Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாதத்தினை முறியடிக்க "சம உரிமை இயக்கம்" சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுக்கும் வேலைகள் குறித்து ஒஸ்லோ கூட்டத்தில் தோழர் குமார் விளக்கவுரை ஆற்றினார்.

ஒஸ்லோ, நோர்வே சமவுரிமை இயக்க அங்குரார்பண மற்றும் கொள்கை விளக்கக் கூட்டம்  நேற்று வியாழக்கிழமை 28.03.13 அன்று நடைபெற்றது. தோழர்கள்  ஐவன் மற்றும் கேதீஸ் ஏற்பாட்டில் லோரன்ஸ்ஸ்கொக் பிரதேச மண்டபத்தில் நடைபெற்ற கூட்டடத்திற்கு தோழர் தங்கன் தலைமை தாங்கினார். தோழர் சிறிகரன் நோர்வே சமவுரிமை இயக்கத்தின்  எதிர்கால வேலைகளை பற்றியும், இனவாதத்துக்கு எதிராக அனைவரும் இணைந்து செயற்படுவது பற்றியும் தனதுரையில் வலியுறித்தினார்.

அதன் பின் உரை சிறப்புரையாற்றிய முன்னிலை சோஷலிச கட்சியின் தலைமை உறுப்பினர் தோழர் குமார் குணரத்தினம், சமவுரிமை இயக்கத்தின் கோட்பாட்டியியல்  அடிப்படை, நடைமுறையில் இலங்கையில் எவ்வாறு இனவாதத்துக்கு  எதிராக சமவுரிமை இயக்கம், சிங்கள மக்களிடையே பிரசார வேலைகளை முன்னெடுகின்றது போன்ற விடயங்களை விளக்கினார். அதன் பின் நீண்ட அரசியல் உரையாடலும் விவாதமும் நடைபெற்றது. தோழர் ஐவனின் நன்றியுரையுடன் நிறைவு பெற்ற நிகழ்வில் பல தரபட்ட அரசியல் குழுக்கள், அமைப்புகள் சார்பின் அவற்றின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர் என்பது சிறப்பாக குறிப்பிட தக்க விடயம்.