Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இடதுசாரிகளின் கருத்துக்களைக் கேட்கத் தயாராகும் தமிழ்மக்கள்!

'எழுக எம் இளம் தளிர்கள்" Brugdorf பெற்றோர் பேரவையின் நிகழ்வில்!!!

சுவீஸ்சின் தலைநகர் Bern ஐ அண்டிய சிறுநகரமே Brugdorf. அங்கு வாழும் தமிழ் பேசும் மக்களால் 8 வருடங்களுக்கு மேலாக பல நெருக்கடிகளையும் தாண்டி, தாங்கி இயங்கிக் கொண்டிருக்கும் பெற்றோர் பேரவை நடாத்தும் வருடாந்த நிகழ்வானது எப்போதும் பலதரப்பட்ட நிகழ்சிகளை உள்ளடக்கியதாகவே அமைந்திருக்கும். நாடகம், சிறுவர் சிறுமிகளுக்கான பலவகை நிகழ்ச்சிகள், இலக்கிய அறிமுகப்படுத்தல்கள் எனப் பலவகை நிகழ்வுகளோடு, சமூகமேம்பாட்டு நிகழ்வுகள் என்ற இன்னுமொரு பகுதியும் இணைந்ததாக அமைந்திருக்கும். இப்பகுதியில் சமூகவிடயம் சார்ந்து தாம் கடைப்பிடிப்பவற்றை மக்கள் முன் சொல்லுவதற்காக ஆன்மீகவாதிகள், மதச்சீர்திருத்தவாதிகள், எழுத்தாளர்கள், எனப்படுவோர் அழைக்கப்படுகிறார்கள். இம்முறை இப்பகுதியில் விசேடமாக இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்ட இருவர் அம்மக்கள் மத்தியில் உரையாற்றினர்.

அன்னிய ஆட்சிகாலங்களும் இலங்கை வரலாறும் என்ற பொருள்பட தோழர் தெரல் உரையாற்றினார். அடுத்ததாக இலங்கை தமிழ் பேசும் மக்கள் ஒருதேசிய இனம் சார்ந்தவர்கள் அவர்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ்வதற்கான அடிப்படையை உருவாக்கவும் அதற்கான செயற்பாட்டில் இறங்க வேண்டிய அவசியத்தை தோழர் கொட்டிக்கொட வலியுறுத்தினார். இச் சிங்களத் தோழர்களின் உரைகளை அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பொறுமையாகச் செவிமடுத்து கரகோசம் செய்து வரறே;றனர்.

இவ்வுரைகளை செய்வதற்கான ஏற்பாட்டை, அனுசரனையை இவ்வமைப்பின் ஒட்டு மொத்த உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்ட சம்பவமானது தமிழ் பேசும் மக்களின் அரசியல் சூழலில் மிகப்பெரும் மாற்றமாகும். ஓரு ஜனநாயக சூழலை தோற்றுவிக்கவும், அதை உள்வாங்கவும் மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இவ் நிகழ்வுணர்த்துகிறது. இது அனைத்து தரப்பாலும் வாழ்தப்பட வேண்டிய விடயமாகும். Brugdorf பேற்றோர் பேரவையானது, April மாதம் புத்திஜீவிகளான சுவீநாட்டு பிரiஐகள் மத்தியில் இலங்கை வரலாறும் அன்னிய ஆட்சிகாலங்களும் தமிழர் போராட்டமும் என்ற தலைப்பில் கருத்தரங்கொன்றை நடாத்தியது. அதிலும் தோழர் தெரல் அவர்களே உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும் மேலாக அவ்வமைப்பின் இளம் உறுப்பினரும் பல்கலைகழக மாணவர்ருமாகிய ஒருவர் கூறுவதைப் பார்போம் 'மிகத் தெளிவான, நேர்மையான, வரலாற்று அரசியல் விஞ்ஞான அடிப்படையில் கருத்துக்களைக் கொண்டவர்களான, பழகுவதற்கும், உபசரிப்பதிலும் இனிமையாகக் காணப்படும் இம்மனிதர்கள். எமக்கு எதிரிகளாக சித்தரிக்கப்பட்டனர். அரசியல் வறுமையுடைய கருத்துக்கள் எம்மவர்களிடம் வேரூண்டியுள்ளது. இப்போது என்னுள் புதிய சிந்தனைக்கான வேர்கள் ஊன்றத் தொடங்குகின்றன"

இக்கருத்தானது புதிய மாற்றத்தினை தமிழ் பேசும் மக்கள் மத்தியில், அதுவும் இளம் வட்டத்தினர் மத்தியில் தோற்றுவிக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுக்ககிறது.

நேரடித் தொகுப்பு

திலக்

24-5-2014