Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

சமவுடமை வாழ்க்கை - சமவுடமை சமுதாயம்

அன்புக்குறிய தோழரே, தோழியரே,

இன்னொரு ஜனாதிபதித் தேர்தலும் வந்துள்ளது,

இந்த தேர்தலில் உழைக்கும் மக்கள் என்ற வகையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்த முதலாளித்துவ தேர்தல்களினால் எமது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட மாட்டாது. என்றாலும் மாற்றுவது எப்படி என்பதைப் பற்றி கதைப்பதாயிருந்தால் இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுக்க முடியும். எங்களது இந்த முயற்சிஅதற்காகத்தான்

நாம் வாழும் இந்த வாழ்க்கை என்ன?

நிறுவனத்தில், தொழிற்சாலையில், வேலைத்தலத்தில், தோட்டங்களில், விவசாய நிலங்களில், வீதிகளில், சுரங்கங்களில் நாம் அறிவை, வியர்வையை, கண்ணீரை சிந்துபவர்களாக உள்ளோம். அரச, தனியார், தோட்ட, ஒப்பந்த நிறுவனங்களில், கடைகளில் முதலாளிகள் பெறும் கொள்ளை இலாபத்தில் சொச்சத்தை சம்பளமாக நாம் பெறுகிறோம்.

எமது வாழ்க்கை எப்படி கழிகிறது?

எங்கள் அனைவரினதும் அன்றாட வாழ்க்கை இரண்டாக உள்ளது. வேலைக்கு சென்று அறிவை, உழைப்பை சிந்தும் காலம் எமது பொருளாதார வாழ்க்கை. அது மிகக் கஷ்டமான, திருப்தியில்லாத, மனநிறைவை தருவதில்லை. நாம் எவ்வளவுதான் பாடுபட்டாலும் அதனால் நிம்மதி கிடைப்பதுமில்லை. ஆகவே, முடியுமான ஒவ்வொரு தருணத்திலும் அதிலிருந்து தப்பிச் செல்ல நினைக்கிறோம் அல்லவா? அதேபோன்று, மேலதிக நேரம், மேலதிக வேலை, வெளி வேலைகள் காரணமாக எமது பொருளாதார வாழ்க்கை பரிதாபமானதாக இல்லையா?

அதன் பின்னர் எஞ்சும் சொச்ச நேரத்தையே எமது குடும்பம், உறவினர்கள், நண்பர்களோடு சேர்ந்து செலவிடுகிறோம். அந்த நேரம் கூட சுருங்கி கவலையை தருகிறது. எவ்வளவுதான் புதிய உபகரணங்கள் வந்தாலும் எமது பொருளாதாரமும், சமூக வாழ்க்கையும் இலகுவானதாக உள்ளதா?

சந்தோசமில்லை- சுதந்திரமில்லை, சம்பளமில்லை- வாழ்க்கையில்லை.

ஏன் அப்படி நடக்கிறது? இன்றைய சமூக பொருளாதார முறைதான் அதற்கு காரணம். இன்று ஒட்டுமொத்த சமூகமும் வாழ்வதற்கும், இருப்பிற்கும் போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எமது வாழ்க்கையில் சந்தோசத்திற்கு எடுத்துக்காட்டாக பொருட்கள் நிறைந்த அதி நுகர்விய முறையொன்று காட்டப்படுகிறது. அதன் மூலம் அனைத்தும் பணத்திற்கு விற்கப்படும், விற்கும் உலகுக்கு அழைக்கப்படுகிறோம். இலாபத்தின் மீது அனைத்தையும் தீர்மானிக்கும் சமூகம் உருவாக்கப்படுகிறது. இந்த போட்டியில் பெரும்பாலான, நேர்மையான மனிதர்கள் தோற்றுப் போனவர்களாக உள்ளார்கள். அனைத்து தீங்கானவற்றுக்கும் முக்கியத்துவம் கிடைக்கிறது. வாழ்வதற்கு வழியில்லாத அடித்தள மக்கள் வாழ்க்கையிலிருந்து விடை பெறுவதில் நான்காம் இடத்தை எமது நாடு வகிக்கிறது. அப்படியானால் அழிவின் தரம் உங்களுக்கு புரிகிறதல்லவா?

நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

திருப்தியான முறையில் உழைப்பை சிந்தும் சமூகத்தில், மனிதர்களுக்கும் - மனிதர்களுக்குமிடையில் நடக்கும் நன்மையான சமூக உறவுகளின் நிலைத்தல் ஊடாகத்தான எமது வாழ்க்கையில் சந்தோசம் கிடைக்கிறது. தற்போதைய முறைக்குள் அவ்வாறான சமூகமொன்று உருவாக்கப்பட மாட்டாது என்பதை 66 வருடங்கள் கடந்த நிலையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனி, தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் என்ற வகையில் நாங்கள், உங்களிடம் கேட்பது மகிழ்ச்சி, சுதந்திரம், பாதுகாப்பு இல்லாத வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டுமா? என்பதே. இல்லையாயின் தற்போதைய தனியார் உற்பத்திகளை கொண்ட சமூகத்திற்கு பதிலாக அனைவருக்கும் உற்பத்தியின் பலாபலன்கள் கிடைக்கும் சோஷலிஸ வாழ்க்கைக்கு திரும்புவோமா? அதை இன்னும் தாமதிப்போமா? அதனை எமது கைகளால் கட்டியெழுப்ப முடியாதா?

எமது ஆலோசனை என்ன?

மக்களின் இறையான்மை என்பது தீர்மானிப்பதற்கான மக்களுக்குள்ள அதிகாரம். ஆனால். தற்போதைய ஜனநாயகம் என்பது தேர்தல் நடக்கும் நாளில் 9 மணித்தியாளங்கள் மக்களுக்கு கிடைக்கும் சுதந்திரம்தான். அதுவும் கூட வற்புறுத்தலுக்கு அடிபட்டுள்ளது. அதற்குப் பின்னர் எமது பிரதிநிதிகள் அனைவரும் 5 வருடங்களுக்கும் மேலாக எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் எமது நன்மைக்காக அல்ல. மிகச் சிறு குழுவினரினதும், கம்பனிகளினதும் சுகபோகங்களை பாதுகாப்பதற்குத்தான். அதற்கு பதிலாக மக்கள் இறையாண்மை பலத்தை ஒவ்வொரு நாளும் பரீட்சித்துப் பார்க்கும் வேலைத்திட்டடத்தையே இடதுசாரியம் முன்வைக்கிறது.

அதாவது, மக்கள் மன்றங்களை அமைக்கவும், (மக்கள் சபைகள், தொழிற்சாலை சபைகள், மாணவர் மன்றங்கள் போன்றவை) அதற்கு மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கும் அதிகாரமும், மக்களுக்காக செயற்படாத பிரதிநிதிகளை மீள அழைக்கும் அதிகாரமும் மக்களுக்கு கிடைப்பதற்காக போராடுமாறு நாம் கூறுகிறோம். அனைத்து தீர்மானங்களையும் எடுக்கும் அதிகாரத்துடனான அரசியலமைப்பை உருவாக்க போராடுவோம். அதே போன்று, பொருளாதார ஜனநாயகமாக்கலுக்காக சமூக உற்பத்திகளை தீர்மானிக்கும் அதிகாரத்தையும், அதன் நன்மைகள் நீதியாக பகிரப்படும் முறையையும் பெற்றுக் கொள்ள போராடுவோம். இனி, அவ்வாறான, நீதிமிக்க சமூகத்திற்கான வேலைத்திட்டத்தை ஆலோசிப்பதும் போராடுவதும் இடதுசாரிய முன்னணி மாத்திரமே என்பதால் அதில் நீஙகளும் இணைய வாருங்கள் என வேண்டுகிறோம்.

சமவுடமை வாழ்க்கை - சமவுடமை சமுதாயம்

இடதுசாரிய முன்னணியை வெல்ல வைப்போம். இடதுசாரிய பலத்தை கட்டியெழுப்புவோம்.

தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம்