Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

முன்னிலை சோசலிசக் கட்சியின் 2வது தேசிய மாநாடு பெப்ரவரி 01

எதிர்வரும் பெப்ரவரி 01ம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகதாச விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் முன்னிலை சோசலிசக் கட்சியின் 2வது தேசிய மாநாடு இடம்பெற இருப்பதாக கட்சி அறிவித்துள்ளது. "ஏகாதிபத்திய நவ தாராளமய திட்டத்திற்கு எதிரான சோசலிசத்திற்காக உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு கட்சி" என்ற கருப்பொருளில் இந்த தேசிய மாநாடு இடம்பெறவுள்ளது. 

கட்சி உறுப்பினர்களிற்க்கான கூட்ட அமர்வு பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும். இன்றைய  நிகழ்கால அரசியல் நிலை குறித்த ஒரு ஆய்வு அறிக்கை முன்வைக்கப்பட்டு, மாநாட்டில் கட்சியின் அரசியல் அறிக்கை தொடர்பாக பல முன்மொழிவுகள் முன்வைக்கப்படும். பிரதான நிகழ்வாக கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வண்ணம் புதிய மத்திய குழு தெரிவு இடம்பெறும். முன்னிலை சோசலிசக் கட்சியின் உள் நிகழ்ந்த மூன்று பிரதான அரசியல் கலந்துரையாடல் குறித்த புத்தகங்கள் வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இடம்பெறும். 

அவையாவன

1. "இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதில்  மார்க்சிச அணுகுமுறையை" - 

"Marxist approach to stand on resolving the national question in Sri Lank".

2. "கட்சி மற்றும் புரட்சிகர வெகுஜன இயக்கத்தை கேள்வி" -அடிப்படையிலான" -

"Query on the Party and the revolutionary mass movement - based principles"

3. "பாட்டாளி வர்க்க இயக்கம் நிலையை ஆய்வு செய்ய தத்துவம் மற்றும் அரசியல்" - 

"Philosophy and politics - to examine the position of the proletarian movement"

மறுநாள் பெப்ரவரி 2ம் திகதி மாநாடு, இடதுசாரி கட்சிகள் மற்றும் குழுக்களின் தோழமையான ஒற்றுமை உரைகள் இடம்பெறும்.  உலகின் பல நாடுகளை சேர்ந்த சோசலிஸ்ட் கட்சி, இலங்கை சோசலிச கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, இடது குரல், புதிய ஜனநாயகக் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் சென்டர், கூட்டு praksis, புதிய ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை இடதுசாரி கட்சிகள் மற்றும் ஜெர்மன் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, சர்வதேச  தொழிலாளர் குழு, ஐந்தாவது சர்வதேச லீக், இந்தியா,  இத்தாலி  நாடுகளல் இருந்து வருகை தரும் இடதுசாரிய கட்சிகள் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன்  கியூபா தூதுவரும் கலந்து கொள்கிறார். இறுதி நிகழ்வாக பல கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறும்