Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏதோ Aesthetic அல்லது அழகியல் பற்றி விவாதம் நடக்குதாம்.  அதன் அடிப்படை என்ன ?

தமிழ் மொழியை எடுத்துக் கொண்டால் அதற்கு, மண் தோன்றிக் கல் தோன்றாக் காலத்திலிருந்தே கலை - இலக்கிய  வரலாறு உள்ளதென கூறப்படுகிறது. ஆனாலும், "பல்லாயிர " வரலாற்றுக்கு வெளியில் அம்  மொழிக்கு Aesthetic -அழகியல் பற்றிய தத்துவப் பார்வை-ஆய்வுமுறை இருந்ததா என்றால் ....... எனக்குப் பதில் தெரியாது.

வளர்ச்சியடைந்த  மொழிகள் எல்லாவற்றினதும்  கலை -இலக்கிய உருவாக்கமென்பது, பெரும்பாலும் ஐரோப்பிய கலை -இலக்கிய  கோட்பாடுகளின் அடிப்படையையே இன்று அடித்தளமாகக் கொண்டவை.

ஆதலால், இன்றய தமிழின்  Aesthetic -அழகியல் பற்றிய கோட்ப்பாடுகளும் ஐரோப்பிய மெய்யியல் சார்ந்தவையாகவே கருதுகிறேன்.

Aesthetic (-அழகியல் ) என்ற ஆங்கில வார்த்தையின் தாய் வார்த்தை கிரேக்க மொழியிலான  aesthetica என்பதாகும். இதன் அர்த்தம், புலன்களினூடு வெளிப்படும் அறிவு என மொழிபெயர்க்கலாம்.

கலை -இலக்கியம் உருவாக்கப்படும் எந்த மொழியாக இருப்பினும், அம் மொழி பேசப்படும் -உபயோகிக்கப்படும் சமூகம் சார்ந்த ஆதிக்க சிந்தையே - அச் சமுகத்தில் உருவாகும் கலை -இலக்கியத்தின் உள்ளடக்கத்தை, அழகியலை தீர்மானிக்கிறது. ஆதிக்க சிந்தனையின் அடித்தளமானது அரசியல்-பொருளாதாரத்தின் வெளிப்பாடு-உற்பத்திப்பொருள்.

ஒரு சமூகத்தின் அரசியற்-சமூக- பெருளாதா வாழ்வில், ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறை, ஒதுக்குமுறை, சுரண்டல் இருப்பின் கலை -இலக்கியம் ஏதோ ஒருவிதத்தில், இவற்றுக்கு சார்பாகவோ அல்லது எதிராகவோ தான் தனது உள்ளடக்கத்தை கட்டமைக்கிறது. அந்த உள்ளடக்கத்தை கலை -இலக்கிய "வெளிப்பாடாக " உருவாக்கும் போது உபயோகிக்கப்படும் முறை (method) மற்றும் அவ் உள்ளடக்கத்தைப் பற்றிய எண்ணம் /கருத்து (perception) என்பவையே aesthetic(அழகியல்)எனப்படும்.

இவ்வாறு சுருங்கக்  கூறுவது, கிரேக்கத்தின் பிளாட்டோ தொடக்கம் இன்று ஆதிக்கம் செலுத்தும் BenedettoCroce மற்றும்  ஜூலியா கிறிஸ்டெவா வரையான சிந்தனாவாதிகள், விமர்சகர்கள்  Aesthetic(-அழகியல்)  பற்றிய பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலேயாகும்.

அதேவேளை, Aesthetic (-அழகியல்) பற்றி விரிவாக ஆராய்வோமானால் இன்று பல பாரம்பரியங்கள் - சிந்தனைகள் -கோட்ப்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.

தற்போது கலை -இலக்கிய உலகில் பின் வரும் "பாரம்பரியங்கள் "-கோட்ப்பாடுகள் கோலோச்சுகின்றன : 

* The psychological aesthetics- உளவியல் சார் அழகியல்  (Fechner, Brentano) 

* Pragmatic-character theoretical ("semiological") aesthetics-நடைமுறை -குணவியல் கோட்ப்பாடு  (Peirce, Morris, Langer)

* Phenomenological aesthetics (Scheler, Ingarden, Heidegger)

* Existentialist aesthetics -இருத்தலியல் அழகியல் (Sartre, Merleau-Ponty); 

 *The Frankfurt School's aesthetics (Adorno).

இப்போ என் இரண்டு  கேள்விக்கு  யாராவது பதில் சொல்ல முடியுமா ???

1.எனக்கு தெரிய மேலே நான் கூறியுள்ளவை தான் அழகியல் பற்றிய விவாதத்தின் அடிப்டைக் கோட்ப்பாடுகளாக இருக்க முடியும். தற்போது அழகியல் பற்றி ஈழ தமிழ் புரவலர்கள் இடையே நடக்கும் விவாதத்தின் அடிப்படைகள் எவை ??? !

2. நான் மேலே கூறியது "கலை -இலக்கியம் உருவாக்கப்படும் எந்த மொழியாக இருப்பினும், அம் மொழி பேசப்படும் -உபயோகிக்கப்படும் சமூகம் சார்ந்த ஆதிக்க சிந்தையே - அச் சமுகத்தில் உருவாகும் கலை -இலக்கியத்தின் உள்ளடக்கத்தை , அழகியலை தீர்மானிக்கிறது. " இதன் அடிப்படையில் ஈழத்து இலக்கியம் என்று சொல்லப்படுவதன் சிந்தனை மரபு-அதன் ஆதிக்க சிந்தனை எது ????