Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வரி விதிப்பதில்லை, எம்மை வதைக்கின்றார்கள்

கடந்த மே மாதம் 02ம் திகதி அரசாங்கம் விதித்த வரிகளின் சுமையை மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளார்கள். ஒவ்வொரு பொருளினதும் விலை ஏறிக்கொண்டே போகின்றது. சுகாதார சேவைக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளுக்கு, வைத்தியரை செனல் செய்ய, மருந்துகளுக்கு என்று சகலதிற்கும் புதிததாக 15% வரி விதிக்கப்பட்டது. தொலைபேசி கட்டணத்திற்கு விதித்துள்ள வரியை பார்த்தால் வயிறு பற்றி எரிகின்றது. தண்ணீர் கட்டணமும் அதிகரிக்கின்றது. மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கின்றது. அது மட்டுமல்ல, வீட்டுக் கடனுக்கான வட்டி கடந்த நான்கு மாதங்களில் 9.3% லிருந்து 12.5%  அதிகரித்துள்ளது. தனியார் கடன் (Personal Loan) வட்டி 11% லிருந்து 17.5% வரை அதிகரித்துள்ளது. வாகனம் எடுப்பது எப்படியிருந்தாலும் வீட்டை கட்டிக் கொள்ளவும் முடியாத நிலை.

இந்நாட்டு பொது மக்கள் மீது வரிக்கு மேல் வரி சுமத்தும் அரசாங்கம் முதலாளிகளுக்கு வரி விதிக்கின்றதா? இல்லை. சிறப்பு வாசி வரி, மாளிகை வரி விதிப்பதாகச் பொய் சொல்கின்றார்கள். அவை அப்பட்டமான பொய். இந்நாட்டின் நூறு மிகப்பெரிய கம்பனிகளின் சென்ற வருட இலாபம் அண்ணளவாக 20,000 கோடி. அதுவும் உண்மையான கணக்கல்ல. உண்மையான கணக்கு 30,000 – 40,000 இருக்கக் கூடும். ஆனால், எமது ஒரு வேளை சாப்பாட்டிலிருந்து, தொலைபேசி அழைப்பிலிருந்து கொள்ளையடிக்கும் அரசாங்கம், முதலாளிகளின் இலாபத்தில் கையை கூட வைப்பதில்லை.

அது மாத்திரமா? அமைச்சர்களுக்கு உல்லாச வாகனம் வாங்க 118 கோடி ரூபாய் ஒதுக்கப் போகின்றார்கள். புற்று நோயளிகளுக்கு அத்தியாவசியமானதும், இலங்கையில் எந்தவொரு வைத்தியசாலையிலும் இல்லாத பெட் ஸ்கேனர் இயந்திரத்திற்கு 20 கோடி செலவாகும். மக்களுக்கு அத்தியாவசியமானவற்றை வெட்டிவிட்டு ஆட்சியாளர்கள் உல்லாசம் அநுபவிப்பது அப்படித்தான். ராஜபக்ஷாக்களின் திருட்டைப் பற்றி சொல்லி சொல்லி இந்த கும்பலும் அதனைத்தானே செய்கின்றது?

இந்த அநீதிக்கு எதிரான மக்கள் எதிரப்பை ஒன்றிணைக்க வேண்டும். சிலர் நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்றார்கள். அந்த நிதியமைச்சரை நீக்கிவிட்டு வேறு நிதியமைச்சரை நியமித்தாலும் பொருளாதாரம் இதே தண்டவாளத்தில்தான் போகும். இந்த மாதிரி சில்iறை வேலைகளால் இந்த நிலைமையை மாற்ற முடியாது. இந்த நிலைமையை ஓரளவாவது மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் பக்கம் வாயை பிளந்து கொண்டிருப்பதில் பலனில்லை. பொது மக்கள் என்ற வகையில் உங்களது எதிர்ப்பு வேண்டும். இந்த தபாலட்டை எதிர்ப்பு என்பது சிறியதுதான். அதனையும் தாண்டிய எதிர்ப்பிற்கு ஒன்று சேருமாறு அழைக்கின்றோம். மேலும் பார்த்துக் கொண்டிருப்பதால் சுவரில் சாத்தப்படுவதைத் தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை.

அரசாங்கம் சொல்வதைப் போன்று இந்த பொருளாதார நெருக்கடி ஒரு வருடத்தில் முடியப் போவதில்லை. ஏன், ரணில் விக்ரமசிங்காக்களுக்கு புதையல் கிடைக்கப் போகின்றதா…

ஆகவே, போராட முன் வாருங்கள். அநீதியான சுரண்டலுக்கு, வரிகளின் ஊடாக சொச்ச சம்பளம். சொச்ச வருமானத்தையும் கொள்ளையடிப்பதற்கு எதிராக வீதிக்கு வாருங்கள். அதற்காக முன்னிலை சோஷலிஸக் கட்சியுடன் இணைந்திடுங்கள்.