Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஸ்ரீதுங்கவும் - விக்கிரமபாகுவும் விலைபோவார்களா??!

நேற்றைய தினம் (18.12.2015) அன்று இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழில் தமது கட்சியின், ஜனாதிபத் தேர்தல் பற்றிய நிலைப்பாடு தொடர்பாக ஒரு ஊடக சந்திப்பை, யாழ். பிரஸ் கிளப்பில் நடத்தினார். அவர், தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பதைத் தவிர்க்க வேண்டும். மஹிந்த என்ன மைத்ரி என்ன - இருவரும் ஒரே கொள்கை உடையவர்கள். இனவாதம் கொண்ட அரசியல்வாதிகள, தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வையும் தரமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

அப்போ, ஒரு ஊடகவியலாளர், ஸ்ரீதுங்க ஜயசூரிய மற்றும் நவ சம சமாஜக் கட்சி மகேந்திரனுக்கு (விக்கிரமபாகுவின் எச்ச சொச்சமாகவுள்ள NSSP) ஏன் தமிழ் மக்கள் ஆதரவு அழிக்க கூடாது? அவர்கள் தமிழர்களின் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் தானே? என்ற கேள்வியைத் தொடுத்தார். அதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்... "விக்கிரமபாகுவை தனிபட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் அவருடன் நல்ல உறவு உள்ளது. ஆனால், அவர் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கொழும்பு தமிழ் சங்கத்தில் நடந்த கூட்டத்தில், தமது வேட்பாளரைக் கூட ஆதரித்துப் பேசாமல் மைத்திரி பாலவை ஆதரிக்க வேண்டும் என்று கூறினார்" ..........

தொடர்ந்து ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம். "...... ஸ்ரீதுங்க ஜயசூரிய என்னை யாழில் வந்து சந்தித்தார். அவர்- off the record- தேர்தலில் இறுதி கட்டத்தில் தாம், போட்டியிலிருந்து விலகப்போவதாகவும், அதன் பின் முக்கிய இருவரில் ஒருவரை ஆதரிக்கப் போவதாகவும் கூறினார்..."

இவர்களை ஆதரிப்பதுவும் மஹிந்தவை ஆதரித்ததாகவே முடியும் என்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இது பற்றிய ஒலிப்பதிவுடன் கூடிய படங்கள் நேற்று "பதிவு" என்ற இணையத்தினால் வெளியிடப்பட்டது. (இணைப்பு கீழே உள்ளது . இதில் 43:00 வது நிமிடத்திலிருந்து கேட்கவும். (https://soundcloud.com/pathivucom/tnpf-re-presidential-election )

இதில் ஸ்ரீதுங்க ஜயசூரிய "off the record- தேர்தலில் இறுதி கட்டத்தில் தாம், போட்டியிலிருந்து விலகப்போவதாகவும், அதன்பின் முக்கிய இருவரில் ஒருவரை ஆதரிக்கப் போவதாகவும் கூறினார்" என்று கஜேந்திரகுமார் கூறும் பகுதி "பதிவு" இணையத்தால் YOUTUBE இல் வெளியிட்ட இணைப்பில் வெளிடப்பட்டிருந்தது. அந்த இணைப்பு இப்போ பார்க்க முடியாதபடி செய்யப்பட்டுள்ளது ( https://www.youtube.com/watch?v=asmOoNH4ADw#t=103 )

இவர்கள் இருவரும் இடதுசாரிய முன்னணியில் இணைந்து போட்டியிடிருந்தால் வரவேற்கதக்கது தான். ஆனால், அவர்கள் தனியாகப் போட்டியிடுகின்றனர். தோழமை அடிப்படையில் அவர்களின் அம்முடிவும் வரவேற்கத்தக்கதே. ஆனால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவது உண்மையானால், அதனால் இடதுசாரியத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுவரும் நம்பிக்கையை தகற்பதிலேயே போய் முடியும்.