Tue10272020

Last updateSun, 19 Apr 2020 8am

கிரேக்கத்தில் இடதுசாரிகளின் ஆட்சி??

கிரேக்க  இடதுசாரி கட்சியான - SYRISA கிரேக்கப் பாராளுமன்ற தேர்தலில் பாரிய வெற்றியைடையும் என்று தற்போது வெளிவந்துள்ள கருத்துக் கணிப்புகள் தெரிவிகின்றன.

இன்று பிற்பகல் ஆறு மணியுடன் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவுக்கு வந்தவுடன் மேற்படி கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அக் கருத்துக் கணிப்பின் படி 35இக்கும் 39.9 விகிதத்துக்கும் இடையிலான வாக்குகளை, கிரேக்க இடதுசாரி முன்னணியான - SYRIZA பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இக்கருத்துக் கணிப்பு சரியாக அமைந்தால், SYRIZA   கிரேக்கத்தில் ஆட்சி அமைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. 

ஐரோப்பிய இடதுசாரியமும் - SYRIZA வும் - சிறுகுறிப்பு

சோவிஜெட் வீட்சியின் பின் ஐரோப்பாவில் இடதுசாரியம் பாரிய வீட்சியைக் கண்டது. ஏற்கனவே பல சீரழிவுகளாலும் , தத்துவார்த்த முரண்பாடுகளாலும் பலமிழந்திருந்த இடதுசாரியம் 90 களின் நடுப்பகுதியில் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு முன்னேற முயன்றது. சுய விமர்சனங்கள் , மார்க்ஸ்சிஸ மறு ஆய்வுகள்- தத்துவார்த்த விமர்சனங்கள், புதிய செயற் தந்திரங்கள்- குறிப்பாக அதிகாரமும் - ஜனநாயகமும் பற்றிய புதிய வேலை முறைகளை இடதுசாரிகள் விவாதித்தனர். இவ் விவாதங்கள் சில நாடுகளில் , குறிப்பாக ஐரோபிய நாடுகளில் இடதுசாரிய அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்டது.

டென்மார்க் , நோர்வே, ஸ்வீடன் , கிரீஸ் போன்ற நாடுகளில் புதிய இடதுசாரியக் கட்சிகள் உருவாயின. இவை வழக்கமான இடதுசாரியக் கட்சிகள் போல் அல்லாமல்- சோசலிசம் பற்றிய பலவிதமான கொள்கைகளைக் கொண்ட- மாவோஇசக் கட்சிகள் தொடக்கம் தட்ரொட்ஸ்கியக் கொள்கைகளைக் கொண்ட கட்சிகளும், வெகுசன அமைப்புகளும், இதில் பங்கு கொண்டன. இதில் பங்கு கொண்ட கட்சிகள் தமக்கு இடையிலான கருத்து வித்தியாசங்களை விவாதித்தபடி - மக்கள் தேவைகளின் அடிபடையில், சமூக போராட்டத்தை- மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் இயக்கங்களாகவே இப் புதிய இடது சாரியக் கட்சிகள் உருவாகப்பட்டன. அத்துடன் தேர்தலிலும் பங்கு கொள்வதற்கான தேர்தல் முன்னணியாகவும் உபயோகிக்கப்பட்டது.

இவற்றில் முதன் முதலில் மக்கள் மத்தியிலும், பாராளுமன்றத் தேர்தல்களிலும் அரசியல் ரீதியான வெற்றியைக் கண்டது (1994) டென்மார்க்கின் இடதுசாரிய முன்னணியான Enhedslisten – De Rød-Grønne (Unity List – The Red–Greens ) என்ற கட்சியாகும் . இன்றும் ஆளும் வர்க்கத்துக்கு - அதன் நவதாராள பொருளாதர அரசியலுக்கு எதிரான சக்தி வாய்ந்த கட்சியா விளங்குகிறது Enhedslisten – De Rød-Grønne .

டென்மார்க் இடதுசாரிய அரசியலில் சிறு வளர்ச்சி ஏற்பட்டுப் பத்து வருடங்களின் பின் -2004 இல் கிரீஸ் நாட்டில் இடதுசாரிகளுக்கு இடையிலான கூட்டு உருவானது. கிரீசின் பொருளாதார வீட்சி, ஐரோப்பிய ஒன்றியத்தின் / ஜேர்மன் அகங்காரவாத அரசியல் மாற்றும் இவரிற்கு எதிராக கிரீஸ் மக்கள் கிளர்ந்தெளுந்தமை போன்ற மூன்று முக்கிய விடயங்கள் இடதுசாரிகளின் கூட்டை கிரீசில் உருவாகக் காரணமாகியது. Synaspismós Rizospastikís Aristerás / Coalition of the Radical Left என்று அழைக்கப்படும் இந்த இடதுசாரிகளின் கூட்டமைப்பானது, பல இடதுசாரிய கட்சிகள் , மக்கள் அமைப்புகள் , தொழிற்சங்கங்களின் தேர்தல் கூட்டமைப்பாக மட்டுமல்லாமல், மக்கள் போராட்டத்தை தலைமை தங்கும் முன்னிலைச் சக்தியாகவும் இயங்குகிறது.