Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜெயபாலன் கைதிற்கு முன்னிலை சோசலிச கட்சி கண்டனம்

பிரபல கவிஞர் ஜெயபாலன் கைது செய்யப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த துமிந்த நாகமுவ, ''தமிழ் கவிஞர்கள் மத்தியில் முக்கிய இடத்தை வகிக்கும் ஜெயபாலனது கவிதைகள் சிங்களத்திற்கு மொழிமாற்றம் செய்யப்படுவதால், அவர் சிங்கள கவிஞர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பபை பெற்ற கவிஞராகத் திகழ்கிறார். அவர் கைது செய்யப்பட்டமை மற்றும் அவரை நாடுகடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நாங்கள் வன்மையாக் கண்டிக்கிறோம்.

அவர் மீண்டும் இலங்கைக்கு வந்தபோது சுற்றுலா விசா சம்பந்தமான பிரச்சினையை காரணமாகக் காட்டி அவரைக் கைது செய்துள்ளனர். சுற்றுலா விசாவில் வந்து சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற காரணத்தினால் வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலுள்ள வியாபாரிகளுக்கும், திருடர்களுக்கும், சூதாடிகளுக்கும் இலங்கை வர அரசாங்கம் அனுமதிக்கிறது. ஆனால், சமூக செயற்பாட்டாளர்களை, கலைஞர்களைக, மனிதநேயர்களை வரவிடுவதில்லை. உலக மகா கஸினோ சூதாடியான ஜேம்ஸ் பெகர் இலங்கைக்கு வந்து வர்த்தக சமூகத்தில் உரையாற்றுகிறார். என்றாலும் ஜயபாலன் போன்ற ஒரு கவிஞனக்கு அவனது உறவுகளை சந்திக்க விடுவதில்லை. அரசாங்கம் இலங்கையை உலக மூலதனத்தின் கொல்லைப்புறமாக ஆக்குகிறது. ஆனால், உலக கலாச்சாரத்திற்கு, மனிதத்தை மதிப்பவர்களுக்கு வரவிடுவதில்லை. இலங்கை சமூகத்தின் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது பாரிய பாதிப்பு. இந்த நிலைமைக்கு எதிராக அணிதிரளுமாறு நாங்கள் இலங்கை மக்களிடம் வேண்டுகிறோம்." எனக் கூறினார்.