Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

குமார் குணரட்னத்தின் குடியுரிமை ஏற்றுக்கொள்! - காலியில் மௌன எதிர்ப்பு

தனது பிரஜாவுரிமையினை மீளக்கோரிய முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்தை, உறுதி செய்வதாக வாக்குறுதி அளித்த  ஜனநாயகத்திற்கு விரோதமாக சிறைக்குள் தள்ளியுள்ளது மைத்திரி - ரணில் கூட்டாட்சி. குமாரை விடுதலை செய்து அவரின் பிரஜாவுரிமையினை மீள வழங்குமாறு கோரி சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், கலைஞர்கள், இளம் ஊடகவியலாளர்கள், இடதுசாரிய கட்சிகள் என பல்வேறு அமைப்புக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை கடந்த ஒரு வருடமாக நடாத்திக் கொண்டு இருக்கின்றனர். இவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது, மைத்திரி - ரணில் கூட்டாட்சி குமாரை நாடு கடத்த முடிவெடுத்துள்ளது.

இது முன்னைய அரசு போல இந்த  அரசும் தொடந்து ஜனநாயக விரோத நடவடிக்கையினை மேற்கொள்வதனை உறுதி செய்துள்ளது. இன்று காலி நகரில் கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைத்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மௌனப் போராட்டம் இடம்பெற்றது.

குமார் குணரட்னத்தின் குடியுரிமை ஏற்றுக்கொள்!

அனைத்து அரசியல் கைதிகளையும்  விடுதலை செய்!

காணாமல் போனோர்,  கடத்தல்களை வெளிப்படுத்து!

மக்கள் அடக்குமுறை சட்டங்கள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை  நீக்கு!