திருட்டை ஒழிக்க கொள்ளைக்காரன் வகுக்கும் திட்டம்…!
- Details
- Category: தேவன்
-
09 Feb 2012
- Hits: 5560
தோழர்களே கவனம்
எங்களுக்காக கண்ணீர்விடுவது ஓநாய்
மழையில் நனைந்தால் தப்பித்துக் கொள்ளலாம்
இந்த ஓநாயிடம் தஞ்சமாகிவிட்டால்
மரணம் நிச்சயம்…
தோழமையுடன்
உங்கள்
ஆடு.
திருட்டை ஒழிக்க கொள்ளைக்காரன்
வகுக்கும் திட்டம்…!
தன்னையே நம்பிய தலைவனையும் போராளிகளையும் நம்பவைத்து கழுத்தறுத்த நம்பிக்கைத் துரோகி, பல ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களின் அழிவிற்கு பேரினவாத அரசிற்கு வழிவகுத்துக் கொடுத்த மக்கள் விரோதி, மக்கள் பணத்திலே உல்லாச வாழ்க்கை வாழும் கொள்ளைக்காரன் இன்று அந்த மக்களுக்காக கண்ணீர்விடுகிறான். இந்த கொள்ளையனின் கண்ணீரைத் துடைக்க கைக்குட்டையோடை வரிசையிலை நிக்குதுகள் சில வெக்கம் கெட்ட பிறப்புக்கள்.
இந்த கூட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது இன்றைய தேவையாகும். நாங்கள் யாரும் துப்பாக்கி தூக்கத் தேவையில்லை, எங்கள் ஒருமித்த எதிர்ப்புக் குரலே போதும் இந்த விரோதிகளை அரசியலை விட்டு விரட்டியடிக்க.