Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கோத்தபாயவின் கொலைவெறிப் பசி இன்னும் அடங்கவில்லை!

யுத்தத்தில் சரணடைந்த புலிகளை கொன்றிருந்தால் இந்தநிலை வந்திருக்குமா? கோத்தபாய ராஜபக்ச சீற்றம்! கோத்தபாயவிற்கு கொலை வெறிப்பசி இன்னும் அடங்கவில்லை!

இலங்கை அரசின் கொலை வெறிப்பசி இன்னும் அடங்கவில்லை. இதை சிறையில் உள்ள அப்பாவிச் சிறைக்கைதிகளுக்கு ஊடாக அரங்கேற்றியுள்ளது. இலங்கையின் வடக்கே வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார். நிமலரூபன் சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்த பின்னரே அவரது உடல் றாகமை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது தற்போது தமிழ் அரசியல் கைதிகளில் 22 பேர் மகர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்களில் ஆறுபேர் மகர சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஒருவர் கோமா நிலையில் இருக்கின்றார். ஏனைய மூவரில் ஒருவருக்கு இரண்டு கால்களும் அடித்து முறிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றொருவருக்கு ஒரு கால் அடித்து முறிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவருடைய காலில் துப்பாக்கிச் சூட்டுக்காயம் காணப்பட்டதாகவும் அவர்களது நிலைமை மோசமானதாக இருப்பதாகவும் அவர்களைப் பார்வையிட்ட   யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

கோத்தபாயவின் கொலைவெறிப் பசி இன்னும் அடங்கவில்லை!

 

வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடையும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு விடுக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ... ..மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவைக் கண்டித்துள்ளதாக 'லங்கா நியூஸ்வெப்' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது

 

நிமல் ரூபன் இருதய நோயின் காரணமாகவே உயிரிழந்தார்!

தமிழ் அரசியல் கைதியான நிமல் ரூபன் இருதய நோயின் காரணமாகவே உயிரிழந்தார் என சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

நிமல ரூபன் என்ற கைதி இருதய நோயால் பாதிக்கப்பட்டவர். 29 ஆம் திகதி மஹர சிறையிலிருந்து ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெறும் போதே உயிரிழந்துள்ளார். எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படவில்லை. நோயின் காரணமாகவே இந்நிலை உருவானது.

 

செய்தது பச்சைப் படுகொலை சொல்வது காதில் பூ வைக்கும் காரணங்கள்! சிறைச்சாலை மந்திரி இருதய நோய் என சளாப்ப.. இல்லை இவர்கள் அப்பவே கொல்லப்படவேண்டியவர்கள்  இப்பவே கொல்கின்றோம் என்கின்றார் கோத்தபாய!

அவர் தன் இனவாத-இனவெறி நிகழ்ச்சிநிரலை வஞ்சகம்-சூதுவாதின்றிச்சொல்கின்றார்! இதுவல்ல இன்னும் இருக்கு பாருங்கோ என்கின்றார்!