Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மலையகத்திலும் காணி அபகரிப்பு!


மலையக மக்கள் "தேசமாக" வளர்வதை இல்லாதாக்கும் திட்மிட்ட நடவடிக்கை! 

பயன்படுத்தப்படாத காணிகள் என்று சொல்லி 25000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப்கபெற்று அவற்றை தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளுக்கு இரண்டு ஏக்கர்களாக பிரித்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. !

இந்த இளைஞர்களுக்கு இந்த காணிகளில் விவசாயம் செய்வதற்காக கடன் வழங்கவும்  காணிகளில் பயிரிட நாற்றுகளை  விதைகளை வழங்கவும், உரவகைகளை வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ளது. !  

அரசின் இந்நடவடிக்கையானது மலையகத்தில் உழைக்கும் மக்களின் இருப்பை இல்லாது ஒழிக்கும் இனவாத நோக்குடன் முன்னேடுக்கப்படும்  காணி சுவீகரிப்பு நடவடிக்கை என  ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட அதோடு ஒத்த கருத்துள்ள முற்போக்கு தோழமை கட்சி களும் வன்மையாகக் கண்டிக்கின்றன! அத்துடன் இந்நடவடிக்கைக்கு எதிராக ஐக்கியப்படக்கூடிய சகல சக்திகளையும் ஐக்கியப்படுத்தி, போராடவும் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது சமபந்தமாக இவ்வமைப்புக்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன… 

நிதி அமைச்சில் இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்ற இது சம்பந்தமான உயர்மட்ட கூட்டத்துக்கு அரசில் உள்ள மலையக தமிழ் அமைச்சர்கள் அழைக்கப்பட்டார்களா? 

தோட்டப்புறங்களிலும் காணியும், கடனும் பெறுவதற்கு தகுதிவாய்ந்த வேலையற்ற தமிழ் இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்பது அரசாங்க உயர்மட்டத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதா? 

இந்த காணிப்பகிர்வு - கடன் வழங்கல் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உடன்பாடு நிலவுகின்றதா? 

இதுபற்றி தாம் அறிந்துகொண்டுள்ள விபரங்களையும், தமது நிலைப்பாடுகளையும் அரசில் உள்ள மலையக கட்சிகள் மலையக இளைஞர்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க தயாரா? 

இந்த கேள்விகளுக்கான பதில்களை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். !

உண்மையில் அரசில் அங்கம் வகிக்கும் அரச எடுபிடிகள,; மலையக மக்களின் அபிலாசைகளை உள்வாங்கி அம்மக்fளுக்காக செயற்படுவார்களா?

மகிந்த அரசின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் சமகால வேலை சிறுபான்மை தேசிய இனங்களின் வாழ்வாதாரப் பிரதேசங்களை திட்டமிட்டு, சிதைப்பதாகும்!

கிட்லர் சொன்னான் "ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அவ்வினத்தின் மொழியை அழியென்று!"

ஆனால் எம்நாட்டின் "கிட்லருக்கும் கிட்லரான கிட்லர்"  மொழியுடன் சேர்த்து, சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதேசங்களையும் அல்லவா இல்லாதாக்க முற்பட்டுள்ளார்!

இதற்கு தமிழ்-சிங்கள-முஸ்லிம் மக்களின் முத்தரப்பு அரச எடுபிடிகளும் - அடிமை குடிமைகளும் தாராளமாகச் செயற்படுகின்றார்களே?...

இவர்களுக்கு தத்தம் மக்கள் தேசிய இனங்களாக வளரவும் கூடாது, தேசங்களாக மிளிரவும் கூடாது எனும் எண்ணப்பாட்டில் இருந்தே கருமங்கள் ஆற்றுகின்றார்கள்!

சமூக அசைவியக்க வரலாற்றில் ஒடுக்கலுக்கு ஆதரவாக, செயற்பட்ட அனைத்து துரோக சக்திகளுக்கு, வரலாறு எத்தண்டனையை கொடுத்ததோ, அத்தண்டனைகள்தான் இவர்களுக்கும்!