Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்த சிந்தனையில் அமைந்த ஒலுவில் துறைமுகம்

டென்மார்க் வழங்கிய வட்டிக் கடனில் கட்டப்பட்ட ஒலுவில் துறைமுகத்துக்கு, இன்று வரை ஒரு கப்பல் கூட  வரவில்லை. இப்படி வாங்கிய 678 கோடி (6780 மில்லியன்) ரூபா கடனுக்கு வட்டி கட்டும் அரசு, அதை பத்து வருடத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

மக்களைச்  சுரண்டியும், தேசத்தை விற்றும் தான் கொடுக்கவேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தத் துறைமுகம் 9 மீற்றர் ஆழத்தில் அமைத்துள்ளதன் மூலம், எதற்கும் பயன்படாத துறைமாக வேறு உள்ளது. மக்கள் பணத்தை திருட திட்டமிட்டு நிர்மாணித்ததே, இன்று பெயருக்கு துறைமுகமாகி இருக்கின்றது.

இதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்வதாக கூறி, மக்களை ஏமாற்றவும் முடிகின்றது. இப்படி மகிந்த சிந்தனையிலான அபிவிருத்தி முதல், நடத்தி முடித்த யுத்தம் வரை, கொள்ளை அடித்துக் கொழுக்கவும், பன்னாட்டு நிதி மூலதனத்தை கொழுக்க வைக்கவுமே நடந்தப்பட்டது. இதைத்தான் 722.4 கோடி ரூபாவில் அமைக்கப்பட்ட ஒலுவில் முறைமுகமும் எடுத்துக் காட்டுகின்றது.

இனி கோத்தபாயவின் இராணுவம் தான் கப்பலைக் கொண்டு வந்து நிறுத்தி, அதை அபிவிருத்தியின் வெற்றியாக பிரகடனம் செய்து கொண்டாடவேண்டும். இதன் மூலம் அபிவிருத்தி என்று கோசம் போட வைக்க வேண்டும்.