Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

குமார் குணரத்தினத்திற்கு மீள குடியுரிமையை வழங்கியமை அரசியல் உரிமைகளுக்கான மக்கள் போராட்டத்தின் முதல் வெற்றிப் படி!

குமார் குணரத்தினம் தனது குடியுரிமையினை மீளக்கோரி விண்ணப்பித்த விண்ணப்பதை ஏற்று, அவருக்கு இலங்கை பிரஜாவுரிமையினை மீள வழங்கியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜயாகொட இன்று ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் அவருக்கான பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் முன்னிலை சோசலிசக் கட்சியின் 2வது தேசிய மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அரசாங்கத்தின் இந்த முடிவு குடிவரவு திணைக்களத்தால் குமார் குணரத்தினத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

 

குடிவரவு திணைக்களம் மூலம் அரசாங்கம் வழங்கியுள்ள வரவேற்பு உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தை அவுஸ்திரேலிய தூதரகத்தில் சமர்ப்பித்து அவுஸ்திரேலிய குடியுரிமையை இரத்து செய்த பின்னர் குமார் பூரணமான இலங்கை குடியுரிமையினை பெற்றுக்கொள்வார். இங்கு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த புபுது ஜயாகொட சகோதரர் குமாருக்கு இரட்டை குடியுரிமை பெறும் எண்ணம் எப்போதும் இருந்தது கிடையாது என்றும் இலங்கை குடியுரிமையினை பூரணமாக பெறுவதே அவரது ஒரே குறிக்கோளாகும் என பதிலளித்தார்.

ஜனநாயகத்தை மீள உறுதி செய்வதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் மறந்து விடுகின்றனர். ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுகின்றனர். நாங்கள் தான் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க போராட வேண்டியுள்ளது. கடந்த ஒரு வருடகாலமாக குமார் மீது அரசியல் பழிவாஙகல் நடந்தது. இது அவர் அங்கம் வகிக்கும் முன்னிலை சோசலிச கட்சி, ரசின் நவ தாராளவாத திட்டங்களை முன்னெடுக்க ஏனைய எதிர்கட்சிகள் போல அரசுடன் ஒத்து ஓடாதற்கான பழிவாங்கலாகும்.

ஜனநாயகத்தையும், அரசியல் உரிமைகளையும் உறுதி செய்ய, கடந்த ஒரு வடங்களிற்கு மேலாக இடதுசாரி கட்சிகள், சமூக ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், கலைஞர்கள், இளம் ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் இணைந்து கூட்டாக  போராடிய பல போராட்டங்களினால் கிடைத்த வெற்றியாகும், இது நாம் ஜனநாயகத்தையும்அ, ரசியல் உரிமைகளையும் உறுதி செய்ய போராட வேண்டிய நீண்ட பயணத்தில் கிடைத்த முதல் வெற்றிப்படி.

அரசாங்கம் தருவதாக கூறிய வாக்குறுதிக்கமைய கொடுக்கப்பட்டது அல்ல இந்த மீள குடியுரிமை வழங்கியமை. இது ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து சக்திகளும் இணைந்து கூட்டாக போராடியதன் பயனாக, அரசு தனது முகமூடி கழன்று விழாமல் இருப்பதற்காக வழங்கிய குடியுரிமையாகும். தனித்து நின்று போராடி பெறமுடியாதவைகளை கூட்டான போராட்டங்கள் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுத்து சில விடயங்களில் சாதிக்க முடியும் என்பதனை எடுத்துக்காட்டியுள்ளது.  மக்களுக்கு பூரண சுதந்திரமும்உ, ரிமைகளும் முற்றாக கிடைக்க வேண்டுமானால்; அரசியல் மாற்றம் ஒன்றினால் மட்டுமே முடியும் என்பதனை மீளவும் இங்கு நாம் வலியுறுத்தியே ஆக வேண்டும்.