Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பாராளுமன்ற தேர்தல் உற்சவ அழைப்பிதழ்!

செய்திக் கண்ணோட்டமும்! 14.03.10

அன்புடையீர்!

நிகழும் விரோதி வருடம், திருவள்ளுவர் ஆண்டு, பங்குனித் திங்கள் 26-ம் நாள் (8-4-2010) அவிட்ட நட்சத்திரத்துடன் கூடிய பஞ்சமி – மரணயோகத்தில் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வைபவம் நடைபெறவுள்ளது.

வைபவத்திற்கு இலங்கையின் 18-வயதிற்கு மேற்பட்ட வாக்காளர் பட்டியலில் பதிவுள்ள சகலரும் தங்க்ள் சுற்றம் சூழ, அக்கம் பக்கத்திலுள்ள வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்து, வாக்களித்து எம்மை மகிழ்வித்தேகும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

வாக்களிக்கும் சுபநேரம்: காலை 8-மணி முதல், மாலை 5-மணி வரை

இங்ஙனம்
தங்கள் நல்வரவை நாடும்

அரசியல் கட்சிகளும்
சுயேட்சைக் குழுக்களும்

இவ்வழைப்பிதழ்கள் தற்போது நாட்டின் 196-தொகுதிகளிலும் மக்களுக்கு – பாராளுமன்ற ஜனநாயகத்தின் பால் ஈர்க்கப்பட்டுள்ள 8,000-ற்கு மேற்பட்ட (“மனநோயாள”) வேட்பாள பெருந்தகைகளால், கொடுக்கப்பட்டு வருகின்றன. வீடுகளுக்கு வரும் (பரிதாபத்திற்குரிய) பெரும்பாலான வேட்பாளர்களை மக்கள் அனுதாபக்கண் கொண்டு, அனுப்பி வைக்கின்றனர்.

வீட்டிற்கு வரும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் என்னதான் சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தையே “மகிந்தப்பவர்” கொண்டு கூட்டுவித்துள்ளோம். மக்களிடம் இனி எப்பயங்கரவாதமும் வராவண்ணம் தடுத்துள்ளோம், இதைவிட உங்களுக்கு என்ன வேண்டும் என்கின்றார்கள். தேர்தலில் எங்களுக்கே மூன்றில் இரண்டு. அடுத்த புதுப் பாராளுமன்றத்தில், தமிழ்மக்களுக்கு 13-வதில் புதியதாக புதுமையாக ஏதாவது செய்வோம் கொடுப்போம் என்கின்றனர், அரசதரப்பும் அவர்களின் காலடியில் கைகட்டி – வாய்பொத்தி நிற்கும் “சுயேட்சைகளும்” வடக்கின் வசந்தங்களும், கிழக்கின் விடிவெள்ளிகளும். அரச எதிர்ப்பாளர்களும, தமிழ்த் தேசியவாதிகளும்

ஜனாதிபதித் தேர்தல் வேறு, பாராளுமன்றத் தேர்தல் வேறு அன்று பொன்சேகா – ஜே.வி.பி தேவையே. இன்று அது தேவையில்லை. அரசியலில் நிரந்தர எதிரி – நண்பன் என்ற ஒன்று இல்லைத்தானே. இனிவரும் காலங்களில் நிலைமைகளுக்கேற்ப இச்சூத்திரத்தை நாம் பிரயோகிப்போம். நாம் ஆட்சிக்கு வந்தால், அரசு தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன சொல்லியுள்ளதோ, அதை இரட்டிப்பாகச் செய்வோம் என்கின்றது ரணிலின் கூட்டணி.

தமிழ்மக்களின் தாகம் இப்பவும் தமிழ் ஈழத்தாயகமே! தாத்தா முதல் பேரனான “நான்வரை” எங்கள் தனித்துவத்தையும (உயர்-இந்து-மேட்டுக்குடி-வேளாள சிந்தனை) தமிழ்ஈழத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். எனவே போடுங்கள் புள்ளடி சைக்கிலுக்கு என்கின்றது பொன்னம்பலக்கூட்டணி.

ஓஸ்லோ பிரகடனமே தமிழ்மக்கள் பிரச்சினைக்கு தீர்வு! அதற்கு கூடினாலும் குறைந்தாலும் ஏற்கோம் என்கின்றது தமிழர் கூட்டமைப்பு.இது இல்லையேல் போராட்டமே என்கின்றது.

புதிய ஜனநாயக கட்சி – சிறுபான்மைத் தமிழர் மகாசபை

ஜனாதிபதித்தேர்தல், அது அண்மைய இரண்டு மூன்று மாதத்தைய “வரலாற்றுச் சூழல்” எனவே அச்சூழலில் அதை நிராகரிக்கச் சொன்னோம். வாக்குகளைச் செல்லுபடியற்றது ஆக்குவது எப்படி என்று மக்களுக்கு “றெயினிங்” கொடுத்தோம்! இது பாராளுமன்றத் தேர்தல், இதில் புரட்சிகர வெகுஜனப்போரை, புதிய ஜனநாயகப் புரட்சியை, உள்ளும் புறமும் நடாத்தலாம். எனவே தேர்தலில் பஙகுபற்றுகின்றோம் என்கின்றது புதிய ஜனநாயக்கட்சி.

“ஓர் தேர்தல் நாடிபிடிப்பாக,” தேர்தலில் போட்டியிடப் போகின்றோம் என (புலி வருகுது, புலி வருகுது) அறிக்கை விட, அது நிஜமாகி விட்டது! ஒருவருமே கண்டுகொள்ளவில்லை. என்கின்றார்; மகாசபையின் பிரச்சாரப்புலி தெணியான். கடந்த 30-வருட காலத்தில் மகாசபை சிதைந்துவிட்டது. இத்தேர்தலுக்கு ஊடாக புனர்நிர்மாணம் பெறும். மகாசபை என்றால் தாழ்த்தப்பட்ட மக்களே!, தாழ்த்தப்பட்ட மக்கள் என்றால் மகாசபையே! தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவிற்கு மகாசபை கடந்த 60-ஆண்டுகளாக (யாரின் உதவியும் இன்றி, உந்த எஸ.ரி.என் டானியல் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம், ஒன்றுமே இல்லை) போராடி விடிவெடுத்தது. அப்போராட்டங்களின் தியாகங்கள் தளும்புகள் கொண்டவர்களின் வழிவழித் தோன்றல்களே தேர்தல் போட்டியை எதிர்கொள்கின்றனர். வெற்றி நமதே என்கின்றார் தெணியான்.

சிந்தனை மைய வாசகர்களே! இந்த வரலாறு மிக்க பாராளுமன்றத்தேர்தலின், அதன் கட்சி சுயேட்சை வேட்பாளர்களின் இலட்சியங்களை, என்னால் முடிந்தளவு தந்துள்ளேன். மற்றவர்களின் அபிலாசைகளை முடியுமானால் அடுத்தவாரம் தருகின்றேன்.

இத்தேர்தலில் பேரினவாதிகளில் இருந்து, தமிழ்த்தேசியவாதிகள், முதல் இடதுசாரிகள், தலித்துக்கள் வரை போட்டியிடுகின்றனர். இததேர்தலில் பெண்களும் போட்டியிடுகின்றனர்! ஆனால் ஓர் குறை பெண்ணிலை வாதிகள் போட்டியிடவில்லை என்பதே! அவர்களும் போட்டியிட்டிருந்தால், இத்தேர்தல் பூரணத்துவம் பெற்ற நிறைவான தேர்தலாக அமைந்திருக்கும்!

உங்களுக்கு எதிராக கண்டி மாநகரத்தில் கெல உறுமயக் கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ததை நான் அறிவேன். இதற்குமுன்னர் ஒருமுறை தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சந்தித்த பொழுதும் இதையே செய்தார்கள். இக்கட்சியினர். புலிகளை நான் கண்டிக்கு கொண்டுவந்ததாகவும், பிரச்சாரங்கள் செய்தார்கள். எனவே இன்று உங்களுக்கு எதிராக காட்டப்படும் எதிர்ப்புக்களை கணக்கில் கொள்ளாது, உங்கள் கடமையைச் செய்யுங்கள் . நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்

என மனோ கணேசனுக்கு உதவிக் கரம் நீட்டுகினறார். கண்டி மல்வத்தை பீடாதிபதி நீயங்கொட விஜிதசிறி மகாநாயக்க தேரோ எல்லா நாயக்கர்களும் இவர்போல் மகாநாயக்கர்களாக இருந்தால் எம்நாட்டில் இனஐக்கியம் ஏற்படும்! தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வரும்!

தமிழக அரசுக் “காவலர்களின்” காமவெறி!

“தொப்புள்கொடி உறவுகளை” செய்யாத குற்றத்திற்காக கைது செய்து அடைக்கின்றார்கள். கலைஞரின் காவலர்கள். கணவனை சிறையில் அடைத்துவிட்டு, மனைவியை பலவந்தமாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்து, காமப்பசி தீர்க்கின்றார்கள். அதுவும் பெண்கள் தினத்தில்.

கரூர் அருகில் உள்ள ராயலூர் கிராமத்தில், ஆயிரம் இலங்கைத்தமிழ் அகதிகள் உள்ளனர். 2007-ல் அயல்கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சிறுமி இருவரை, கொலைக்கும்பல் ஓன்று கழுத்தை வெட்டி படுகொலை செய்தது. கடந்த மூன்று வருடங்களாக யாருமே கைது செய்யப்படவிலலை. கடைசியில் கடந்தவாரம் மூன்று இலங்கைத் தமிழர்கள்தான் கிடைத்தார்கள் கைது செயவதற்கு. கைது செய்ததின் பின் அவர்களில் ஒருவரின் மனைவியை விசாரணைக்கு என்று அழைத்துச் சென்று தங்களின் காமப் பசியை தீர்த்துள்ளது, காவல்;துறை. இதனால் மனமுடைந்த இப்பெண் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக் கொணடதில் உடல் கருகி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைப்பற்றி முதல்வர் மட்டுமல்ல, மாதர் அமைப்புக்கள் மட்டுமல்ல, என்னவோ முற்போக்கு- புரட்சிவாதிகள் கூட கண்டுகொள்ளவில்லையே!

ஓஸ்லோ பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது! 13-வது திருத்தமே தேவை! – பிள்ளையான்
ஓஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையிலேயே தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவேண்டும்! –
–திருமதி விஜயகலா மகேஸ்வரன்

அதுசரி பிள்ளையானுக்கு ஓஸ்லோவில் ஏன் இந்த வெறுப்பு! தலைவர் பிள்ளையானோ, வடக்கிலும்-கிழக்கிலும் போட்டியிடுகின்றார். 13-வதோ வட-கிழக்கை பிரிக்கின்றது. தேர்தல் முடியும் வரையாவது கொஞ்சம் அறிவுடன் (பிரதேசவாதப் பிரமை) பேசக்கற்றுக் கொள்ளுங்களேன்.! தங்களுக்கு உபதேசம் செய்பவர்கள் கூட அக்கம் பக்கத்தில் இல்லையோ? நாட்டு நடப்பை சொல்லித்தர! இதுவும் தமிழ்மக்களின் தலைவிதிதான்.!

சோபாசக்தியின் “தலித்தியமும் – பெண்ணியமும்”

இவ்வாண்டின் பெண்கள்தின நினைவு கூருகையில் தமிழகத்திலும் சில ஐரோப்பிய இணைய தளங்களிலும், பாலியல் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதில் நித்தியானந்தா என்கின்ற சாமியார் பெரும்பொருள் ஆக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சோபாசக்தி தமிழகத்திற்கு செங்கடல் எனும் குறும்படம் எடுக்கப்போய், அதில் ஏற்பட்ட பல பிரச்சினைகளை பழிநாணுவார் என்ற கட்டுரைக்கு ஊடாக சொல்ல வந்தார். சோபாசக்தி தமிழகத்தில் இருந்த காலத்தில் இப்படத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை பற்றிய செய்தி தினத்தந்தியில் வெளிவந்தது. இதைப்பற்றி “வினவு” இணையதளமும் ஓர் கட்டுரையை எழுதியது. ஆதில் லீனா மணிமேகலையின் கவிதைகள் குறித்த விமர்சனமும் வெளிவந்தது.

வினவு இணையதளம் லீனாவும் சோபாசக்தியும் லண்டனில் கார்ல் மார்க்ஸின் கல்லறை முன்நின்று எடுத்த ஓர் படத்தையும் வெளியிட்டிருந்தது.

“அந்தப்படத்தை சற்றுப் பெருப்பித்துப் பார்த்தால் அந்தக் கல்லறையில் கார்ல் மார்க்ஸ் ஜென்னி மடடுமல்லாமல் கெலன் டெமூத்தும் புதைக்கப்பட்டிருப்பதும் தெரியும். கெலன் டெமூத்தோடு தனக்கிருந்த காதலையோ, தன்மூலம் கெலன் டெமூத்திற்கு பிறந்த குழந்தையையோ கார்ல்மார்க்ஸ் அவர் மரணிக்கும்வரை ஒப்புக்கொள்ளவேயில்லை”…..என்றும், வினவுக் கட்டுரையாளரே நீங்கள் கார்ல் மார்க்ஸை எப்படி மதிப்பிடுவீர்கள் என்றார் சோபாசக்தி தன் இணையதளத்தில் – தன் கட்டுரைக்கு ஊடாக. இதை தேசம்நெற் தன் இணையத்தில் பிரசுரித்தது.

தேசம்நெற்றில் கட்டுரை வந்தபோது,, என்னை உள்ளுக்குள் வரவிட்டு அடிக்கப் போறீங்க என்று நினைக்கின்றேன். செய்யுங்கள் வாழ்த்துக்கள் என்றார் சோபாசக்தி. அவருக்கு தேசம்நெற்றில், தொடர்ந்து அடி விழுவது மட்டுமல்லாமல், தடுமாறவும், சிந்திக்கவும் வைத்துள்ளது. இந்நிலையில் சிறிரங்கன் சோபாசக்தியின் பிழையான தரவுகளுக்கும், அணுகுமுறைக்கும், தன் தரவுகள் ஆவணங்கள் கொண்டு வாதாடி சோபாசக்தியை பிணையில் எடுத்து விட்டுள்ளார். அத்துடன் சோபாசக்தியின் தவறுகளுக்கு ஆதாரமும் கேட்கின்றார்.? 160-வருடங்களுக்கு முன்பான தரவுகளை – ஆவணங்களை இவ்வளவு கஸ்டப்பட்டு, தூசு தட்டி எடுத்து எழுதும் சிறிரங்கனுக்கு, சோபாசக்தி பற்றி நாளாந்தம் வரும் செய்திகளை படிக்காமல் இருப்பது பெரும் விந்தையாக உள்ளது. குறைந்தது அவரால் அடிவாங்கிய ஓர் தொழிலாளி எழுதிய கட்டுரையை ஆவது இணையதளங்களில் படியுங்கள்.

மேலும் கார்ல் மார்க்ஸ் – கெலன் டெமூத் அம்மையார் உறவு – அவரின் குழந்தை பற்றிய விவரணங்கள், யதார்த்தமாக, கரார், தூய்மை என்ற போக்கிற்கு ஊடாக விவாதங்கள் நடைபெறுகின்றது. இங்கு கெலன் டெமூத் அம்மையாருக்கு சமர்ப்பணம் என்பது, அதில் அவருக்கு நியாயக்குரல் கொடுப்பது என்பது, சோபாசக்தி, தன் “தலித்தியப் – பெண்ணிய” விரோத நடவடிக்கைகளுக்கு பிராயச்சித்தம் தேடும் கழிவுநிலைக் கரிசனையே!

இங்கே சோபாசக்தியின் குரல் நியாயமானது என்பதற்கு அப்பால், சோபாசக்தி யார்? அவர் எங்கு நின்று எதைச் செய்கின்றார்? என்பது ளே;விக்குள்ளாக்கப்பட வேண்டியுள்ளது.

சோபாசக்தி சுகன் போன்றவர்கள் தலித்தியம், பெண்ணியம் கலக அரசியல், விளிம்பு நிலை மக்களின் அரசியல், அரசியல் வாழ்வு எனச்சொல்லி இவர்கள் எதைத்தான் செய்கின்றார்கள்.? சொல்கின்றார்கள்?

“தன்னுடைய கட்டுரைக்கு, தேசம்நெற்றில் ஒரு கேள்வி கேட்டால் நான் மூன்று பதில் சொன்னேன். எதுகுறித்து எவர் வந்தாலும் பதில் சொல்லி விவாதிப்பது என்ற முடிவோடு இருந்தேன். இம்முறை பல்லி பூரான் பூச்சி போன்ற ஆஸ்தான பின்னூட்ட மன்னர்கள் கூட அந்தப்பக்கமே வரவில்லை! என மேதாவித்தனத்தில் – இறுமாப்பான பதில்! பாலனின் ஓர் சாதாரண பின்னூட்டக் கேள்விக்கே கௌண்டமணி செந்திலின் வாழைப்பழ காமடிபோல் அதுதான் இது – இதுதான் அது “தத்தக்கப் பித்தக்கப் பதில்”

அந்தளவிற்கு அரசியலில், தத்துவத்தில், சமூக விஞ்ஞானத்தில், கட்டுடைப்பில், உடல் அரசியல் பற்றிய ஆய்வில், அதை சரியான வுPச்சில் விளங்கவைத்தலில் ஓர் “தத்துவஞானி!” “தாங்கள் மெத்தப் படித்தவர்கள்” என்ற மேதாவித்தனத்திற்கு ஊடாக தலித்தியம் பெண்ணியம் என பலவற்றை சொல்ல வருகின்றார்கள்.

இவரின் தோழி லீனாவின் “மாக்சிசக் கட்டுடைப்புக் கவிதைகள், உடல் அரசியல் பற்ய கவிதைகளை;” ; சரியான வீச்சில் பலரால் விளங்கிக் கொள்ள முடியவில்லையாம். பெண்கள் மீது திணிக்கப்பட்ட மதம் சார்ந்த ஓழுக்கங்களையும், ஆணாதிக்க கலாச்சார அடிப்படை வாதத்தையும், பாலியல் சுதந்திரமின்மையையும், தன் எழுத்துக்கள் மூலம் கேள்விக்குள்ளாக்கினால், உங்களால் பொறுக்க முடியவில்லையாம்!

லீனாவின் கவிதைகளில், உடல் அரசியலையும் கட்டுடைப்பையும் விட விஞ்சி நிற்பது, “காமசூத்திரக் காமத்துப்பாலே” இதைச் சொல்ல வந்தால், இறுகிய மரபு, இன்னும் இதை எத்தனை காலத்திற்குத்தான் கட்டி அழப்போகின்றீர்கள், என்கின்றார்கள்!
நீங்கள் சொல்லும் உங்களின் உந்த “உவைகள்தான்” தலித்தியம் பெண்ணியம் என்றால், உது அடக்கி ஓடுக்கப்பட்ட ஏகப்பெரும்பான்மையான பெண்ணிய – தலித்திய மக்களின் விடுதலைக்கு உதவாது!

தங்களை புனித நடத்தையின் பாற்பட்டோ, தூய்மைவாதங்களின் பாற்பட்டோ நடக்கவோ, வலம் வரவோ நாம் கேட்கவும் இல்லை. உங்களைக் கேட்க நாம் யார்? ஆனால் “தலித்திய பெண்ணிய” செயற்பாட்டாளர்களாக வலம் வரும்போது, உங்களை நோக்கி சுட்டி நிற்கும் கேள்விகள் நியாயமானதே! நீங்கள் இதுதான் என்றால், ஒடுக்கலின் – மக்கள் நலன் சார்ந்த, தளத்தில் நின்று செயற்படுங்கள்.

டக்கிளஸ் வென்றாலும் பரவாயில்லை, கூட்டமைப்பு வெல்லக்கூடாது! –பொன்னம்பலம் குழு

“தனக்கு மூக்குப் போனாலும், எதிரிக்குப் சகுனப்பிழைப்” போக்கே தங்களின் பரம்பரை அரசியல் பண்பு. தமிழ்ப்பல்கலைக்கழகம் கேட்டால் இந்துப் பல்கலைக்கழகம் கேட்பது, சமஸ்டி கேட்டால் ஒற்றையாட்சி, இப்படியான பற்பலவே…..