Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அனைவருக்கும் இலவசக் கல்வியை வழங்கு - முன்னிலை சோசலிச கட்சி


அனைவருக்கும் இலவசக்கல்வியை வழங்கு என்ற கோசங்களுடன் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று முன்னிலை சோசலிச கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அதில் அடங்கிய கோசங்கள் இப்படி இருந்தன.

 


அநீதி இழைக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக் நுழைவை பெற்றுக்கொடு!
கல்வியை தனியார் மயப்படுத்துதை உடன் நிறுத்து!


கல்வியின் உரிமையை பெற்றுக்கொள்ள அணிதிரள்வோம்!


கல்விக்கான ஒதுக்கீடுகளில் வெட்டு விழுதை உடன் நிறுத்து!


மாலபே திருட்டு பட்டப்படிப்பு கடையை இரத்துச்செய்!


ஆட்சியாலரே கல்விச் சுமையை மக்கள் மீது சுமத்தும் திட்டத்தை சுருட்டிக்கொள். தேசிய உற்பத்தியில் 6% த்தை கல்விக்காக ஒதுக்கு!


மாணவர் வாழ்வை துன்பத்தில் தள்ளும் கல்வி முறையை மாற்ற அணிதிரழ்வோம்.!


கல்வி வியாபாரப்பொருள் அல்ல!


கல்வியின் சம உரிமைக்காகப்போராடுவோம்!


தொடர்ந்து உரையாற்றிய முன்னிலை சோசலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ இன்று வரையும் கல்வியில் திருப்தி அடையாத நிலையே காணப்படுகின்றது.கல்விக்காக 6% ஒதுக்கவேண்டும் ஆனால் தற்பொழுது அதற்காக ஒதுக்கப்படுவது 1.8% வீதமே   இந்த ஒதுக்கீடு போதாமல் உள்ளது.கடந்த 35 ஆண்டுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட  மிகக் குறைவான ஒதுக்கீடு இந்த வருடமே.


எஸ்.பி. பந்துள போன்றோரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சிலர் கூறுகின்றனர்.அவர்களை அனுப்பினால் பிரச்சினை தீராது மாறாக அந்த சீர்  கெட்ட அமைப்பை மாற்றவேண்டும்.இது புதிய லிபரல் வாதத்தில் உள்ள மிகப் பாரிய பிரச்சனையாகும்.தற்பொழுது கல்வி சாசி கொடுக்கும் அரச வைத்தியசாலைகளைப் போல் ஆகியுள்ளது.


சாதி,மதம்,இனம்,மொழி பாராமல்  அனைவருக்கும் சமமான கல்வியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல்வியை பாதுகாக்க அரசியல் வாதிகளை நம்பி பிரயோசனம் இல்லை.இலவசக் கல்விக்காக போராட பொது மக்கள் அனைவரும் முன் வரவேண்டும் என்று கூறினார்.