Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தனியாருக்கான ஓய்வூதியம்: இலங்கை அரசும் உலக வங்கியும் சேர்ந்து நடத்தும் திருட்டு

அனைவருக்குமான ஓய்வூதியத்தை மறுத்தும், ஆயுள் பூராவுமான ஓய்வூதியத்தை மறுத்தும், இறந்தால் குடும்ப உறுப்பினர் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற முடியாதவாறு மறுத்தும் ஒரு ஓய்வூதியம். இப்படி தனியார் ஓய்வூதிய திட்டத்தின் பெயரில் அவர்கள் கொடுக்க முனைவது, பிச்சைக்காசுதான். இந்த பிச்சைக் காசைக் கொடுக்க, அரசு தன் நிதி எதையும் கொண்டு முன்னெடுக்கவில்லை. மாறாக ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் சிறுகசிறுகச் சேர்த்த பணத்தை, அரசு தனதாக்கி அதைக்கொண்டு பிச்சை போடும் திட்டத்தைத்தான் ஓய்வூதியமாக அரசு அறிவிக்கின்றது. உலக வங்கியின் உத்தரவுக்கு அமைவாகத்தான், இதையும் கூட முன்னெடுக்கின்றது.

Read more ...

தமிழ் மக்களை அரசியல் அநாதையாக்கும் தமிழ் பாராளுமன்றவாதிகள் ...!

இலங்கையில் ஒரேயொரு தேசிய இனமே உண்டு என்று கூறி, ஒடுக்கும் பேரினவாதம் தான், தமிழினவாதத்தை தொடர்ந்து உருவாக்கின்றது. தமிழ் பாராளுமன்றவாதிகளோ, இதை குறுகிய தமிழினவாதமாக மாற்றிவிடுகின்றனர்.

Read more ...

இராணுவ ஆட்சிக்கான முன் தயாரிப்புகள்..! – (பகுதி4- இறுதிப்பாகம் )

இலங்கை மக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான புதிய இராணுவ முகாங்கள்...

மக்களைக் கண்டு அஞ்சும் மகிந்த அரசு, இராணுவத்தை பலப்படுத்தி நாட்டை இராணுவ மயமாக்குகின்றது. நாடு முழுக்க ஏற்கனவே இராணுவ மயமாக்கப்பட்டுள்ள நிலையில், புதியதாக நூற்றுக்கணக்கான புதிய இராணுவ முகாங்களை நிறுவவுள்ளதாக மகிந்தா குடும்பம் அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கிலோ கெடுபிடியான இராணுவ ஆட்சி தான் ஏற்கனவே நடக்கின்றது. இராணுவத் தலையீடு இல்லாத சிவில் சமூக நிகழ்வுகள் அங்கு கிடையாது. இதை மீறி நடந்தால் அதை சட்டவிரோத செயலாகவும், இராணுவத்துக்கு எதிரான சதியாகவும் கூறி, அதற்கு எதிராக இராணுவத்தைக் கொண்டு கெடுபிடிகளையும் ஒடுக்குமுறைகளையும் ஏவுகின்றது.

வடக்கு நோக்கி செல்லும் பெரும் வீதிகளில் உள்ள தேநீர் கடைகளைக் கூட மக்களிடம் விட்டுவைக்காது, அதை இராணுவம் தான் நடத்துகின்றது. வடக்குக்கிழக்கில் இராணுவம் தலையிடாத எதுவும் கிடையாது. புத்தர் சிலையை ஆங்காங்கே நிறுவுவது, வடக்கு கிழக்கு மக்களின் ஆதி வரலாற்றை மாற்றி எழுதுவது என்று, எங்கும் இராணுவம் தன் மூக்கை நுழைத்து வருகின்றது.

Read more ...

நடையண்ணை பறைஞ்சா – கதை கேட்டவர் முத்தையா (பாகம்: 2)


அண்ணை கேக்கிறன் எண்டு குறை நினையாதையுங்கோ. ஏனண்ணை கொஞ்சம் முகம் வாட்டமாய் சோந்துபோய் வாறியள்.

எனக்கு வாற விசருக்கு நீயும் பத்தாக்குறைக்கு என்னிட்டை வாங்கிக் கட்டப்போறாய்.

அப்ப நான் கேட்டது சரியாப் போச்சு ஏதோ கொதிப்பில தான் வீட்டிலயிருந்து நடையண்ணை நடையைக் கட்டியிருக்கிறியள். என்ன ஏதும் விசயம் பாரதூரமே.

சோத்துக்கு வழியில்லாமப் பண்ணியிட்டாங்களடா என்னை, என்ரை மனிசியும் பிள்ளையளும்.அவங்கள் இண்டைக்கு சமைக்கேல்ல.

ஏன் என்ன? வீட்டில நீங்கள் ஏதாவது நெருப்பெடுத்திருப்பியள் மனுசி சமையல்ல ஸ்ரைக் அடிச்சிருப்பா. உங்களுக்கு இப்ப வயிறு பசியில காந்துது அதுதானே விசயம்.

நிப்பாட்டு. நீ அதுக்குள்ள உன்ர கற்பனையை கன்னா பின்னா எண்டு ஓடவிடாதை. அவங்கள் இண்டைக்கு வீட்டில ஏதோ பாபகியூ எண்ட கண்டறியாத ஒண்டை செய்து போட்டு வெந்ததும் வேகாததுமா இறைச்சியை வாட்டி எடுத்து திண்டாங்கள். நாசமாப் போக. எனக்கு ஒரு பருக்கை சோறில்லாமல் தலை சுத்துதடா தம்பி.

Read more ...

இராணுவ ஆட்சிக்கான முன் தயாரிப்புகள்..! – (பகுதி3)


மாணவர் - ஆசிரியருக்கான கட்டாய இராணுவப் பயிற்சி இராணுவ ஆட்சிக்கான முன் தயாரிப்பாகும்...

மகிந்தா குடும்பம் வடக்குக் கிழக்கில் திணித்துள்ள இராணுவ ஆட்சியை, இலங்கை முழுக்க நடைமுறையாக்கும் படிக்கல் தான் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டாய இராணுவப் பயிற்சியாகும். வடக்கு கிழக்கு உற்பத்திப் பொருட்களை தன் இராணுவ ஆட்சி மூலம் மலிவு விலையில் வாங்கி, அதை மலிவாக சிங்கள மக்களுக்கு விற்றதன் மூலம், முதலில் இலங்கையில் இராணுவ ஆட்சியின் அவசியத்தை புரியவைக்க முனைந்த இந்த பேரினவாத அரசுதான், இன்று கட்டாய இராணுவப் பயிற்சியை மாணவர்களுக்கு திணித்த அரசு, அடுத்து அதை ஆசிரியர்களுக்கு திணிக்கவுள்ளது. மகிந்த முன்தள்ளும் பாசிச சிந்தனையின் மகத்துவம் இதுதான்.

நாட்டை இனி மகிந்த குடும்பம் தான் பரம்பரை பரம்பரையாக ஆளவேண்டும். இதுதான் மகிந்த குடும்பத்தின் சிந்தனையாகும். மன்னர்கள் போல் தாமும் பரம்பரை பரம்பரையாக ஆட்சி அதிகாரத்தில் வாழ வேண்டும், இதனால் மன்னர்கள் உயிர்ப்பிக்கப்படுகின்றனர். வரலாற்றுப் புரட்டுகள் திணிக்கப்படுகின்றது. மன்னர்களை பேரினவாதத்தின் அடையாளமாகக் காட்டி, தங்கள் பேரினவாத பாசிச ஆட்சியை அதன் தொடர்ச்சியாககாட்டி அதைத் திணிக்க முனைகின்றனர்.

Read more ...