Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பயங்கரவாதப் பிதாமகன்களின் பாரிஸ் ஊர்வலம்!

சென்றவாரம் பாரிஸில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நகைச்சுவைப் பத்திரிகையாளர்களின் படுகொலைகளை கண்டித்து நேற்று பாரிஸில் பல லட்சம் மக்கள் கூடி தம் எதிர்ப்பையும் அஞ்சலியையும் செலுத்தினர்.

மேலும் இதில் கலந்து கொள்ள 46 நாடுகளின் தலைவர்களும் அதன் இன்னோரன்னோர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களில் பலர் பயங்கரவாத உற்பத்தியாளர்களும் அதன் விநியோகஸ்தர்களும் என்பதை யாவரும் அறிவர்.

இரண்டம் உலக யுத்தத்தின் பின்னர் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் துணையுடன் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து கடந்த அரை நுரற்றாண்டிற்கு மேலாக பாலத்தீன மக்களை அகதி முகாம்களுக்குள் அடைத்து தொடர் பயங்கரவாதப் படுகொலைகளைக் செய்து கொண்டிருக்கும் இஸ்ரேலிப் பயங்கரவாதத்தின் பிரதமரை இந்நிகழ்வின் காணும்போது பிரான்ஸ் மக்களின் பயங்கரவாதத்திற்கெதிரான உணர்வு கொண்ட போராட்டமும் அஞ்சலியும் அர்த்தமற்றதாகியுள்ளது என்பதனை மனவேதனையுடன் மனம் கொள்ள வேண்டியுள்ளது.

பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நகைச்சுவை வரைஞர்கள் அண்மைக்காலங்களில் பாலஸ்தீன மக்களின்மேல் இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாதப் படுகொலைகளை கண்டித்து தம் பத்திரிகையில் சித்திரங்களாக வடித்ததை ஊர் உலகறியும்.

இந்நிலையில் இஸ்ரேல் போன்ற பயங்கரவாத உற்பத்தியாளர்களையும்- அதன் விநியோகஸ்தர்களையும் "பிரான்ஸ் சோஸலிச" ஆட்சியாளர்கள் அழைத்தது என்பது இவர்களும் அவர்களின் பங்குதாரர்கள் ஏற்றுமதி இறக்குமதியாளர்கள்தான் என்பதை பட்டவர்த்தனமாக்குகின்றது.

இந்நிலையில் பிரான்ஸ் மக்களின் உண்மையான பயங்கரவாத எதிர்புணர்வை மதிக்கின்ற அதேவேளை பிரான்ஸ் அரசு சர்வதேசப் பயங்கரவாதிகளின் கூட்டாளிதான் என்பதையும் அம்பலப்படுத்த வேண்டும்.