Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

லண்டன் மேதின ஊர்வலத்தில் சமவுரிமை இயக்கம் பங்கேற்பு! - (புகைப்படத்தொகுப்பு!)

லணடனில் நிகழ்ந்த மேதின ஊர்வலத்தில் சமவுரிமை இயக்கம் பங்கேற்றுக் கொண்டது. இந்த நிகழ்வு பிரித்தானிய இடதுசாரிய கட்சிகளினாலும், புலம்பெயர்ந்து வாழும் பல்லின நாட்டு கம்யூனிஸ்டுக்களாலும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. சமவுரிமை இயக்கத்தினருடன் முன்னிலை சோசலிசக் கட்சியும் ஒன்றிணைந்து இந்த ஊர்வலத்தில் பங்கு கொணடது. "புதிய திசைகள்" அமைப்பின் உறுப்பினர்களும் சமவுரிமை இயக்கத்தின் அழைப்பினை ஏற்று, சமவுரிமை இயக்கத்துடன் சேர்ந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

"லலித், குகனை விடுதலை செய்"

"வடக்கு கிழக்கிலிருந்து ராணுவத்தை அகற்று"

"வடக்கு கிழக்கு மக்களின் நிலங்களை அபகரிக்காதே"

போன்ற பல கோசங்களை எழுப்பிச் சென்றனர். கூடவே கீழேயுள்ள  உள்ள கோசங்களை கொண்ட பதாகைகளும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

1. Abolish military rule in North & East

2. Let us fight for peoples' right to live

3. Let us align against the pillage of lands in North & East

4. Release forthwith all political prisoners

5. Let us fight against abductions and disappearances

6. Let us defeat national oppression, fight for equal rights

7. Let us fight for the rights of all nationalities.

8. Defeat all forms of chauvinism to achieve national unity