Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

NGOக்களும் சுயநிர்ணய உரிமைகளும்

கடந்த மாதம் செப்டம்பர் 23ம் திகதி அன்று Brussel நகரில் யூரோப்பியன் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள போல்கென்றி ஸ்பாக் கட்டிடத்தில் (7வது மாடி BLOCK: C) அறை எண் 50-ல் IBON International என்ற சர்வதேசிய NGO (பிலிப்பைன்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட) அமைப்பினரால் ஜனநாயகம், சுயநிர்ணயம் மற்றும் மக்கள் விடுதலை என்ற தலைப்பில் ஒரு அரங்க கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

பல்வேறு அரசு சார நிறுவனங்களும் (NGO) இந்நிகழ்வுக்கு நிதி உதவி வழங்கிய அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்தன. IBON அமைப்பே அழைப்பிதழையும் நிகழ்ச்சி நிரலையும் தொகுத்திருந்தது.

இந்த NGO அமைப்பான IBON-ன் செயற்பாடுகளில் தனது பிரதான இலக்காக

1.மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் இவற்றுடன் உலகம் முழுவதுமுள்ள மக்கள் இயக்கங்களின் திறனை மேம்படுத்துவது.

2.கொள்கை கூட்டு அடிப்படையில் சிவில் சமூகம், அரசாங்கம் மற்றும் நிதி உதவி வழங்கி ஒத்துழைப்பவர்கள் மத்தியில் மூலோபாய வேலை உறவுகளை கட்டியெழுப்புவது

இவையையே தனது அடிப்படை இலட்;சியமாக கொண்டிருப்பதாக IBON அமைப்பு அறிவித்திருக்கிறது.

மேலும் சர்வதேசிய ரீதியில் பல்வேறு NGO-க்களுடன் கூட்டிணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. ஜரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து நிதி உதவி பெற்று வருகிறது. சுற்றுபுறச் சூழல், உணவு பாதுகாப்பு, சிவில் சமூகங்களை செயல்பட வைப்பது என்பதுடன் தேசிய அரசியல் நீரோட்டத்தில் “ஜனநாயக” முறையில் தேர்தல்களை நடத்தி “வாக்குரிமை” உரிமையை மக்களிற்கு வழங்க செய்வதில் “உறுதிப்படுத்தல்” என்பனவற்றில் ஈடுபாடு செலுத்தி வருகிறது. தேர்தல் சீர்திருத்தங்கள் வாக்காளர்களின் செலவை அரசே ஏற்றுக் கொள்ள செய்தல் என்பனவற்றில் கருத்துருவாக்கத்தை உருவாக்கி வருகின்றது. தனது IBON Fundation மூலமாக பல்வேறு வெளியீடுகளை கொண்டு வந்துள்ளது.

பிலிப்பைன்ஸில் நடக்கும் உள்நாட்டு சண்டையில் பிலிப்பைன்ஸ் ஜனநாயக முன்னணி அமைப்புக்கும் பிலிப்பைன்ஸ் அரசுக்கும் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்துவதற்கு அணுசரணையாளராக நோர்வே அரசை சமாதான தூதுவராக நியமிக்கப்பட்டதற்கும் IBON பிண்ணணியாக இருந்துள்ளது. இதனால் பிலிப்பைன்ஸில் மக்கள் அமைப்புக்களிற்குள் மற்றும் சர்வதேசியத்தில் ஏற்பட்ட பிளவுகளை பிரிதொரு கட்டுரையில் பார்ப்போம்.

ஜநா மன்றத்தில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் ஜீலை 4, 1976 முதல் பொதுவாக அழைக்கப்படும் “அல்ஜீரிய பிரகடணத்தின்” சமகால பொருத்தப்பாடும் அதன் போதாமையை வலியுறுத்துவதுமானதாகவே இந்த ஜனநாயகம், சுயநிர்ணயம் மற்றும் மக்கள் விடுதலை என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.

IBON அமைப்பின் துணை சர்வதேச இயக்குனர் அமி. வி. படில்லா தனது அறிக்கையில் கூட்டத்தின் நோக்கம் என்பது

• கூட்டு உரிமைகள், சுயநிர்ணய மற்றும் விடுதலை

• பொருளாதார, ஜனநாயகம், பெண்கள் விடுதலை மற்றும் அமைப்பு மாற்றம்

• அரசானது மக்களின் கூட்டு உரிமைகள் மற்றும் மக்களின் எதிர்ப்பு உரிமைகளை சட்டரீதியாக பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இன்றைய சூழலில் புதிய உத்திகள் மற்றும் ஆய்வுமுறை புதிய பொருளாதார சூழலில் அரசியல் இராணுவம் இவற்றின் வளர்ச்சியால் மக்களின் உரிமைக்கு எதிரான சித்தாந்த தாக்குதலுக்கு எதிராக எவ்வாறு பொருளாதார மற்றும் சுயநிர்ணய மற்றும் விடுதலை அரசியலின் பார்வையை உருவாக்குவது வளர்த்தெடுப்பது என்பதாகவே இந்த கூட்டத்தின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

ஜநா பொதுச்சபை தீர்மானம் 1514 “அல்ஜீரிய பிரகடனமானது” மனித உரிமைகளையும் மக்களின் இருப்பை உள்ளடக்கியதாக உள்ள அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் சுதந்திரத்தையும் சிறுபான்மையின மக்களின் உரிமையை அந்த நாட்டிற்குள்ளேயே பெறக்கூடியதாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

மேலும் அனைத்து மக்களின் சுயநிர்ணய உரிமை, சுதந்திரமாக தனது அரசியல் நிலைமையை தீர்மானிக்க மற்றும் சுதந்திரமாக தமது பொருளாதார, சமூக கலாச்சார வளர்ச்சியை தொடர வேண்டும் என்றும் மோதல்கள் மற்றும் முரண்பாடுகளின் மத்தியில் ஒரே நேரத்தில் நம்பிக்கையுடன் மற்றும் ஆழமான அவநம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்…

அதே நேரத்தில் விடுதலைப்போராட்டத்தின் வெற்றியானது உலக மக்கள் மத்தியில் ஏகாதிபத்தியத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேசிய கூட்டமைப்புகளுக்கு எதிராகவும் காலனித்துவ அமைப்பின் ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும் உலக மக்கள் விழிப்படைந்து வெற்றி பெற்ற போதும்…

புதிய வடிவங்களில் ஏகாதிபத்தியம் உலக மக்களை அடக்கு முறைகள் மூலம் ஏவியும் சுரண்டியும் வருகிறது. உலக மக்கள் மத்தியில் வெறுப்பையும் தோல்வியையும் ஏற்படுத்துகிறது…

உலக மக்கள் அனைவரும் எந்த வெளிநாட்டு தலையீட்டில் இருந்தும் தங்களை விடுவித்து தங்களின் சம உரிமைகளை சுதந்திரம் மற்றும் தங்களுக்கான சொந்த அரசை உருவாக்கி கொள்வது…

என விரிந்து செல்லும் ஐ.நா வின் “அல்ஜீரிய பிரகடனத்தின்” போதாமையை இன்றைய சூழலில் எவ்வாறு மாற்றியமைப்பது அல்லது திருத்தங்களை கொண்டுவருவது என்பதை ஒட்டிய விவாதமாகவே IBON- னும் அதனுடைய நிகழ்ச்சிதார NGOகளின் நோக்கமாக இருந்தது.

IBON அமைப்பிற்கு நிதியுதவியும் ஆதரவும் அளித்துவரும் ஜரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் (GUE/NGL) மனித உரிமை, பெண்உரிமை, சுற்றுப்புறச்சூழல், பால்வேறுபாடு போன்றவற்றிற்கு குரல் கொடுத்து வருகிறார்கள். தங்களுடன் இணைந்து கொள்பவர்களை வைத்து ஒரு அமைப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். (இது ஒரு கதம்பமான வானவில் கூட்டணி) NGOக்களுடன் இணைந்து எவ்வாறு மக்கள் இயக்கங்களை கடத்தி செல்வது என்பதை நன்கு அறிந்தவர்கள் இவர்கள். (விரிவான கட்டுரை விரைவில் வெளிவரும். “போலியான எதிர்ப்பை உருவாக்கும் தந்திரங்கள்”. ஆங்கிலத்தில் உடன் வாசிக்க “Manufacturing Dissent”: The Anti – Globalization movement is funded by the corporate Elities – Prof Michel Chossudovsky)

IBON அமைப்பின் துணை அமைப்பான ரியாலிட்டி ஒப் எய்ட் அமைப்பிற்கு Ford Foundation இடமிருந்து பத்து ஆண்டுகளிற்கு மேலாக நிதி வந்துள்ளது. IBON நடத்திய நிகழ்வை அதிர்வு இணையமும், தமிழ்நெட் இணையமும் செய்திகளாகவும், அறிக்கைகளையும், நிகழ்ச்சி நிரல்களையும் வெளியிட்டு இருந்தன. NGO அமைப்பான IBON நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் கலந்து கொண்டவர்களில் (உரை நிகழ்த்தியவர்கள்) ஜக்கிய ராஜ்ஜியத்தை சேர்ந்த இனியொரு.காம் ஆசிரியர் சபா. நாவலன் என வெளியிட்டிருந்தது. ஆத்துடன் NGO அமைப்பில் திரு சபா நாவலன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவத்தையும் பிரசுரித்திருந்தது.

மற்றுமொரு NGO இணைய தளத்தில் IBON நிகழ்ச்சி அறிக்கையில் திரு. சவரத்தினம் நாவலன் தமிழர் நடுவர் மனித உரிமையகம் ஜக்கிய ராஜ்ஜியம் என குறிப்பிட்டுள்ளது.

தமிழர் நடுவர் மனித உரிமையகம் தாம் ஒரு மனித உரிமையமைப்பு எனவும் அது சர்வதேசிய NGOக்களுடன் நெருங்கிய உறவை பேணி வருவதாகவும் மற்றும் ஜநா நிறுவனங்களுடனும் குறிப்பாக மனித உரிமைக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசின் செயல்பாடுகளை வெளிக்கொணர்வதில் ஒன்றிணைந்துள்ளது எனவும் கூறுகிறது.

அழைப்பிதழ் பெயர் குழப்படியினால் “நான் அவனில்லை” என பிரச்சனை வராமல் புகைப்படத்தை வெளியிட்டு தமிழ் மக்களின் துயரத்தை நீக்கி விட்டன அதிர்வு இணையமும், தமிழ்நெட் இணையமும்.

திரு சபா. நாவலன் NGO அரங்கில் வாசித்த அறிக்கையின் சுருக்கம்:

இந்த குரல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதும் சுயநிர்ணய உரிமைக்காக போராடியவர்களுக்குமானது என தொடங்குகிறார்.

வெளிநாட்டு உதவிகள் எதிர்பார்த்து வன்னியில் விடுதலைப் புலிகள் உட்பட மூன்று லட்சம் மக்கள் முடக்கப்பட்டிருந்ததையும் இன்று வன்னி சர்வதேச பயங்கரவாதத்தின் விளைநிலமாக மாறிவிட்டதையும் ஜநாவின் அறிக்கையின் படி 70000 மக்கள் ஒருசில நாட்களில் மே-2009-ல் சிங்கள பேரினவாத இனப்படுகொலையாளர்களால் இனசுத்திகரிப்பு செய்ததையும் பயங்கரவாதத்தை துடைத்து விட்டதாக வெளியுலகிற்கு தெரிவித்து வருவதையும் குறிப்பிடுகிறார். சிங்களம் இந்த நாட்டில் புத்த அரசின் மேலாதிக்கத்தை குறிக்கின்றது எனவும் பெரும்பான்மை சிங்கள அரசு அடக்குமுறைக்கு எதிரான 30 ஆண்டு கால தேசிய இனப்போராட்டத்தை இனப்படுகொலை மூலம் துடைத்தெறிந்து விட்டது என குறிப்பிடுகின்றார்.

இனப்படுகொலை வெற்றியானது “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என கொண்டாடப்படுவதையும், சுயநிர்ணயத்திற்க்கான ஆயுத போராட்டத்தை ஒருபுறம் இந்தியா தனது விரிவாக்கத்திற்காகவும் மறுபுறம் தமிழ் மக்கள் மீது அமெரிக்கா, ஜரோப்பிய நாடுகள் தமது அனுதாபத்தையும் ஆதரவையும் வழங்கி வந்தன. விடுதலைப்புலிகள் மற்றும் பிற தமிழ் அமைப்புக்கள் இந்த நாடுகளை நம்பின. இந்திய உளவு அமைப்பு மற்றும் மேற்கு நாடுகள் இலங்கை அரசிற்கு எதிராக இவர்களுக்கு ஆயுதம் மற்றும் பயிற்சி அளித்து வந்தன எனவும் குறிப்பிடுகிறார்.

அடிப்படையில் உலகமயமாக்கலுக்கு முந்தைய தேசியவாத சகாப்தம் பற்றி கேள்வி எழவேண்டும் என்கிறார்.

வரலாற்று ரீதியில் சுயநிர்ணயம் உருவானதை பற்றியும் ஜரோப்பாவில் தேசிய உருவாக்கம் குறிப்பாக பிரான்சு, இத்தாலியில் எவ்வாறு பல மொழிகள் ஒழிந்து ஒரே மொழியாக்கப்பட்டதன் வரலாற்றைப் பற்றியும் பிரிட்டனில் தேசிய பொருளாதாரம் எதுவும் இல்லை எனவும். தேசிய சுயநிர்ணய உரிமை மற்றும் தேசியம் ஜரோப்பாவில் கடந்து விட்டவையாகும் எனவும் முதலாளித்துவ பிறப்பு அமைத்த இன தேசியம் இப்போது போய்விட்டது எனவும் குறிப்பிடுகின்றார்.

ஜரோப்பாவில் தேசியவாதம் ஒரு சமூக விரோத கருத்தாக மாறியதுடன் தேசியவாதம் ஒரு பாசிச போக்காக காணப்படுவதாகவும் அடிப்படையில் இந்த தேசியவாதம் நாஜி எண்ணங்களையும் அதன் வேர்களையும் கொண்டிருக்கிறது எனவும் குறிப்பிடுகின்றார்.

மேலும் உயர் நடுத்தர வர்க்கத்தில் மேலெழும் சக்திகள் எவ்வாறு தேசிய இனப் போராட்டத்தை கையில் எடுக்கின்றன என்பதையும் இவை பெரும்பாலும் ஏகாதிபத்திய ஆதரவு சக்திகளாகவே இருக்கின்றன எனவும் குறிப்பிட்டு, எனவே தேசியப்போராட்டத்தில் சிலகட்டத்தில் ஒரு சமூக விரோத இயக்கமாக மாறிவிடுகின்றது எனவும் இந்த இயக்கங்கள் ஒரு பாசிசத் தன்மையை பெறச் செய்துள்ளது எனவும் விவரிக்கின்றார்.

இந்த பின்னணியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு ஒரு சில ஆண்டுகளிலேயே பாசிச மற்றும் மக்கள் விரோத அமைப்பாக மாறியது என்பதையும் இளம் உயிர்கள் ஆயிரக்கணக்கில் இழந்தும் 30 ஆண்டு கால போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்களை இழந்திருக்கின்றோம் என்பதையும் குறிப்பிடுகின்றார். (புலிகள் குறித்த இந்த பகுதி தமிழ்நெட் இணையத்தில் நீக்கப்பட்டுள்ளது)

மேலும் சுயநிர்ணய உரிமை போராட்டங்களை மக்களை மையப்படுத்தி எவ்வாறு தொடரப் போகிறோம் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சபா. நாவலன் NGO கருத்தரங்கில் பங்கு பற்றி மேற்குறித்தவாறு உரை நிகழ்த்தி இருப்பினும் இனப்படுகொலையில் இந்தியாவின் பங்களிப்பை பற்றி விவரிக்காமலே கடந்து செல்வதும் தேசிய இனப்போராட்டத்தின் கருத்துருவாக்கத்திற்கு எதிரான கருத்தாக்கங்களை NGO அமைப்புக்கள் எவ்வாறு கட்டமைக்கின்றன என்பதை பற்றி குறிப்பிடாமலேயே கடந்து செல்வது வியப்பளிக்கின்றது! (NGO அரங்கில் “எல்லா”வற்றையும் பேசிவிட முடியாது தானே?)

மேலும் திரு சபா நாவலனின் “தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி” என்ற நூலின் முன்னுரையில் தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் “நாவலனின் கருத்துப்படி முறையான சந்தை வளர்ச்சி மட்டும் இலங்கையில் உருவாகியிருந்தால் இன்று அங்கே தேசிய முரண்கள் இருந்திருக்காது என்பது மட்டுமல்ல இலங்கை முழுவதும் ஒரே மொழி பேசுகிற ஒரே தேசிய இனமாகவும் கூட இருந்திருக்கும்” என கூறியுள்ளார்.

தற்போது இதே பிரச்சனையை பிரான்சு, இத்தாலி பற்றிய மாறுபட்ட கண்ணோட்டத்தை கொண்டுள்ளார். NGO அரங்கில் அவர் வாசித்த முழு அறிக்கை தமிழ் சூழலில் வெளிவரும் என எதிர்பார்ப்போம்?

NGO எதிர்ப்பாளர்களாக தங்களை முதன்மை படுத்திய நபர்கள் இன்று NGO க்களின் நிகழ்ச்சி நிரலில் இருப்பது என்பது இவர்களை நன்கு அறிந்தவர்களுக்கு வியப்பளிப்பதாக இருக்காது. இந்திய அரசின் “நாச்சியப்பன்” வகையராக்களும், ஜரோப்பிய ஒன்றிய NGOக்களினதும், புறங்கையை NGOகளிடம் நக்கிக் கொண்டே மக்கள் போராட்டங்களை ஒடுக்கி NGO சாயம் பூசும் பாசிச ராஜபக்ச அரசின் நிகழ்ச்சி நிரல்களில் உள்ள ஒற்றுமையும் மூலோபாயமும் ஒன்றானதே!!

-யோகேந்திரன்

IBON (NGO) கூட்டம் தொடர்பான அழைப்புக்கள் பேச்சாளர்களின் பேச்சுக்களை இங்கு அழுத்தி பார்க்கவும்

உசாத்துணை :

1) http://www.iboninternational.org/page/whats_new/236

2) https://www.facebook.com/IbonFoundation?fref=ts

3) http://www.ibon.org/

4) “Manufacturing Dissent”: The Anti-globalization Movement is Funded by the Corporate Elites

The People's Movement has been Hijacked

By Prof Michel Chossudovsky

http://www.globalresearch.ca/manufacturing-dissent-the-anti-globalization-movement-is-funded-by-the-corporate-elites/21110

5) http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=5706

6)http://www.tamilnet.com/img/publish/2013/09/Conference_on_Democracy,_Sel- Determination_and_Liberation_of_Peoples_.pdf

7) http://www.iboninternational.org/page/whats_new/236

Conference on Democracy, Self-Determination and Liberation of Peoples September 23, 2013, pussels, Belgium - See more at: http://www.iboninternational.org/page/whats_new/236#sthash.IRalVdgs.dpuf

8) http://ifprs.org/index.php/pussels-conference-2013/64-collective-rights-in-situations-of-conflict

9) http://ifprs.org/index.php/pussels-conference-2013/66-time-for-peace-is-now

10) http://ifprs.org/index.php/pussels-conference-2013/62-21st-century-movements-for-democracy-self-determination-and-liberation-of-peoples

21st Century Movements for Self-Determination: The Sri Lankan Case Study

Savaratnam Navalan

Tamil Center for Human Rights

23 September 2013

This voice is raised on behalf of a people who were discriminated against, fighting for their rights to self-determination.

11) http://www.tamilnet.com/art.html?catid=79&artid=36707

தமிழ் நெட் இணையத்தில் விடுபட்ட பகுதி

This is in this background to understand why the Liberation Tigers of Tamil Eelam (LTTE) which became as a fascist and anti-social movement within few years of its formation, were decimated after 30 years of struggle, losing thousands of young lives for the cause

12) "Human rights and humanitarian law have acquired a special significance for the Tamil people. The Tamils are a Fourth Worldnation - a nation without a state. Existing states do not readily surrender control of territory which they claim as their own - in addition, they often find common cause in securing each other's territorial boundaries. Unsurprisingly, the Tamil people, like many other peoples of the Fourth World, have often turned to the growing body of international human rights law and humanitarian law, and to

non governmental

organisations for support for their struggle against alien rule and for recognition as a people with the right to freely determine their political status."

http://tamilnation.co/tamileelam/tchr/index.htm

13) http://peaceinkurdistancampaign.wordpress.com/2013/10/04/conference-on-democracy-self-determination-and-liberation-of-peoples/

14)http://www.mesop.de/2013/08/27/conference-on-democracy-self-determination-liberation-of-peoples/

15) http://ifprs.org/index.php/pussels-conference-2013/68-struggle-for-collective-rights

Struggle for Collective Rights

Amy V. Padilla

Deputy International Director, IBON International Conference on Democracy, Self-Determination and Liberation of Peoples European Parliament, pussels, Belgium

16) http://www.tchr.net/rsdetr_stat.htm

17) http://www.tchr.net/aboutus_introduction.htm

¨ By working in co-operation with all human rights bodies such as the UN Commission on Human Rights and the Sub~Commission on Promotion and Protection of Human Rights, Treaty bodies, the OHCHR and NGOs.

18) http://www.ccic.ca/_files/en/what_we_do/002_aid_roa_2004-08_network_update.pdf

For 10 years the Reality of Aid network has benefited from generous grants from the Ford Foundation, as well as smaller contributions from a number of CSOs. Members of the network make substantial in-kind contributions. But the Ford Foundation has indicated that no further funding is possible VIII The Reality of Aid 2002

The Reality of Aid is written by authors from NGOs worldwide whose research draws on knowledge and expertise from aid agencies, academia, community-based organisations and governments. We would like to thank those who have generously contributed their knowledge and advice.

The editors would particularly like to thank the staff at the Statistics Department of the Development Cooperation Directorate of the OECD, and especially pian Hammond, Simon Scott and Rudolphe Petras, for their help in understanding data on Official Development Assistance. However responsibility for any errors of fact or interpretation lies with the Reality of Aid.

Reality of Aid is funded primarily by the Ford Foundation and the participating NGOs. It is also most grateful to have received support from UNDP and the Danish Ministry of Foreign Affairs.

18) http://www.realityofaid.org/wp-content/uploads/2013/02/RoA-Report-2002-Table-of-Content.pdf

19)http://www.realityofaid.org/

20) தேசிய இன பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி -சபா.நாவலன் (பக்கம் 3)