Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ்-சிங்கள இனவாதிகளால் எதிர்க்கப்பட்ட "பிறகு" சினிமா பரிசில் வெற்றிகரமாக காட்சிப்படுத்தப்பட்டது!

தமிழ்-சிங்கள மொழி பேசும் மக்கள் இணைந்து பார்த்த சினிமாவின் கதை உள்ளடக்கம், தமிழ்-சிங்கள சார்ந்து இருவர் ஒன்றிணைந்து வாழ்வதில் சந்திக்கின்ற வாழ்வியல் பிரச்சனையை பற்றியது. எதார்த்த படைப்பு என்ற வகையில், இன்றைய வாழ்வில் காட்சிகளை அதன் முரண்களையும் கலையாகத் தந்திருக்கின்றது.

யுத்தம் முடிந்து விடவில்லை, யுத்தம் வாழ்வியல் ஊடாக பல முனையில் தொடர்வதையும், வாழ்வியில் ஊடான உள்வியல் சிக்கல்களையும் படம் உணர்த்தி நிற்கின்றது

சமூக அக்கறையுள்ளவர்களை உணர்வு ரீதியாக ஒன்றிணைக்கும் படம், வாழ்கையில் எதார்த்தத்தை கடந்து சிந்திப்பதை செயற்பட முனைவதையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது.

சினிமா காட்சியைத் தொடர்ந்து, ஆரோக்கிமானதும் விரிவானதுமான கலந்துரையடல் நடத்தது.