Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மீதொட்டமுல்ல சத்தியாக்கிரகத்தின் மீது பொலீசார் தாக்குதல்!(படங்கள் இணைப்பு)

கொலான்னாவ மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கு அருகாமையில் சில நாட்களாக நடந்து வந்த சத்தியாக்கிரக போராட்டத்தினை முறியடிக்க பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஆறுபேர் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.

 

இந்த குப்பைமேட்டுக்கு நுளையும் பாதையை மறித்து அமைக்கப்பட்டுள்ள சத்தியாக்கிரக மேடையை அகற்றுமாறு கோரி வெள்ளம்மபிட்டிய பொலிசாரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு இன்று விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது இந்த சத்தியாக்கிரகம் காரணமாக பொது மக்களின் சகஜ வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர். அதனை மறுத்து பிரதேச மக்கள் சார்பில் தோன்றிய வழக்கறிஞ்ஞர் நுவான் போபகே அவர்கள் உண்மையிலேயே இந்த குப்பை மேட்டினால்தான் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுவதாக சுட்டுக் காட்டினார்.வழக்கு விசாரனை நடந்துகொண்டு இருக்கும்போதே  சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்த பொலிசார் அதனை களைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்று இலங்கையில் மக்கள் தமது வாழ்வாதாரத்துக்கான எந்த போராட்டத்தையும் நாட்டில் எந்ந இடத்திலும் நடத்த விடாது இந்த பாசிச அரசு தனது இருப்புக்கரங்களால் ஒடுக்கிவருகின்றதற்கு இதுவும் இன்னும் ஒரு உதாரணம்

 

 

நன்றி - லங்கா விவ்ஸ்