Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜெனீவாவில்... அமெரிக்காவும் இந்தியாவும் மகிந்த-சர்வாதிகாரத்திற்கு "டபிள் புறமோசன்" கொடுத்துள்ளன!

கடந்த இருவாரங்களிலான அமெரிக்காவின்--ஜெனீவாப் பரபரப்பின் தாக்கம் இன்னும் முடிவடையவில்லை!

தமிழ் மக்கள் தரப்பில் சந்தோச மேலீட்டிலான  வாழ்த்துக்கள், வரவேற்புக்கள், இனிப்பு பரிமாற்றங்கள் முதல் பட்டாசு கொழுத்தல்வரை தொடர்கிறது. சிங்கள மக்கள் மத்தியில் ஓருவித அமெரிக்க-இந்திய எதிர்ப்புணர்வு மேலோங்கியுள்ளது.

உண்மையில் ஜெனீவாவில் நடந்தென்ன என்பது பற்றிய புரிதல் இருபக்கங்களிலும் அரிதாகவே உள்ளது. ஜெனீவாப் புளகாங்கிதத்தால்,  ஜெயலலிதா மக்மோகன் சிங்கை வாழ்த்த, கருணாநிதியும் நான் தம்பி பிரபாகரனை அறியாதவனா? எனது (இன்றையஒரு நாள்) தாகமும் தமிழ்ஈழம் தானே! என்றுள்ளார்.

இதற்கிடையில் அப்பாடா!.. இந்தியா என்னதான் செய்தாலும், கடைசி நேரத்திலை மகிந்தாவை கைவிட்டுத்தான் போட்டுதென்று தமிழ்த்தேசியர்கள் மத்தியில் ஓர் நின்மதிப் பெருமூச்சு!

இதற்கு தென்பு கொடுக்கும் வகையில் "நாம் தமிழ் மக்களுக்காகத்தான்" அமெரிக்காவை ஆதரித்தோம் என இந்தியப் பிரதமரின் அறிவிப்பு. உண்மையில் ஜெனீவாவில் என்தான் நடந்தது!

அமெரிக்க அறிக்கையும், இந்தியத் திருத்தமும்!

ஜெனீவா அமர்விற்காக, அமெரிக்கா கஸ்டப்பட்டு ஓர் அறிக்கையைத தயாரித்தது.
அவ்றிக்கையில்:

"சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையிட்டு பக்கசார்பற்ற விசாரணை  மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல்,  போன்ற இன்னம் பலவற்றில்…சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதை, இத்தால் சகலரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், இவ்வேண்டுகோளை இலங்கை அரசை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுவதுடன. மேற்சொன்ன  திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுகின்றோம் எனக் கோரியது".

இக்கோரலில்.. இந்தியா  இலங்கை அரசாங்கத்தை "இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன்" எனும் வேண்டுகோளை "இலங்கை அரசாங்கத்துடன் ஆலோசித்தும், இசைவு கண்டும்" என மாற்றும்படி கேட்க, அமெரிக்காவும்  உங்கள் சித்தப்படியே ஆகட்டும் ("எப்பொழுதும் எங்கள்… தமிழ்மக்கள் -மரண(நேர)த்திலும்" வேண்டிக்கொள்கின்றோம்) ஆமென் யேசுவே! எனும் ஆமோதிப்புடன் மாற்றத்தையும் செய்தது!

மகிந்த ராஐபக்ச இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி. இலங்கையில் அரசியலில் அவரின்றி அணுவும் அசையாது! இந்தியாவின் துணை கொண்டு மாற்றப்பட்ட இவ்வசன அமைப்பு மாற்றத்தால், மகிந்தாவின் நிறைவேற்று அதிகாரத்திற்கு "டபிள் புறமோசன்" கொடுக்கப்பட்டுள்ளது!

இதுவரையில் மகிந்தா தான் நினைத்ததை செய்யும் அதிகாரம் இலங்கையின் தேசிய மட்டத்திலேயே இருந்தது. இப்போ அமெரிக்காவும்-இந்தியாவும் சேர்ந்து சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தியுள்ளார்கள்.

மனித உரிமை மாநாடு முடிந்த கையுடன் அமெரிக்கா இன்று இலங்கை நோக்கி அவசர வேண்டுகோள் ஒன்றை விட்டுள்ளது:

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் அமுல்படுத்த வேண்டும்: அமெரிக்கா அழுத்தம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக  கொண்டு வந்த தீர்மானம் வெற்றிபெற்ற கையுடன், பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.


அமெரிக்காவின் அழுத்தத்திற்கும் வலியுறுத்தலிற்கும் "எமக்கிப்போ உதில் இசைவில்லை ஆலோசிக்கலாம்" என இலங்கை வழமைகொண்டு சொன்னதைத்தான் சொல்லும்! சொல்லவும் போகின்றது! இதில் அமெரிக்கா ஜெனீவாவிற்கூடாக பொல்லைக் கொடுத்து, மகிந்தாவிடம் அடிவாங்கும் நிலையிலேயே உள்ளது.

ஜெனீவாத் தீர்மானத்திற்கு ஊடாக கோபம், சந்தோசம், தற்திருப்தியில் உள்ளவர்கள் தம் தற்காலிக உணர்வுகளில் இருந்து விடுபட்டு கொஞ்மாவது யதார்த்த நிலைமைகளை நோக்க வேண்டும்!

ஜெனீவாவின் இந்திய நிலைப்பாடும்—திருத்தமும்... இலங்கை அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான தொடர் இனவாத நடவடிக்கைகளுக்கான உதவுதலே தவிர, வேறொன்றுமல்ல. அதுவும் எதிர்காலத்தில் அமெரிக்காவின் பகிரங்க ஒப்புதலுடன்
நடைபெறவுள்ளது!

"ஏதோ தேர்தல் களம் போன்று, பெரும்பாடுபட்டு ஐ.நா.சபையில் வென்றுள்ள அமெரிக்கா, முள்ளிவாய்க்காலில் இம்முயற்சி எடுத்திருந்தால், "எத்னைகளை தவிர்திருக்கலாம்!"   இது ஜெனீவாத் தீர்மானம் பற்றிய ஓர் யாழ் தமிழ்க்குடிமகனின் அபிப்பிராயம்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றியும்-இந்திய வல்லாதிக்கம் பற்றியும் தமிழ் மக்கள் நிறைய கற்றுள்ளார்கள். அவர்களின் கற்றல், புரிந்துணர்தல்கள், அபிலாசைகளுக்கூடாக, நாம் அவர்களுக்கு அரசியல் செய்வோம்! ஏகாதிபத்தியங்களால் மக்களுக்கு ஆவது ஒன்றுமில்லை என்பதை உணராதவர்களுக்கும் உணரவைப்போம்!

24/03/2012