Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

"மாணவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து" - போராட்டம் (படங்கள்)

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் "கல்வி விற்பனையை நிறுத்து", "உடனடியாக மாலபே போலி பட்டக் கடையை மூடு", "மாணவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து".. ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நேற்றும் இன்றும் (13-14/07/2016) தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதன் ஒரு அங்கமாக பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று காலை முதல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த இரவு மாணவர்களின் காலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது. பொதுமக்களின் பலத்த ஆதரவுடனும் பங்களிப்புடனும் இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கொழும்பில் முற்றுகையிட்டு போராட்டத்தை நடாத்தும் மாணவர்களிற்கு வேண்டிய அனைத்து உதவிகளை செய்வதுடன் இந்த இடத்தை தாண்டிச் செல்லும் வாகனங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பலத்த கோன் சத்தத்தை எழுப்பிச் செல்வது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இந்த இரு நாள் போராட்டத்தில் இணைந்து கொண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் இந்த நியாய பூர்வமான இந்த இருநாள் போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி உள்ள "ஜனநாயகத்திற்க்கான போராட்டக்காரர்கள்" அமைப்பினரும் கலந்து கொண்டதுடன், பல்வேறு மக்கள் ஜனநாயக அமைப்புக்கள், சமூக ஆவர்வலர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆதரவளித்துள்ளனர்.