Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

கேமமாலினி போராட்ட பந்தலில் கருத்து

இப்போராட்டத்தின் கோரிக்கைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்!-கேமமாலினி அபேரத்ன

(අද දින යාපනය දිස්ත්‍රික්කයේ පුත්තූර් හි පවුල් 750 කට අදික ප්‍රමාණයක් පීඩාවට පත් කරමින් මතු වී ඇති සොහොන් බිමක ප්‍රශ්නය පදනම් කරගනිමින් එහි ජනතාව විසින් ආරම්බ කර තිබෙන උපවාස ක්‍රියාමාර්ගයට සහය පල කරන නිදහස උදෙසා කාන්තා ව්‍යාපාරය ....)

பெண்கள் விடுதலை இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் கேமமாலினி அபேரத்ன, புத்தூரில் சுடலைக்கு எதிராகப்போராடும் மக்களைச் சந்தித்து அவர்களின் போராட்டத்துக்கு இயக்கத்தின் சார்பில் ஆதரவை தெரிவித்தார். கேமமாலினி போராட்ட பந்தலில் கருத்து தெரிவிக்கையில் : 

 

"போர் உட்பட எல்லாவகை ஒடுக்குமுறைகளும் பெண்களையும் குழந்தைகளையுமே அதிகமாகப் பாதிக்கின்றது. இந்தவகையில், இந்த புத்தூர் மேற்கு கலைமதி பிரதேச குழந்தைகள் பாடசாலைக்கு 5 மீட்டர்களுக்கு அருகில் மயானம் அமைந்துள்ளது. குடியிருப்பு வீடுகளும் அதே தூரத்திலேயே அமைந்துள்ளன. அத்துடன், இந்த மயானத்தைச் சுற்றியுள்ள குடும்பங்கள் பல போரினால் பாதிக்கப்பட்டு தற்போது இங்கு தகரங்களால் கூரை வேயப்பட்ட சிறு குடிசைகளிலேயே வாழுகின்றனர். 

மயானத்தை ஆதிக்க சக்திகள் இப்போதும் உபயோகிப்பதனால் இப்பகுதி பெண்களும் சிறுவர்களும் மற்றும் மக்களும் உடல்- உள ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். மாற்று மயானம் வெகு சிறு தூரத்திலேயே இருந்தும் ஏன் இந்த ஆதிக்கவாதிகள்- மக்கள் குடியிருப்புக்கு நடுவில் இருக்கும் மயானத்தை உபயோகப்படுத்துவதிலேயே கண்ணாயிருக்கின்றனர் ??! மாகாணசபையின் சுகாதார அமைச்சரும், பிரதேசசபையும் ஏன் இந்த மக்களின் அவல வாழ் நிலையை கண்டும் காணாமல் இகின்றனர்?

இப்போராட்டத்தின் கோரிக்கைகள் உடனடியாக உடனடியாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் ! . என்றார்.