங்களப் பேரினவாதக்கட்சிகள் மூன்றுமே கவனங்கொண்டுள்ளன. நேரடியாக தாமே களம் இறங்கியுள்ளதுடன் பிளவுபட்ட அமைப்புகளை அவர்கள் ஊக்குவதில் இதனைக்காணலாம். ஒன்றில் தமது பேரினவாதப் பெருவிருட்சத்தில்படரும் கொடிகளாக இருங்கள், அல்லது மோதிப்பிளவுண்டு அலறிக்கொண்டிருங்கள் என்ற செய்தியை அவர்கள் தெளிவாக முன்வைத்துள்ளார்கள்.

சிறு சிறு வேறுபாடுகளுடன் மாறுபட்ட அமைப்புகளாக தமிழ் அமைப்புகள் இயங்குவது முப்பது வருடத்துக்கு முந்திய இருப்பையே உணர்ததுகிறது. அப்போதும் விமர்சன விழிப்புணர்வுடனும் அரசியல் தெளிவோடும் ஜனநாயகப் பண்போடும் அனைத்து சக்திகளும் உரையாடி ஐக்கியப்பட இருந்த வாய்ப்பு தவறவிடப்பட்டது. பின்னர் வலியவர் ஆதிக்கத்தை நிலைநாட்டி தலைமையை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற ஆதிக்கத் தேசியவாதப் பிரிவின் அபிலாஷையைப் பூர்த்தியாக்கும் வகையில் புலிகள் தலைமையை அபகரித்து அவலமான முடிவைத்தழுவினர்.

இப்போதுள்ள சூழலில் அவ்வப் பிராந்தியத்துக்கு ஏற்ற பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்வதே உகந்த தேர்வாக இருக்க முடியும். அவர்களுடாக ஜனநாயக பூர்வ உரையாடல் வழி தமிழ்மக்கள் தமக்கான ஆரோக்கியமான தலைமையைக் கட்டியெழுப்ப இயலும். அவ்வப் பிராந்தியங்களில் அரசியல் முதிர்ச்சியுடன் மக்கள் நலனுக்காக இயங்கியவர்கள் சரியான வேலைமுறைகளை முன்னெடுப்பதன் வாயிலாக தமது பிரிநிதித்துவத்தை வென்றெடுப்பது இதன்பொருட்டு அவசியப்படும். இவ்வகையில் மக்கள் மார்க்கம் ஒன்றுக்கான மார்க்கம் தெளிவாக உள்ளதாக மயங்கிவிடக்கூடாது. ஜனநாயக பூர்வமான மக்கள் அரசியல் பாதைபற்றிய அக்கறையுள்ளவர்கள் தமக்கான பகுதியில் கடின உழைப்பை வெளிப்படுத்துவது வாயிலாகவே வெற்றியைச் சாத்தியப்படுத்துவது வாய்க்கும். அவ்வாறு வெற்றிபெற்று வரக்கூடியவர்கள் தமிழ் மக்களுக்கான ஒரு தலைமையை ஏற்படுத்துவதற்கு ஏற்ற மார்க்கத்தைப் பின்னர் தேடவேண்டியதிருக்கும்.

அவ்வாறில்லாமல் இந்தக் குழம்பிய குட்டையிலே ஒரு தலைமைத் திமிங்கிலம் பற்றி அக்கறைகொள்வதாக தமிழ்த்தேசியவாத ஆதிக்க சக்தியின் விருப்பம் இன்று இருப்பது வியப்புக்குரியதல்ல@ அவர்களது முந்திய பாஸிஸ வழி முடங்கிப்போய்விட்ட நிலையில் மாற்றுப்பாதையில் ஜனநாயகப்பாஸிஸத் தலைமையொன்றை கட்டியெழுப்ப அவர்கள் முயற்சிக்காமல் இருந்துவிடப் போவதில்லை. அத்தகைய ஜனநாயகப் பாஸிஸ அமைப்பாக முப்பது வருடங்களின் முன்னர் தமிழர் விடுதலைக்கூட்டணி இருந்தது. அதன் தலைவர் அமிர்தலிங்கம் துப்பாக்கி ஏந்தாத பிரபாகரனாகவே இயங்கினார். இடையில் பிரபாகரன் துப்பாக்கியேந்திய அமிர்தலிங்கமாக இருந்தார். இன்று துப்பாக்கியில்லாத பிரபாகரனாக ஒரு தலைமையை  அவர்கள் தேடுகிறார்கள். அவர்களது பிரசாரத்தில் ‘தெளிவான ஒரு தலைமை’ என்பதூடாக தமிழர்கூட்டமைப்பை முனனணிக்கு கொண்டுவர முயலுதல் அத்தகைய தலைமையைத் தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கான முயற்சியே.

அவ்வாறு செயற்கையாக ஒரு தலைமையைத்தமிழ்மக்கள் கட்டமைப்பது என்பது வெறும் அரசியல் கழிசடைகளைப் பாராளுமன்றப் பிரதிநிதிகளாய்த் தெரிவு செய்யவே வழிகோலும். தமக்கான பிராந்தியத் தேவையையும் ஒட்டுமொத்தமான தமிழர் நலனையும் பேணத்தக்க நபரைத் தேர்வதைவிட்டு யாருக்கோ காட்டுகிற விநோதப்பொருளாக ‘ஒரே தலைமைக்கான’ சடம் ஒன்றை தமிழ் மக்கள் தெரிவுசெய்யவேண்டுமா? சென்ற தடைவ இவ்வாறு தமிழர் கூட்டமைப்பு என்ற உலகுக்குக் காட்டும் காட்சிப்பொருட்களைத் தெரிவுசெய்து என்ன நடந்தது? மக்கள் இக்கட்டான சூழலில் அவதிப்பட்டபோது எதுவும் பண்ணாமல் வெளிநாடுகளில் குதூகலித்துவிட்டுத் திரும்பிய பச்சோந்திகளைத்தான் ‘ஒரே தலைமை’ எனும் பெயரில் தெரிவு செய்யவேண்டுமா, இத்தகைய கழிசடைகளைத் தேரிவு செய்யும் பன்னாடைகளாக தமிழ் மக்கள் இருக்கப்போகின்றார்களா?

ம்ககள் இவ்வாறு  தெளிவற்ற அரசியல் போக்கில்சிக்குண்டு தவறான தேர்வுகள் வாயிலாக பேரினவாதத்துக்கு எதிரான எதிர்ப்பகை; காட்டும் நெருக்கடி ஏன் ஏற்படுகிறது? அரசியல் தெளிவுடன் இயங்குகிறவர்கள் மக்களைச் சரியான மார்க்கத்தில் அணிதிரட்ட ஏற்ற மார்க்கத்தில் செயற்;படாததன்பேறு இது. குறிப்பாக, மக்கள் விடுதலைக்காக இயங்கும் இடதுசாரிகள் இவ்விடயத்தில் செயலற்று முடங்கியுள்ளமை பெரும் பின்னடைவாயுள்ளது. முன்னரும் தேசிய இனப்பிரச்சனை – அதன் தீர்வுக்கான சுயநிர்ணய உரிமை என்பன குறித்து உரிய தருணத்தில் சரியான நிலைப்பாட்டை மேற்கொள்வதில் தாமதத்தைக் காடடிப் பாதகமான சூழல் அதிகரிக்க இடம்விட்டதவறு இடம்பெற்றது. இன்று இடர்ப்படும் மக்களுக்கு அவசியமான மார்க்கத்தைத் தெளிவாக முன்வைக்;காமல் பத்தோடு பதினொன்றாக இடதுசாரிகள் இயங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பேரினவாத சக்திகளுக்கு எதிரான பரந்துபட்ட ஐக்கியம் இன்று அவசியம். பேரினவாதத்துக்கு உரமூட்டுவதும் அதனால் போஷிக்கப்படுவதுமான தமிழினவாதத்தை முன்னெடுக்கும் த.வி.கூ, புலிகள் வழிவரும் தமிழர் கூட்டமைப்பு என்ற வலது சாரி அமைப்புக்கு எதிராக சாத்தியமான சக்திகள் அனதை;தையும் ஐக்கியப்படுத்த முயற்சித்திருக்க வேண்டும். அதற்குப் பெருந்தடையாக அமைந்தது ஈ.பி.டி.பி. இன் நிலைப்பாடு.

உள்ளுராட்சித்தேர்தலில் வெற்றிலைச்சின்னத்தில் ஈ.பி.டி.பி. முடங்கியதில் வாங்கிய அடியிலேயே தனித்து தேர்தலை முகங்கொள்வதன் அவசியம் உணரப்பட்டது. அரசதரப்பினரே இதனைக் கூறியுமிருந்தனர். இருந்தும், அவர்களும் உலகத்துக்கு காட்டவேண்டி இருக்கிறதே – பேரினவாத முன்னெடுப்புக்களை யாழ்ப்பாணமும் அங்கீகரித்திருப்பதை டக்ளஸின் வாக்குகளை வைத்தே பெறமுடியுமென்று கணக்குப்போடுகிறார்கள். டக்ளசைத் தனித்துப் போட்டியிட மறுக்கும் அதே அரசுதரப்பு பிள்ளையானின் புலிக்கட்சியை யாழ்ப்பாணத்திலும் களம் இறக்கியிருக்கிறது@ சுயமாய்ப்போட்டியிடும் தீவிரதமிழ்த் தேசியத்துக்கான புள்ளடியென்டால் பிள்ளையானுக்குப் போடட்டாம்!

ஈ.பி.டி.பி.யைத் தவிர்த்தால் ஏனைய தமிழ்த்தேசிய இடதுசாரிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியை இலங்கைத் தேசியத்தினுள் தமிழர்க்கான சுயநிர்ணயத்தை வலியுறுத்தும் இடதுசாரிகள் முன்னெடுத்திருக்கவேண்டும். இந்த ‘பெரிய’ இடதுசாரிகளுக்கு தமிழ்த்தேசியத்தினுள் இயங்கிய இடதுசாரிப் பிரவு கண்ணுக்குத் தெரிவதே இல்;லை@ தமிழ்த் தேசியத்தின் பேரால் புலியின் தவறுகளை உரியவகையில் வெளிப்படுத்தாத இவர்கள் தமிழ்த்தேசியத்தின் இடதுசாரிப் பிரிவின் தவறுகளை புதாகரப்படுத்துகிறார்கள்.இதற்கு தமிழ் மக்கள் தெளிவற்றவகையில் புலியைப் புனிதமாய்ப்பார்க்கும் அதே குருட்டுப்பார்வையில் இவர்களைத் துரோகிப்பட்டம் சூட்டி ஒதுக்கியமை பிரதான காரணமாகியுள்ளது. அவர்கிளடம் தவறுகள் இருந்தபோதிலும் புலியின் பாரட்டுதல் சரியான அரசியலாகாது. கடந்தகாலம் குறித்த முழுமையான விமரிசன விழிப்புணர்வை மக்கள் முன்வைத்து அரசியல்தெளிவை மக்களிடம் முன்னெடுப்பது மிகுந்த துணிச்சல் சார்ந்தவிடயம்.

அந்தப் பலம் மிகப் பெற்ற ஒரு அமைப்;பாக இடதுசாரிப் பிரிவு தமிழர் மத்தியில் இயங்க வக்கற்றுப் போனமையால் தமிழ்த்தேசிய இடதுசாரிச் சக்திகள் அனைத்தையும் ஐக்கியப்படுத்த முடியாமல் உள்ளது. நேர்மைத் திறன்மிக்க இயங்காற்றல் சாத்தியப்படும் பட்சத்தில் தமது புரட்சிகரப் புனிதம் குறித்த அலட்டல் இல்லாமல் இப்பணியை முன்னெடுத்திருக்க முடியும். நேர்மையினம் வளர்வதற்கு இடமளிக்கும் பட்சத்தில் தமது பலவினங்களை மறபை;பதற்கு ஏற்றதாய் அதீதபுரட்சிப் புனித வேசம் பூணுவதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டியேற்படும். தனித்தவிலாகப் பத்தோடு பதினோன்றாய்ப் புனிதப்புரட்சி இடதுசாரிகள் இந்த அர்த்தங்கெட்ட தேர்தல்களத்தில் முண்டியடிக்க நேர்ந்தமை இவ்வகையிலான வேகங்கட்ட முயல்வதையே காட்டுகிறது. உண்மையில் தமது கடந்தகாலப் புரட்சிகரப்பாரம்பரியத்தை இழந்துவிடாமல் தொடர முயல்வதாயின் அனைத்து இடதுசாரி உணர்வாரள்களையும் ஐக்கியப்படுத்துவதற்கு ஏற்ற துணிச்சலான வேலைத்திட்டத்தை இனியேனும் வகுத்திட முன்வரவேண்டும்.

இவ்வகையில் தமிழர் மத்தியிலான இடது சாரிகள் அனைவரையும் ஐக்கியப்படுத்தி  வலுப்பெறும் ஒரு அமைப்பு மட்டுமே சிங்களப் பேரினவாதத்தை விருத்திசெய்து அதனால் போசிக்கப்படும் தமிழினவாத மக்கள் விரோதத்துக்கு எதிரானதும் சம உரிமைகளைவென்றெடுப்பதூடாகத் தமது விடுதலைக்காகவும் போராடவல்ல சிங்கள இடது சாரி சக்திகளுடன் ஐக்கியப்பட முடியும். எம்மத்தியிலிருந்து தலைமையை அபகரித்த பாஸிஸ சக்தியின் பயங்கரவாதத்தைக் காட்டியபடியே கடந்தகாலத்தில சிங்கள மக்கள் மத்தியிலான இடது சாரிகளும் முற்போக்குவாதிகளும் அழிக்கப்பட்டார்கள். எம்மத்தியிலான ஜனநாயக – சமத்துவ சக்திகள் எழுச்சிபெற்று சிங்கள உழகை;கும் மக்களோடு ஐக்கியப்பட்டுப்போராட எத்தனிக்காதவரை இலங்கை முழுமையும் தொடர்ந்து அவலங்களையே வளர்த்துச்செல்வதாய் அமையும்.

ஏனைய இனங்களின் சம உரிமையை மறுக்கும் பேரினவாத முனைப்பினால் இன்று இலங்கை அரசு வேகமாக இராணுவமயப்பட்டு வருகிறது. அரசதரப்புக்கு சாதகமான தலைமை இராணுவத்தில் ஏற்படுத்தப்பட்டு ஐக்கியத்துக்குரிய தளபதிகள் நீக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நடவடிக்கை வெள்ளைச்சட்டை அரசியல் மயப்பட்ட இராணுவ ஆட்சி நடந்துகொண்டிருக்க வகைசெய்யும் ஏற்பாடு. ஏற்கனவே எண்பதாம் ஆண்டுகளிலிருந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம் தொடங்கிய நிர்வாகத்துறையில் இராணுவத்தினரை வெள்ளைச்சட்டைக்கு மாற்றி அமர்த்தும் கைங்கரியம் தொடர்ந்து வளர்ந்தபடியுள்ளது. முன்னாள் இராணுவத்தினர் அரசியலிலும் பல தளங்களில் நாயகர்களாகியுள்ளார்கள். அடுத்தகட்டமாய் நேரடி இராணுவ ஆட்சி அரசியல் மயப்பட்ட ஒரு வடிவமாற்றத்தைப்பெற ஏற்ற நடத்தைகளே இன்றைய அரசியலாக இயங்கியவாறுள்ளது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இத்தகைய போக்கை முறியடிக்க வேண்டும், ஜனநாயகம் மீட்கப்பட்டு குடும்ப ஆதிக்க அரசியலாயல்லாத நாகரிகத்துக்கு மாறுவதுபற்றி அக்கறைப்பட்டவர்கள் தமிழர் முஸ்லிம்கள் நாட்டுத்தலைமையைத் தீர்மானிக்க இடங்கொடுக்க முடியாது என முடிவெடுத்து ஜனநாயக விரோதம வலுப்பட்ட ஏற்ற முடிவுக்கு வழிவிட்டனர். அப்போது ஜனநாயக மீட்சிக்குரிய மாற்று அரசியலும் வெள்ளைச்சட்டையிடம் மாறி இராணுவத் தளபதியையே முன்னணிக்கு வரவகைசெய்வதாயிருந்தது. ஆக, அனைத்துப்பாதைகளும் இராணுவமயப்படும் திசை நோக்கியதாக இன்றைய இலங்கை அரசியல். மூன்று தசாப்தங்களின் இனவாத ஆயுத மோதல்களின் பரிணமிப்பு இது. இதனை முறியடிக்க ஏற்றதாக அனைத்து இனங்;;;;;கள் மத்தியிலான உழகை;கும் மக்கள் ஐக்கியப்படுவது இதுவானதல்ல.

இந்த ஐக்கியத்துக்கு விரோதமாக முன்னர் கொழும்புத் தமிழர் தலைமை தமிழ் மக்கள் மத்தியில் இனக்குரோதத்தை வளர்த்த வரலாற்றை அறிவோம். இன்று மேலைத்தேசங்களில் புலம்பெயர்ந்து வளவாழ்வு காணும் ஒரு பிரிவினர் தொடர்ந்தும் இலங்கைத்தமிழரை இனவாத சகதிக்குள் மூழ்கடித்து இலங்கை இராணுவமயப்படலுக்கு உதவுகிறவர்களாயுள்ளனர். புலம்பெயர் தமிழர்களில் உண்மையில் மக்கள் விடுதலையை நேசிக்கும் முற்போக்காளர்கள் இனவாதத் திசையிலான மேலைத்தேசப் புலம்பெயர் சிந்தனை உருவாக்கவாதிகளை முறியடிக்கும் செயற்பாடுகளை முன்னேடுப்பது அவசியமானதாகும்@ எமது மண்ணில் விடுதலைக்காகப் போராடும் மக்கள் தமது சொந்தப்பலத்தில் முன்னேற ஏற்றதாய் ஏனைய இனங்களுடன் கைகோர்ப்பதற்கு அதன்வாயிலாகப் புலம்பெயர்ந்தோர் உதவ முடியும்.

இராணுவ மயப்படும் இலங்கையின் பாஸிஸப்பரிணமிப்புகளை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு அனைத்து இனங்கள் மத்தியிலான முற்போக்கு சக்திகள் இனங்களிடையேயான ஐக்கியத்துக்காக வலுவாகக் குரல் கொடுக்கவேண்டிய கட்டாயம் இன்று வளர்ந்;து வருகிறது. இனப்பிளவுகளே நிதர்சனம் என்றவர் முனைப்புற்று வந்தபோது இவ்வாறு ஐக்கியம் பற்றிப்பேசுவது கேலிக்குரியதாக இருந்தது. இன்று அதில்லாமல் எதிர்காலம் இல்லை என்ற நிதர்சனம் மேற்கிளம்பியயுள்ளது. ஒற்றுமைப்பட வாய்ப்பில்லை எனுமாறு இனங்கள் மத்தியில் பகை வளர்க்கப்பட்டுள்ளது. பகைமறப்புக் காலச் செயற்பாடுகள் வாயிலாக ஒன்றுபட ஏற்ற வழிமுறைகள் தேடப்படவேண்டிய அவசியம் குறித்து ஒவ்வொரு இனங்கள் மத்தியிலுமான மக்கள் நலன் நாடும் சக்திகள் பேச முற்பட்டுள்ளார்கள்.

ஆம், முற்போக்கு சக்திகள் இனங்களிடையேயான ஐக்கியத்துக்கான குரலை இனியும் தயக்கத்துடன் முன்வைக்க அவசியமில்லை. மக்கள் மத்தியில் அரசியல்விழிப்புணர்வை விருத்தி செய்து அனைத்து இனங்களது சுயநிர்ணய உரிமைகள் பேணப்படும் வடிவங்களைக் கண்டடைவோம்! சம உரிமைகளுடன் அனைத்து இனங்களது ஐக்கியத்துக்கான குரலை புதிய மிடுக்குடன் இனி முன்;;;;வைத்தாக வேண்டும்.