Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

போராட்டம் பத்திரிகை (மாசி 2016) வெளிவந்து விட்டது!

இந்த பத்திரிகை கீழ் வரும் ஆக்கங்களை தாங்கி வெளிவந்துள்ளது.

1. புதிய அரசியலமைப்பில் இனிப்பு தடவிய விஷம்

2. அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!

3. ஐ.நா. சபையின் விசாரணை தமிழ்த் தேசியத்தின் ஒரு கானல்நீர்:

"இதற்கு நல்ல உதாரணம், மத்தியகிழக்கு நெருக்கடியாகும். 1948ல் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட நாள் முதல், பாலஸ்தீன்-இஸ்ரேல் மோதல் கடந்த 67 வருடங்களாக தொடருகிறது. இதுவரை ஐ.நா.பொதுச் சபையால் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் அமெரிக்காவின் “வீட்டோ” அதிகாரத்தினால் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளது. பல இலட்சம் பாலஸ்தீனியர்கள் கடந்த 67 வருடங்களாக பிறந்த மண்ணிலும் உலக நாடுகளிலும் அகதிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்."

4. கோத்தபாயவின் “வெள்ளைவான்" ஒப்புதல் வாக்குமூலமும் ரணில்-மைத்திரி அரசின் இலட்சணமும்:

"அரசியல் வேறுபாடுகளை முரண்பாடுகளை தீர்ப்பதற்காக அநுரா குமார திஸநாயக்கா நாடிய வழி, எப்படியான அரசியலை ஜே.வி.பி இன்று அவர் தலைமையில் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். குமாரின் கடத்தலுக்கு அநுரா குமார மீது பழிபோட்டு விட்டு வெள்ளைவான் தனக்கு கீழ் இயங்கிய ஒரு சட்டவிரோத இராணுவம் தான் என கோத்தபாய எந்தவித அச்சமும் இன்றி கூறியிருப்பதை இலகுவில் விட்டு விட முடியாது."

5. அடிமைத்தனமும் - கீழ்ப்படிதலும் மனித இயல்பா? (மார்க்சியம் தொடர் இல:24)

6. அமெரிக்காவும், கத்தோலிக்க சபையும் சேர்ந்து காப்பாற்றிய இனப்படுகொலையாளி!:

"கத்தோலிக்க சபை, அன்டே பாவிலிக் ஒரு கத்தோலிக்கன் என்பதற்காக மட்டும் அவனைக் காப்பாற்றவில்லை. யூகோஸ்லாவியாவில் உதயமாகிய சமதர்ம அரசும், மக்களும் கத்தோலிக்க சபையை தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கடவுள், பாவம், புண்ணியம் என்று பித்தலாட்டம் பண்ணி மக்களை ஏமாற்றி அதிகாரத்தையும், சொத்துக்களையும் உலகம் முழுவதும் சேர்த்துக் கொண்டவர்களிற்கு பொதுவுடமைவாதிகளால் தங்களது ஆணிவேர் அறுக்கப்படுவதிலிருந்து தப்பிக் கொள்வதற்காக இத்தாலியின் முசோலினி, ஸ்பெயினின் பிராங்கோ, குரோசியாவின் அன்டே பாவிலிக் போன்ற படுகொலையாளிகளின் பக்கம் நின்றார்கள்."

7. அரசுகள் மக்களிற்காக என்று எந்த மடையன் சொன்னான்!!

8. இது தான் நியதியா.. இது தான் வாழ்க்கையா..?

9. தோழர் குமார் குணரத்தினத்தின் பிரஜாவுரிமைக் கோரிக்கை

10. இனவாதிகளின் சமரசத்திற்கு இரையாகும் தமிழ் கைதிகள்!

11. வோக்ஸ்வாகனின் (ஏழடமளறயபநn) உலகப் பயங்கரவாதத்தைக் கண்டுகொள்ளாத முதலாளித்துவ “ஜனநாயகம்”

12. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லாமே மக்களின் எதிரிக்கட்சிகள் என்பது தான் காலங்காலமான வரலாறு:

"தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு வலதுசாரிக் கட்சி என்பதற்கு அதன் அரசியல் அறிக்கையை வாசிக்க தேவையில்லை. அதன் பொருளாதாரக் கொள்கைகள் என்ன என்று தேடிப் பார்க்க தேவையில்லை. அவர்களின் எஜமானர்கள் யாரென்று பார்த்தால் போதும். “இந்தியா இல்லை என்றால் என்றால் எங்களால் போரை வென்றிருக்க முடியாது” என்று கோத்தபாயா ராஜபக்ச நற்சான்றிதழ் கொடுத்த பாரத தேசம் தான் கூட்டமைப்பின் கூட்டாளிகள்."

13. இனவாதத் தணலில் குளிர்காயும் நல்லிணக்கம்:

"இந்த தமிழ் தேசியவாதிகள் இன்று வரை சிங்கள இனவாதிகளுடன்தான் இனப்பிரச்சனை பற்றி பேசி வருகிறார்களேயொழிய தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் ஒருவரையொருவர் சந்திக்க வைக்கவோ, அன்றி பிரச்சனைக்கான அடிப்படை யாது என்பதை பரஸ்பரம் இரு பகுதி மக்களுக்கும் புரிய வைக்கவோ, புரிய வைக்க நினைத்ததுவோ கூட கிடையாது. இந்த இடத்தில்தான் தமிழ் பேசும் மக்களாகிய நாம் நமது எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது."

14. கூட்டுக்கொள்ளைக்கு கொழும்பில் திட்டம்:

"இன்று மீளவும் உலகத்தை கொள்ளையிட நவதாராளவாத பொருளாதார கொள்கையுடன், எலும்புத் துண்டுகளுக்கு ஆசைப்படும் உள்ளுர் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து பொருளாதார உதவி, அபிவிருத்தி என்ற பெயரில் செல்வங்கள், வளங்கள், மனித உழைப்பினை கொள்ளயிட பல்வேறு திட்டங்கள் ஆலோசனைகளை முன்வைத்து நாக்கை தொங்க விட்ட வண்ணம் வலம் வருகின்றனர்."

15. ஈழத்து முற்போக்குக் கவிஞர்கள்

16. எம் உரிமைகளைப் போராடி வெல்வோம்!