Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பின்னணி

ருசிய ஏகாதிபத்தியத்தின் இராணுவ பொருளாதார செல்வாக்கு மண்டலமாக இருந்த உக்கிரைனை, மேற்கு ஏகாதிபத்தியங்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான  ஒரு உள்நாட்டு யுத்தத்தை நடத்துகின்றன.

மக்களின் வாழ்வுக்கான போராட்டத்தினை பயன்படுத்தி கொண்டு மேற்கு ஏகாதிபத்தியங்கள்,  தேசியவாத நாசிச பாசிட்டுகளின் துணையுடன் அதிகாரத்தை கைப்பற்றியது முதல் ஒரு உள்நாட்டு யுத்தத்தை நடத்துகின்றது.

இதே போல் சிரியாவில் மக்கள் போராட்டத்தை பயன்படுத்திய மேற்கு ஏகாதிபத்தியங்கள், இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களைக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தது.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தாங்கள் உருவாக்கிய உக்கிரைன் பொம்மை ஆட்சிக்கு பாரிய நிதிகளை வழங்கி, மக்கள் மேலான தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக ஏகாதிபத்திய மேலாதிக்கத்துக்காக வான்வெளியில் நடக்கும் யுத்தத்தில், தங்கள் நலனை அடைய விமானம் மீதான திட்டமிட்ட ஒரு படுகொலையாகவோ அல்லது தற்செயலான ஒன்றாகவும் கூட இது இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், ஏகாதிபத்தியங்களே இங்கு குற்றவாளிகள்.

கைப்பற்றிய அரசு மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வு காண்பது தொடர்பாக அதிருப்தியும், அவநம்பிக்கையும் தொடருகின்றது. மறுபக்கம் அலட்சியம், புறக்கணிப்பு, அக்கறையின்மை காணப்படுகின்றது.

தனித்தனியாக போராடுவதோ, அதிலிருந்து ஒதுங்கி இருப்பதோ தீர்வுகளை காண்பதற்கான பாதையுமில்லை.

இதிலிருந்து மீள்வதற்கும், தீர்வுகளை காண்பதற்குமான வழி என்ன? மக்கள் இனம் மொழி மதம் சாதி கடந்து தமக்கு இடையில் ஒன்றிணைந்து வாழ்வதன் மூலமே, தமக்கு இடையிலான இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும். இது தான் ஒரேயொரு  வழி. மக்கள் தமக்கு இடையில் ஒன்றிணைவதற்குத் தடையானவற்றை எதிர்ப்பதும், மக்களை பிளக்கின்றவற்றை எதிர்ப்பதன் மூலமே தீர்வுகளைக் காணமுடியும்.