Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

கொள்ளைக்கார வரவு செலவு திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு

கல்வி மற்றும் மருத்துவம் விற்பனைக்கு, அநியாய வரிகள், அபதார கட்டணங்கள்.

எதிர்வரும் 17ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு, கொழும்பு பெற்றாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

வரவு செலவு திட்டத்திலுள்ள பரிந்துரைகள் சில...

• அரச சேவைக்கு புதிதாக இணைத்துக்கொள்வதை வெட்டுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதனால், தொழில் பிரச்சினை உக்கிரமடைவது நிச்சயம்.

• அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை ஒழித்துவிட்டு அதற்காக சம்பளத்திலிருந்து தவணைப் பணம் அறவிடப்போகிறார்கள். 

• இலவச சுகாதாரச் சேவையை ஒழித்துவிட்டு சுகாதார காப்புறுதி முறையொன்றை கொண்டுவரவிருக்கிறார்கள். 

• தனியார் பாடசாலைகள் ஆரம்பிப்பதை ஊக்குவிப்பதற்காக அவற்றை சடட்பூர்வமாக்கும் திட்டம் இருக்கின்றது. 

• தனியார் பல்கலைக் கழகங்களை புதிதாக ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. 

• வெளிவாரி பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதை வெட்டுவதுடன் அரசாங்க பல்கலைக் கழகங்களிலும் பணத்திற்கு பட்டத்தை விற்க ஆலோசிக்ப்பட்பட்டுள்ளது.

மக்களுக்கு எதிராக அநீதியான வரி விதிப்பு 

அரசே வரி விதிப்பை  வாபஸ் வாங்கு! - பணக்காரர்களுக்கு  மேலதிக  வரி விதி!

ஏகாதிபத்தியங்களிற்கு சுவையாக - மக்களின்  அபிலாஷைகளை சூறையாடும்  வரவு செலவு திட்டத்தை எதிர்க்க நவம்பர் 17 ம் திகதி 2 மணிக்கு கொழும்பு, புறக்கோட்டை அரசமரத்தின் முன் அணிதிரள்வோம்!

முன்னிலை சோசலிசக் கட்சி