ஒன்றாகக் கரம் பிடிப்போம்!
- Details
- Category: சிறி
-
29 Mar 2012
- Hits: 5403
முத்து முத்துக் காலெடுத்து
முன்னவரே வாருமய்யா
அள்ளிப்பலிகொடுத்த
ஆற்றாத தேசமய்யா
அனுபவங்கள் சொல்லுகிற
வழிதெருவில் போவீரோ
சேற்றுக்கால் கழுவி
செப்பனிட வருவீரோ
காட்டில் விறகொடித்து
கடற்கரையில் கால் கழுவி
நாற்று நட்டெடுத்து
நாளாந்தம் பசிஉழலும்
வீரகத்தி வீரக்கொடி
வீட்டுக்கு விடுதலையா
நாட்டு முதுகெலும்பு
நாரி இடுப்பொடித்து
தோட்டக் கொழுந்தெடுத்து
வாட்டும் வறுமையிலே
வாடியொடுங்குமந்த
வாழ்க்கையதை மாற்றுகின்ற
ஊற்றாய் பிறப்பெடுப்போம்
உற்றவழி சேர
ஒன்றாகக் கரம் பிடிப்போம்!
-29/03/2012