Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்ய வேண்டும்?

அன்புக்குரிய விவசாயத் தோழர்களே, தோழியரே,

உங்களைத்தேடி மீண்டும் ஒரு தேர்தல் வந்துள்ளது. 02 வருடங்களுக்கு பின்னர் நடத்த வேண்டிய ஜனாதிபதித் தேர்தலுக்காக ஜனவரி 8ம் திகதி வாக்களிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

விவசாயிகள் என்ற வகையில் இதன்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

இதற்கு முன் நடந்த தேர்தல்களில் ஒரே விதமாக வாக்களித்திருந்தாலும், எமது வாழ்க்கைக்கும் விவசாயத்திற்கும் என்ன நடந்துள்ளதென்பதை வாக்களிப்பதற்கு முன்பாக நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏற்கனவே இருந்ததை விட இப்போது புதிய விதை வகைகள் வந்துள்ளன. புதிய கருவிகள் வந்துள்ளன. நோய் நொடிகளுக்கு மருந்துகள் வந்துள்ளன. வகை வகையான பசளைகள் வந்துள்ளன. உண்மையை கூறுவதாயிருந்தால், விவசாயிகளால் குறுகிய காலத்தில் அதிக விளைச்சலை பெற முடியும்.

ஆனால் எமது வாழ்க்கைக்கு என்ன நடந்திருக்கிறது?

சரியாக இருந்தால், குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் கிடைத்து, ஓய்வு நேரம் அதிகமாகி கைநிறைய பணம் கிடைக்க வேண்டும். ஆனால் என்ன நடந்திருக்கிறது? வேலை செய்யும் நேரம் அதிகமாகிக் கொண்டே போகிறது. சாப்பாட்டுப் பொருட்களை குறைக்க வேண்டியுள்ளது. துணிமணிகள் வாங்குவதை பின்போட வேண்டியுள்ளது. ஓய்வும் இல்லாமலாகி, நிம்மதியும் இல்லாமலாகி, வாழ்க்கையும் இல்லாமலாகியுள்ளது.

ஏன் இப்படி நடக்கிறது?

இப்போது நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நவ தாரளமய முதலாளித்துவத்திற்குள் விவசாயிகள் என்ற வகையில் எமது முழுக் குடும்பமும் பாடுபட்டு பயிர்ச்செய்து தேடும் பணத்தை விதைகள் கம்பனிகளுக்கும்- மருந்து கம்பனிகளுக்கும்- பசளை கம்பனிகளுக்கும்- லீசிங் கம்பனிகளுக்கும்- அல்லது கருவிகளுக்கும் கொடுக்க வேண்டும். எஞ்சிய சொச்சத்தை வைத்துக் கொண்டு அடுத்த போகம் வரை பார்த்திருக்க வேண்டும். சாப்பாட்டுக்கும் வழி கிடையாது. உண்மை நிலை இதுதான்.

இந்த முறைக்குள் வாழும் நாங்கள் வியர்வை சிந்தி தேடிக் கொள்ளும் அனைத்தையும் கம்பனிகள் சுரண்டுகின்றன. இதுதான் இந்த சிஸ்டத்தின்(முறை) தன்மை.

எதிர்காலத்திலும் என்ன நடக்கும்?

இந்த ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கினாலும் நீக்காவிட்டாலும், சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தாலும் நியமிக்காவிட்டாலும், இந்த முறை மாறவில்லையென்றால், ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும் பழைய மாதிரி, பழகிய மாதிரி வாழத்தான் வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

இந்தத் தேர்தலில் விவசாயிகள் என்ற வகையில் நாங்கள் நவ தாராளமய முதலாளித்துவ சமூக முறைக்கு எதிராக இடதுசாரிய மாற்றீடுக்காக முன்வர வேண்டும். நாங்கள் தெரிவு செய்து அனுப்பும் எமது பிரதிநிதி எங்களுக்காக வேலை செய்யாதபோது விவசாயியின் உரிமைக்கு எதிராக விதை உரிமையை கம்பனிகளுக்கு வழங்கவும், காணிகளை விற்கவும்,, நீரை விற்கவும் வேலை செய்வாராயிருந்தால், அவரை மீள அழைக்கும் அதிகாரம், விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றப்படும் சட்டதிட்டங்களை திருப்பிவீடும் அதிகாரம் விவசாயிக்கு கிடைக்கக் கூடிய வழிவகைகள் இடதுசாரிய வேலைத் திட்டத்திலேயே உள்ளன.

எங்களது விளைச்சலுக்கு நியாயமான பெறுமதியை பெற்றுக் கொள்ளவும், கிடைக்கும் பணத்திற்கு விதை, பசளை, விவசாய இரசாயனங்கள் மற்றும் உபகரண கம்பனிகளிடம் கொடுத்துவிட்டு வெறும் கையுடன் வீடு வரும் முறையை இடதுசாரிய வேலைத் திட்டத்தினால் மாத்திரமே மாற்ற முடியும். விவசாயியின் வாழ்க்கையில் சந்தோசத்தையும், சுதந்திரத்தையும் அதன் மூலமாக மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும்.

இப்போது விவசாயிகள் என்ற வகையில் எங்கள் முன் இருப்பது இந்த முதலாளித்துவ சமூக முறைக்குள் மூழ்கி மடிவது அல்லது இடதுசாரிய மாற்றீடுக்காக அடி எடுத்து வைப்பது ஆகிய இரண்டில் ஒன்றை தெரிவு செய்வதுதான்.

ஆகவே, இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது வாழ்க்கையை நாசமாக்கும் இந்த முதலாளித்துவ சமூக முறைக்கு எதிராக இடசாரிய மாற்று வேலைத் திட்டத்தை முன்வைக்கும இடதுசாரிய முன்னணிக்கு வாக்களித்து இடதுசாரிய மாற்றத்திற்கான முதற் படியில் அடி எடுத்து வைப்போம்.

விவசாய போராட்ட இயக்கம்