Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

"துயரத்திற்கு அப்பால்" விவரணப்படம் வெளியீடு (படம் இணைக்கப்பட்டுள்ளது)

"துயரத்திற்கு அப்பால் - இலங்கையின் ஜனநாயகம் தொடர்பான அனுபவங்கள் மூன்று" விவரணப்படம் இன்று 01-09-2016 கொழும்பு மாவலி நிலைய கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இலங்கையில் மக்களுக்காக போராடிய நான்கு தமிழர்கள் பற்றிய விவரணப் படம் இது. இந்நிகழ்வில் ஜேர்மன், கியுபா, சீனா தூதரக பிரதிநிதிகள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பல மனித உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஆவணப்படம் இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து மூன்று சம்பவங்களை உதாரணமாக முன்வைத்து விபரிக்கின்றது.

காணாமல் போனோருக்காக போராடி காணாமல் ஆக்கப்பட்ட லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய முன்னிலை சோசலிசக் கட்சி உறுப்பினர்களுக்கு நடந்த துயரத்தையும், தனது குடியுரிமையினை மீள வழங்க கோரிய குமார் குணரத்தினத்தை ஒரு வருடம் சிறையில் அடைத்து குடியுரிமையினை வழங்க மறுக்கின்ற ஜனநாயக மறுப்பையும் விளக்குகின்றது.

இந்நிகழ்வில் முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் சேனாதீர குணதிலக, ஆர்ச்சர் சுமனசிறி லியனகே, திரைப்பட இயக்குனர் பிரசன்ன விதானகே மற்றும்   வணபிதா சத்தியவேல்  உரையாற்றினார்.