Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

மோடியின் பாசிசம் தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெறுவதைத் தடுக்கவே அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்

இந்திய பாசிசத்தின் வளர்ச்சியானது, இந்திய மக்கள் மீதான ஒடுக்குமுறையாக மட்டும் குறுகிவிடாது. மாறாக அடுத்த ஜந்தாண்டுகளில் தென்னாசியா முழுவதற்கும் பரவும் அதேநேரம், தன்னை நிலைநிறுத்த ஆக்கிரமிப்பு தன்மை கொண்டதாக மாறும். இதன் முதல் பலி பாகிஸ்தானாகவே இருக்கும். இதுதான் கிட்லரின் பாசிச வரலாறும் கூட. 

எப்படி 1930 களில் கிட்லரின் பாசிசம் முழு ஜெர்மனியையும் தன் பின் அணிதிரட்டியவுடன், பிற நாடுகளை ஆக்கிரமித்ததோ, அதே அபாயத்தை அடிப்படையாகக் கொண்டதே இந்திய காவி கார்ப்பரேட் பாசிசவாதமும். உள்நாட்டு நெருக்கடிக்கு தீர்வு காணவும், கார்ப்பரேட் பசிக்கு தீனிபோடவும் அருகில் உள்ள நாடுகளை  ஆக்கிரமிப்பது தான், பாசிசத்தின் அடுத்த இலக்காகும். இதை நோக்கி தான் இந்திய காவி கார்ப்பரேட் பாசிசம் தன்னை முன்னிறுத்திக் கொண்டு கொக்கரிக்கின்றது. கார்ப்பரேட் ஊடகங்கள் யுத்த வெறியை முன்வைத்து யுத்தத்தை நடத்தக் கோருகின்றது.

இந்தியாவில் காவி கார்ப்பரேட் பாசிசம் அமைப்பாகி வரும் இன்றைய சூழலில், கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத வண்ணம், கார்ப்பரேட் நலனை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது. அதேநேரம் பாசிசத்தை தொடர்வதன் மூலம் கார்ப்பரெட்டை கொழுக்கவைக்கும் அடுத்த ஜந்தாண்டு என்பது, பிற நாடுகளை ஆக்கிரமிப்பதன் மூலம் தான் சாத்தியம். முதலில் பாகிஸ்தானையே இந்து பாசிசம் தனது ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கும்.

இதனாலேயே கார்ப்பிரேட்டின் பாகிஸ்தான் பிரதிநிதியான இம்ரான்கான் இந்தியாவில் நடக்கவுள்ள தேர்தலில், மோடி தலைமையிலான காவி கார்ப்பரேட் ஆக்கிரமிப்பை  அடிப்படையாக கொண்ட பாசிசத்தை தோற்கடிப்பதற்கும், எதிர்காலத்தில் இந்து பாசிசத்திடமிருந்து பாகிஸ்தானை காப்பற்றவும் முனைகின்றார். இதனாலேயே அபிநந்தனை விடுதலை செய்ததன் மூலம், உடனடி யுத்தப் பதற்றங்கள் மூலம் தேர்தலை வெல்லும் காவி பாசிச பயங்கரவாத உத்தியை தோற்கடித்துள்ளார். இந்தியா முன்தள்ளிய பாசிச பயங்கரவாத சதியை முறியடித்துள்ளார்.

காவி கார்ப்பரேட் பாசிசமானது முஸ்லிம் வெறுப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் காவி இந்து கார்ப்பரெட் பாசிசத்தின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த, மீண்டும் மோடி தலைமையிலான பாசிசம் தோற்கடிப்படுவதன் அவசியத்தை பாகிஸ்தான் இனம் கண்டு சரியான  ராஜதந்திரத்தைக் கையாண்டுள்ளது. இந்த வகையில் பாசிசத்துக்கு எதிரான வரலாற்று ரீதியான நிகழ்வாக, பாகிஸ்தானின்  இராஜதந்திரம் மாறியுள்ளது.

இம்ரான்கான் தனது உரையில் காவி இந்து பாசிசத்தின் பின்னால் அணிதிரளும் மக்களுக்கு அறிவை புகட்டும் வண்ணம், தற்கொலை தாக்குதல் என்பது இஸ்லாமாக இருக்க வேண்டியதில்லை என்ற உண்மையை, இந்தியாவின் இந்து பாசிட்டுகளின் முகத்தில் அடித்தால் போல் எடுத்துக் கூறியுள்ளார். அதற்காக விடுதலைப் புலிகளின் தற்கொலை தாக்குதலை எடுத்துக்காட்டிய அவர், புலிகளின் தற்கொலை தாக்குதல் மதரீதியானதல்ல என்றார். மாறாக வேறொரு ஒடுக்குமுறை சார்ந்த அரசியலின் வெளிப்பாடாக இருந்ததை எடுத்துக் காட்டியுள்ளார். இதுபோல் காஷ்மீர் தற்கொலைத் தாக்குதல் கூட, காஷ்மீர் மக்கள் மேலான ஒடுக்கமுறைக்கு எதிரான பிரச்சனையே ஒழிய, பாகிஸ்தான் நாட்டினதோ - முஸ்லிம் மக்கள் சார்ந்ததோ அல்ல என்ற அடிப்படை உண்மையை தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார். காவி இந்து கார்பரெட் பாசிட்டுகளின் பொய்களை தனிமைப்படுத்தியுள்ளார்.

தற்கொலைத் தாக்குதல் என்பது எங்கள் தெரிவல்ல, அது உங்கள் ஒடுக்குமுறை சார்ந்த அரசியலின் தெரிவுதான் என்பதை அழகாகவே அம்பலப்படுத்தியுள்ளார். "இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த நான்கு ஆண்டுகளாக நீங்கள் கடைப்பிடித்துவரும் ஒடுக்குமுறைக் கொள்கை. இந்தப் பிரச்சனையை தீர்க்க உதவுமா, மோசமாக்க உதவுமா?" என்று கேட்டதன் மூலம், தற்கொலைத் தாக்குதலுக்கான முழுப் பொறுப்பையும், பாசிச காவி கார்ப்பரேட் மோடி ஆட்சி மீது சுமத்தியதன் மூலம், காஷ்மீர் மக்கள் மேலான ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தினார். அதேநேரம் தற்கொலை இதற்கு தீர்வுமல்ல, இதற்கு தாங்கள் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றார்.

அமைதியின் பேரில் அபிநந்தன் விடுதலையை முன்வைத்ததுடன், இந்திய மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை என்று கூறுமளவுக்கு – காவி கார்ப்பரெட் பாசிசத்தின் யுத்தவெறிக்கு எதிராகவே இந்திய மக்கள் இருப்பதாக கூறி, அவர்களின் நண்பனாக தன்னை முன்னிறுத்தி காவி இந்து கார்ப்பரேட் பாசிசத்தை தனிமைப்படுத்தியதன் மூலம், மக்களை பாசிட்டுகளுக்கு எதிராக விழிப்புறுமாறு கோரியுள்ளார். கார்ப்படே; மயமாகும் பாகிஸ்தானுக்கு தலைமை தாங்கும் நாட்டின் ஆட்சியாளரான இம்ரான்கான், இந்திய காசி கார்ப்பரேட் பாசிசத்தின் ஆக்கிரமிப்பின் கொடூரமுகத்தை கண்டு அஞ்சுமளவுக்கு - சர்வதேச நிகழ்ச்சியாக இந்திய பாசிசம் மாறி நிற்கின்றது.

யுத்தத்தை தூண்டிய இந்திய காவி காப்பரேட் ஊடகங்களின் வெறித்தனத்துக்கு எதிராக   "பாகிஸ்தான் ஊடகத்தின் முதிர்ச்சிபயைப் பாராட்டிய" இம்ரான்கான், "இந்திய ஊடகம் குறித்து இப்படி சொல்ல முடியாது என்பதை நான் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியதுடன் "இந்திய ஊடகம் போரை ஆதரித்து பிரச்சாரம் செய்வது தொடர்ந்து வருவதை சுட்டிக்காட்டியதன் மூலம், இந்திய ஊடகங்கள் காவிமயமாகி கார்ப்பிரேட் பாசிசமாக பரிணமித்துள்ளதை இனம் காட்டியுள்ளார். ஊடக ஜனநாயகத்தை மீறி யுத்தவெறி பிரச்சாரத்தை செய்கின்ற அளவுக்கு, இந்திய பாசிசம் வளர்ந்துள்ளதை இம்ரான்கான் உணர்ந்ததன் வெளிப்பாடு தான், விரைவாக கைதியை விடுவித்ததன் பொருள்.

மறுபக்கத்தில் யுத்தத்தை திணித்து தேர்தலை நிறுத்தவோ அல்லது அவசரகால சட்டத்தைக் கொண்டு நாட்டை பாசிசமாக்க முனையும் புதிய அபாயத்தை, இந்து காவி கார்ப்பரெட் பாசிசம் தன் தலையில் சுமந்து கொண்டிருந்தது. தேர்தலை நிறுத்துவதற்கு பாகிஸ்தானை பயன்படுத்தும் காவி கார்ப்பரேட் சதிகளை தடுத்து நிறுத்தவும், அவசரமாக கைதியின் விடுதலையை பாகிஸ்தான் பயன்படுத்திக்கொண்டது.

இந்திய காவி கார்ப்பரேட் பாசிசம் இந்தியா முதல் தென்னாசியா முழுக்க பரவிவருகின்ற  அபாயகரமான, ஆக்கிரமிப்பு தன்மை கொண்ட ஒன்றாக பரிணமித்து வருகின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் சர்வதேசியத்தின் கீழ் அணிதிரள்வதன் மூலமே, இந்திய காவி கார்ப்பரேட் பாசிசத்தை தடுத்து நிறுத்த முடியும்.