இது உழைப்பாளிகள் நாள்.
- Details
- Category: சிறி
-
30 Apr 2012
- Hits: 5463
மக்களை மயக்க
வெட்டரிவாளையும் சுத்தியலையும்
காட்டேரி கூடக் கையில் எடுக்கிறது
மேதின வாழ்த்துக்கு முண்டியடிக்கிறது
பாட்டாளிக் கொடியை பற்றி வருகிறது.
வெற்றியல்லவா இது நமக்கு
பற்றிய தீயின் வேகம்
முற்றிவிடாமல் மக்கள் முன்
வேடம் கட்டி வலம்வரும் நிலைக்கு
சுரண்டும் கூட்டம்கூட மேதினக்
கொண்டாட்டம்.
இது நமது நாள் நமது நாள்
அன்றும் இன்றும் நமது நாள்
உலகம் நிலைக்கும் வரைக்கும்
இது உழைப்பாளிகள் நாள்.
சுரண்டிக் கொழுக்கும் கரங்கள்
அறுத்துஇ வாழ்வின் மகிமையை
உழைக்கும் மக்களின் உரிமையை
நாட்ட நாமெலாம் கூடும் நாளிது மேநாள்.
--சிறி 01/05/2012