Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

கடத்தியதை ஒத்துக் கொள்ளும் கோத்தபாயாவும் மறுக்கும் ஜே.வி.பியும்

2012 இல் குமார் மற்றும் திமுது ஆட்டிக்கல கடத்தப்பட்டு காணமல் போன நிலையில் அவுஸ்திரெலியாவின் தலையீட்டை அடுத்து கடத்தல் நாடகம் அம்பலமானது. குமார் நாடு கடத்தப்பட்ட அதேநேரம், திமுது ஆட்டிக்கல வீதி ஒன்றில் வைத்து விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தின் பின் பத்திரிகையாளரைச் சந்தித்த திமுது ஆட்டிக்கல வழங்கி அன்றைய பேட்டியானது, கோத்தபாய - ஜே.வி.பியின் கூட்டு கொலைகார கிரிமினல் தனத்தை அன்று அம்பலமாக்கியது.

திமுது தனது பேட்டியில் "கொடகமையிலுள்ள தனது வீட்டுக்கு அருகாமையில் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டை நெருங்கிய போது, வீட்டுக்கு அருகாமையில் ஒரு வெள்ளை வான் நின்றதையும்... கடத்திச் சென்றவர்கள், கட்சியின் சர்வதேச தொடர்புகள் பற்றியும் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பு புலம்பெயர்ந்தோருடன் தொடர்புகள் உண்டா? என்று கேட்டது பற்றியும்... ஜே.வி.பி.க்கு துரோகம் செய்தமையால்தான் நான் துன்பப்படுவதாக அவர்கள் கூறினர். சிலர் ஜே.வி.பி.யை நல்லதொரு அரசியல் கட்சியென கூறினர். கொள்கை வேறுபாடுகள் காரணமாகவே நாம் பிரிந்தோம் என கூறியதையும்... கடத்தப்பட்ட குணரத்தினத்தின் முன் என்னை ஒருமுறை அழைத்துச் சென்றனர் என்று கூறிய திமுதுவிடம் ஜே.வி.பி.க்கு இதில் தொடர்பு உள்ளதென சந்தேகப்படுகிறீர்களா? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போது அதற்கு பதிலளித்த அவர், "என்னால் முடிவாக எதுவும் கூற முடியாது. ஆயினும் கடத்தியவர்களின் பேச்சிலிருந்து ஜே.வி.பி.க்கு தொடர்பு இருக்கலாமோ என சந்தேகிக்கின்றேன்” என்றார்.

அன்று குமார், திமுது கடத்தலை மறுத்த அரசாங்கம் சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக அவர்களை விடுவித்த நிலையிலும், கடத்ததுலுடன் அரசுக்கு இருந்த தொடர்பை தொடர்ந்து மறுத்தது. இது போன்று தான் பலர் இலங்கையில் காணமல் போக காரணமாக இருந்த அரசு, தனக்கான தொடர்பை மறுத்து வருகின்றது. இன்று ஜே.வி.பியுடன் சோந்து நாங்கள் தான் அன்று குமாரை கடத்தினோம் என்று அன்றைய அரசு கூறுகின்ற நிலையில், குமாரை மையப்படுத்தி கடத்தப்பட்ட மற்றும் காணமல் போனாவர்கள் குறித்தான போராட்டத்தை முன்னுக்கு எடுக்கும் புதிய அரசியல் எதார்த்தம் இன்று காணப்படுகின்றது.

இன்று குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அன்று குமாரின் கடத்தல் குறித்தான் உண்மைகள் வெளி வந்திருக்கின்றது. 

2012 ஏப்பிரல் 6ம் திகதி கம்பஹா மாவட்டத்தில் உள்ள குமுணு மாவத்தை கிரிபத்துகொடாவில் அவரின் வீட்டில் வைத்தே, குமார் குணரத்தினம் கடத்தப்பட்டார். இந்தப் பின்னணியில் ஜே.வி.பி இருந்தாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா அண்மையில் தனது பேட்டியில் கூறியிருகின்றார். இதை ஜே.வி.பி மறுத்து தனக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது என்று கூறி வருகின்றது.

இந்த பின்னணியில் இன்று பல உண்மைகளை மீள போட்டு உடைத்து இருக்கின்றனர். கடந்த கால கடத்தல்கள், காணமல் போன நிகழ்வுகள் கோத்தபாயாவின் தலைமையில் நடந்து இருப்பதும் அரசுடன் இணைந்து செயற்பட்ட அரசியல் மற்றும் தனிப்பட்ட நபர்களின் தேவைக்காகவும் கடத்தல்கள், கொலைகள் நடந்ததையும் இந்த பேட்டி இன்று ஒப்புக் கொள்கின்றது.

மறுபக்கத்தில் கடந்தகால கடத்தல் மற்றும் காணமல் போதல் தொடர்பாக கோத்தபாயாவின் சுய வாக்குமூலம் இன்று வெளி வந்துள்ள போதும், கடந்தகால கடத்தல் மற்றும் காணமல் போன நிகழ்வுக்கு அதை பொதுமைப்படுத்திப் போராட்டத் தயாரற்ற அரசியல் கட்சிகளையும் அவற்றின் சமூகம் பற்றிய அக்கறையற்ற அரசியலையும் எடுத்துக் காட்டுகின்றது. நாட்டின் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பும் காணமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்களுக்கான குரலாக ஒலிக் தவறிய காட்டிக் கொடுப்பை இதன் பின்னால் காணமுடிகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் மற்றொரு கட்சி தலைவர்களாக இருந்த குமார் மற்றும் திமுது முன்பு கடத்தப்பட்டதை முன்னாள் பாதுகாப்பு செயலார் ஒப்புக்கொண்டதை முன்வைத்து ஒரு சுயதீனமான  விசாரணையை கோரத் தவறுவதும், இதே கடத்தல்காரர்கள் தான் பெருமளாவிலான தமிழ் மக்களை கடத்தியதன் பின்னணியில் இருந்ததை சுட்டிக் காட்டி, காணமல் போன குடும்பங்களுடன் இணைந்து போராட்ட தயாரற்ற வரலாற்றுத் துரோகத்தை இன்று அரசியலாக செய்கின்றனர்.   

2011 இல் காணமல் போனவர்களுக்காக போராடிய லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்டு காணமல் போனதும், அதே பாணியில் 2012 இல் குமார் கடத்தல் காணமல் போகும் வண்ணம் சட்டவிரோதமான முறையில் நடந்தேறியது தொடர்பாக, கூட்டமைப்பும், எதிர்க்கட்சித் தலைவரும் கொண்டுள்ள மௌன அரசியல் என்பது கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கிய செயலுக்கு நிகரனாது.     

குமார் அவுஸ்திரேலிய பிரஜை என்பதலோ அல்லது விசா சட்டத்தை மீறியதாலோ, அன்று அவர் சட்டப்படி கைது செய்யப்படவில்லை. மாறாக கடத்தப்பட்டு காணமல் போனவர், இவர் மட்டுமல்ல மற்றொரு இடத்தில் இருந்து கடத்தப்பட்ட திமுது ஆட்டிக்கலவும் கூட காணமல் போய் இருந்தார். இந்த பின்னணில் இதை புரிந்து கொள்ள முடியும். 

நடந்த இந்த சம்பவத்தின் பின்னால் ஜே.வி.பி இருந்தது என்பது வெளிப்படையான உண்மை. ஜே.வி.பி. அரசுடன் இணைந்து இனவாதத்தை முன்னெடுத்துடன் இடதுசாரிய அரசியலை கைவிட்டு முதலாளித்துவக் கட்சியாக மாறிய நிலையில், குமார் மற்றும் தோழர்கள் பல வருடங்களாக ஒரு உட்கட்சி போராட்டத்தை நடத்தி வந்தனர். தொடர்ந்து உட்கட்சி போராட்டம் மறுக்கப்பட்ட நிலையில் குமார் என்ற ஒருவர் தமது கட்சியில் இல்லை என்று ஜே.வி.பி பகிரங்க அறிக்கை விட்ட நிலையில், கட்சியில் இருந்த விலகியவர்கள் முன்னிலை சோலிசலிசக் கட்சியை அமைத்தனர்.

இதற்கான பகிரங்க மாநாட்டை கூட்டி கட்சியை அறிவிக்கும் அதே நேரம், கடந்த காலம் மீதான பகிரங்க  சுயவிமர்சன நூலை வெளியிட இருந்த நிகழ்வுக்கு முதல் நாள் இரவு  குமார் மற்றும் திமுது ஆட்டிக்கல கடத்தப்பட்டதுடன் காணமல் போனார்கள். இந்த வகையில் ஜே.வி.பியின் அரசியலுக்கு சாவல் விடும் வண்ணம்  கடத்தல் என்பது ஜே.வி.பியின் அரசியல் நலன்களுடன் தொடர்புபட்டு இருந்தது. இந்த அரசியல் பின்னணியில் கோத்தபாயா மூலம் கடத்தல் நடந்தேறியது.

திமுது ஆட்டிக்கலயையும் கடத்தியதன் மூலம்  இந்த கடத்தல் குமார் அவுஸ்திரேலிய பிரஜை என்பதலோ,  விசா சட்டத்தை மீறியதோ அல்ல என்பது வெளிப்படையான உண்மை.  ஜே.வி.பியின் அரசியலை பாதுகாக்கவும் இலங்கையில் இடதுசாரிய அரசியல் மீள் உருவாக்கத்தை தடுத்து நிறுத்துவதுமே, கடத்தலின் பின்னான அரசியலாகும். ஜே.வி.பியின் இனவாத மற்றும் வர்க்க விரோத அரசியலை பாதுகாக்கவும் ஜே.வி.பியின் காட்டிக்கொடுப்பு மூலம் மகிந்தாவின் அரசியலை பலப்படுத்துவதுமே கடத்தலின் நோக்கமாகும். இன்று குமாரை கைது செய்துள்ளவர்கள் அவரை நாடு கடத்த முனையும் நோக்கமும் இதுதான்.