Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 12

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 12


1932இல் டிராட்ஸ்கிய மற்றும் குழுக்கள் நடத்திய சதியையே வர்க்கப் போராட்டம் என்றனர்

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், புரட்சிக்கு பிந்தைய சமுதாயத்தின் வர்க்கப் புரட்சியை தொடர்வது எப்படி?, ஜனநாயகம் என்றால் என்ன?, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் எந்த வர்க்கத்துக்கு ஜனநாயகம்?, முதலாளித்துவ மீட்சி என்பது என்ன?, என எதிலும் கருத்து முன்வைக்க முடியாது உள்ளது. மாறாக அவதூறுகளை சார்ந்து அரசியல் நடத்தும் டிராட்ஸ்கியம் முதல் மார்க்சிய எதிர்ப்பை நடத்தும் அனைத்து வித கயவாளிகளும், எதையும் ஆழமாக அனுக முனைவதில்லை. இது பற்றி லெனின் கூறும் போது “ஆழமான பிரச்சனைகளை ஆழமாக அணுகாதவர்களை முக்கியமானவர்களாக நாம் கருத முடியமா? அவ்வாறு செய்வது கடினம் தோழர்களே, மிகவும் கடினம்! ஆனால், சிலரால் ஆழமாக அணுகப்படாத கேள்விகள் மிகவும் ஆழமானவை, ஆகவே அந்தக் கேள்விகளுக்கு அளிக்கப்படும் பலவீனமான பதில்கள் ஆய்வதில் எந்த தீங்கும் ஏற்பட்டவிடாது” என்றார். இந்த இடத்தில் தான் நாம் கடந்தகால நிகழ்ச்சிகள் மீதான அரசியலில் அநேமதேயமாக, அவதுறை உருவாக்குவதில் சதிகாரராகள் இருப்பதை நாம் காணமுடியும்.

 

மா-லெ மார்க்சியமாக வரையறை செய்து ஸ்டாலின் அதை அமுல் செய்தபோது, டிராட்ஸ்கியம் இதை மறுத்தது. மாறாக லெனியத்தை மார்க்சியமாக எற்றுக் கொள்ளவில்லை. லெனின் பெயரை பயன்படுத்தி மார்க்சியத்தை கழுவேற்ற தயாராக இருந்தனர். ஆனால் லெனினியம் டிராட்ஸ்கியத்தையும் எதிர்த்து வளர்ச்சி பெற்ற ஒரு மார்க்சிய கோட்பாடாகும். இதை டிராட்ஸ்கியம் ஒருநாளும் எற்றுக் கொள்ளவில்லை. ஸ்டாலின் “லெனினியம் என்பது ஏகாதிபத்தியத்தினதும் பாட்டாளி வர்க்க புரட்சியினதும் சகாப்த்தின் மார்க்சிசமாகும்” என்றார். இதை மறுத்துதான் டிராட்ஸ்கியம் முதல் புகாரின் என வலது இடதுகள் அனைவரும் சோவியத்தில் எதிர்புரட்சி குழுக்களை சதிகளை கட்டினர். இதை ஒத்துக் கொண்டு பெருமையாக டிராட்ஸ்கியம் என்று அதை முன்வைத்தனர்.

சோவியத்யூனியனில் தங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட சதிகார குழுக்கள் செயல்பட்டதை ஒத்துக்கொண்டு, அதை பெருமையாக இன்று முன்வைக்கின்றனர். அத்துடன் லெனினியத்துக்கு எதிரான டிராட்ஸ்கியமாக, அதையே “மார்க்சியமாக” பீற்றுகின்றனர். அதை அவர்கள் சொந்த நனவுகளுடன் “… டிராட்ஸ்கிசம் என்னும் சொல்லை டிராட்ஸ்கியின் கருத்துகளை நோக்கி நனவுடன் திருப்பி எதிர்ப்பாளர்களுக்கு நாம் பயன்படுத்துகிறோம். ..ஒழுங்கமைக்கப்பட்ட உண்மையான டிராட்ஸ்கிச குழுக்கள் இருந்தன” சதிக் குழுக்கள் அன்று சோவியத்தில் இருந்தன எனபதை பீற்றுகின்றனர். பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியை கவிழ்த்து விடும் எதிர்புரட்சியில் சுறுசுறுப்பாக இயங்கினர் என்பதையே ஒத்துக் கொள்கின்றனர். இந்த வகையில் கட்சி உறுப்பினர் பதவி, கட்சியின் ஜனநாயக மத்தியத்துவம், அரசு பதவிகளை கூட முறைகேடாக கையாண்ட இரகசிய குழுக்களாகவே செயல்ப்பட்டனர். வெவ்வேறு வலது இடது சதிகாரக் குழுக்கள் இந்த சதியை நடத்துவதில், ஐக்கிய முன்னணியைக் கூட கட்டினர். இதை அவர்கள் பெருமையாக இன்று பீற்றுகின்றனர்.

இதையே அவர்கள் “ஸ்டாலினிச ஆட்சிக்கு உட்பட்ட சோவியத் ஒன்றியத்தில் கூட்டமைப்பாக இயங்கும் டிராட்ஸ்கிச குழுக்கள் இருந்தன என்பதற்கு சில ஆதாரங்களை முல்லர் சுட்டிக் காட்டும் அதே வேளை, ஆனால் அவற்றிக்கு அரசியல் முக்கியத்துவம் இல்லை என்கின்றார்” கடந்தகால ஆவணங்களை ஸ்டாலினுக்கு எதிரான அவதூறுக்காக ஆய்வு செய்வோர், முன்வைக்கும் முரண்பட்ட கருத்தில் இருந்தே, இந்த எதிர்வாதத்தை டிராட்ஸ்கியம் இன்று கட்டமைக்கின்றது. தமது கூட்டுச் சதியை நியாயப்படுத்த “1989- க்கு முன்பு ஆவண காப்பகங்கள் மூடியிருந்தமையால், ஸ்டாலினின் சரித்திர காலத்தின் “இருண்ட காலத்தைப் பற்றி” முழுமையான ஆய்வு நடத்த முடியவில்லை” என்று கூறி ஹம்பேர்க் சமூக ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த முல்லர், தான் எழுதிய நூலின் இந்த சதியை ஸ்டாலினுக்கு எதிரான புரட்சியாக பூச்சூட்டுகின்றனர். டிராட்ஸ்கிய குழுக்கள் சோவியத்தில் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க தலைமைக்கு எதிராக, பலமான சதிக் குழுக்களை கட்டியதாக டிராட்ஸ்கியம் இன்று பெருமையாக மார்பு தட்டுகின்றது. ஸ்டாலின் இதை ஒடுக்கியது, ஜனநாயக விரோதம் என்கின்றனர். இந்த சதிக்கு விட்டுக் கொடுக்காத தன்மையை காட்டியே, ஸ்டாலின் “கொடுங்கோலன்” என்கின்றனர். ஸ்டாலின் அவதூறுக்காக சோவியத் ஆவணங்களை, ஏகாதிபத்திய சம்பள பட்டியலில் சம்பளம் பெற்றுக்கொண்டு ஆய்வு நடத்தினர். இவர்களுக்கு இடையே எற்பட்ட முரண்பட்ட கருத்துகளை, டிராட்ஸ்கியம் எதிராக எடுத்துக் காட்டுகின்றது. இதன் மூலம் நாங்கள் திறம்பட சதி செய்தோம் என்பதை ஆதாரமாக முன்வைக்கின்றனர். “வாடிம் ரொகோவின் இந்த குழுக்களைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் நன்றாக, விரிவாக ஆய்வு செய்கின்றார். முல்லர் இதை மறுக்கின்றார். ரொக்கோவின் சோவியத் உளவுத்துறையின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனையின்றி அப்படியே திருப்பிக் கூறவதாக முல்லர் குற்றம் சாட்டுகிறார்” முல்லர் என்ற ஏகாதிபத்திய கைக்கூலி முன்வைக்கும் கருத்தை மறுக்கும் டிராட்ஸ்கியம், வாடிம் ரொகோ என்ற ஏகாதிபத்திய கைக்கூலியின் கருத்தை ஆதாரமாக வைத்து, டிராட்ஸ்கிய சதிப் பெருமைகளை பீற்றுகின்றனர். அதையே இன்று டிராட்ஸ்கியம் எடுத்துக் காட்டும் போது “ரொகோவின் ஸ்டாலினிச கூற்றை ஒப்புக்கொள்ளவுமில்லை, உதறித்தள்ளவுமில்லை. எனவே முல்லரது குற்றசாட்டு தவறானது. ஸ்டாலினிச கொடுமைகளின் உச்சக் கட்டத்தில் கூட எதிர்ப்பு வட்டாரங்கள் டிராட்ஸ்கியின் கருத்துக்களால் செல்வாக்குப் பெற்றிருந்தன என்று காட்டும் தஸ்தாவேஜீக்களை ரொகோவின் எடுத்துக் காட்டுவதன் மூலம் …” என்று ஸ்டாலினுக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டதை பெருமைப் படுத்துகின்றனர். அரசியலில் அநாமதேயமாக திகழ்ந்து, சதிகளில் ஒன்று கூடிய இந்த குழுக்கள், உள்ளிருந்தே முதலாளித்துவ மீட்சியை நடத்த முயன்றனர். இது பற்றி ஸ்டாலின் கூறும் போது “ஒரு கோட்டையை உள்ளிருந்தே கைப்பற்றுவது மிகவும் சுலபமான வழி” என்றார். டிராட்ஸ்கிய சதிகார குழுக்கள் மிக சரியாக இனம் கண்டு ஒடுக்கினார் ஸ்டாலின். ஆனால் ஸ்டாலின் மரணத்தின் பின்பு உள்ளிருந்தே கோட்டையை குருச்சேவ் கைப்பற்றினான். இதைத் தான் டெங்கும் சீனாவில் செய்தான். இதைத் தான் எங்கெல்ஸ் மறைவின் பின்பும் பெர்னஸ்டைன் செய்தான். அனைத்தும் உள்ளேயிருந்த சதிகார கும்பல்களின் மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தையே அரசியல் ஆதாரமாக கொண்டனர்.

இந்த மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தை வெறுத்த லெனின் “உழைக்கும் மக்களுக்கு உடனடியாக வெறுப்பூட்டும், அப்பட்டமான சந்தர்ப்பவாதம் மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தைப் போன்று அபாயாகரமானதும் ஊறு விளைவிக்க கூடியதும் அல்ல. மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தனது சந்தர்ப்பவாத நடைமுறைக்கு உரிய தருணம் வரவில்லை என்றும் இன்னபிறவாகும் நீருபிக்க அடுக்கடுக்காக மார்க்சிய சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறது” என்றார். சோவியத்யூனியனில் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக திரண்ட சதிகார குழுக்கள் தம்மை முடிமறைத்துக் கொண்டனர். இந்த சதியில் 1923 முதலே தனது மகன் இரகசிய குழுக்களை கட்டி சதியில் ஈடுபட்டதை டிராட்ஸ்கி தனது வாழ்க்கை வரலாறில் பெருமையாக பீற்றுகின்றான். கட்சியிலும், அரசு பதவியிலும், இராணுவத்திலும் ஒளித்துக் கொண்டவர்கள், வெளிநாட்டு தூதரக பதவிகளையும் பயன்படுத்தி, தம்மை ஒரு இரகசிய குழு வடிவத்துக்குள் ஒருங்கமைத்துக் கொண்டனர். 1930 களின் பின்னால் இந்த குழுக்களில் சில தமது மூடிமறைக்கப்பட்ட நிலையில் இருந்து ஆட்சியை கைப்பற்றும் சதிகளில் நேரடியாக ஈடுபட்டன. உள்நாட்டில் கூட்டுடமையாக்கல் என்ற கடுமையான வர்க்கப் போராட்டங்களை பயன்படுத்திக் கொண்டு, அப்பட்டமாக வெளிவரத் தொடங்கின. சோவியத் பொருளாதார நெருக்கடிகளில் இருந்த மீள லெனினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால பொருளாதார திட்டம் ஒன்றின் மூலம், இடைப்பட்ட வர்க்கங்கள் சோவியத்தில் வளர்ச்சி பெற்றது. 1929 வரை அனுமதிக்கபட்ட இந்த வர்க்கம், கட்சியிலும், சோவியத் சமுதாயத்திலும் தனக்கான வர்க்க அடிப்படையை கொண்டிருந்தது. 1929 இல் சோசலிச கட்டுமானத்தை நோக்கிய வர்க்கப் போராட்டத்தை தொடங்கிய போது, கட்சிக்குள் இடைக்கால பொருளாதார திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பிரிவுகளின் எதிர்ப்புகள் உருவானது. இந்த பிரிவுகளும் டிராட்ஸ்கிய மற்றும் குழுக்களும் பின்னிப் பிணைந்தாகவே வெளிப்பட்டன. பகிரங்கமான சோவியத் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை டிராட்ஸ்கி நடத்தினான். சோவியத்யூனியனில் இடைக்கால பொருளாதாரத் திட்டம் கைவிடப்பட்டதை எதிர்த்தும், பின்னால் நிலத்தை கூட்டுமையாக்கல் போன்று பல்வேறு வர்க்கப் போராட்ட நிகழ்ச்சிகளின் போது டிராட்ஸ்கியும் மற்றைய குழுக்களும் சோவியத்தை ஆதாரிக்கவில்லை. மாறாக எதிராகவே செயல்பட்டனர்.

இதையே நான்காம் அகில டிராட்ஸ்கிய பத்திரிகை “ஸ்டாலினின் பாரிய பயங்காரத்தின் மூலங்களும் விளைவுகளும்” என்ற தலைப்பில் பெருமையாக எடுத்துக் காட்டுகின்றது. இந்த சதியில் ஈடுபட்ட ஒருவர், 2000ம் ஆண்டில் பெருமையாக கூறியதை எடுத்துக் காட்டி, “இதைக் கவணத்தில் கொண்டு நான் சுருக்கமாக மிக முக்கியமான ஆண்டான 1932 தொடர்பாக கூறவிரும்புகிறேன். இந்த வருடம் ஸ்டாலின் குழுவினரின் அரசியலின் விளைவாகப் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய வருடமாகும். நாட்டின் பலபாகங்களிலும் முக்கியமாக உக்கிரேனிலும் வடகல்கசாவிலும் சிறு அளவிலான உள்நாட்டு யுத்தம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது. இவ்விளைவில் விவசாயிகளுக்கு எதிராக இராணுவத்தை நிலைகொள்ளச் செய்ய வேண்டியதோடு பீரங்கி, டாங்கிப் படைகளை பிரயோகிக்க வேண்டியிருந்தது. …இந்த நிலைமைகளின் கீழ் இதுவரை தலைமறைவாக இயங்கி வந்த சில எதிர்ப்புக் குழுக்களின் நடவடிக்கைகள் மீண்டும் புத்தியீர்படைந்தன. அவர்கள் ஸ்டாலினுக்கு எதிரான போராட்டத்திற்காக ஒன்றுபடுவதற்காக சில திட்டவட்டமான முயற்சிகளை செய்தனர். ….” என்கின்றனர். நாட்டில் நடந்த விவசாய கூட்டுடைமையாக்கல் என்ற வர்க்கப் போராட்ட நிகழ்ச்சியை பயன்படுத்தி சதிக் குழுக்கள், ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஒழித்துக் கட்ட முனைப்பு பெற்றன. ஸ்டாலினுக்கு எதிரான அரசியல் என்ன என்பதும், எதிர்ப்பு குழுவின் சதிகள் என்ன என்பதை இலகுவாக, எதை எதிர்த்து நடந்தது என்பதில் இருந்து இதை இனம் காணமுடிகின்றது. நிலப்பிரபுக்களும் மற்றும் குல்லாக்களும், அவர்கள் சார்ந்த பிரிவுகளும் நிலக்கூட்டுடமைக்கு எதிராக கலகம் செய்தனர். முன்னனுபவம் இல்லாத சோசலிச கட்டுமானத்தில், கட்சி சில பகுதிகளில் வேகமான கூட்டுப் பண்ணையாக்கல் மூலம் விட்ட சில இடது தவறுகளை பயன்படுத்தி, நிலப்பிரபுக்களும் குல்லாக்களும், தலைமைறைவாக இருந்த முதலாளித்துவ மீட்சிக்கான குழுக்களும் கலகத்தில் இறங்கின. இக் கலகத்தில் கட்சி தனது இடது தவறைத் திருத்தியதுடன் நிலப்பிரபுத்துவச் சக்திகளை ஒடுக்கியதும் அறிந்ததே. ஆனால் இந்த இடது பிரிவான டிராட்ஸ்கிய, மற்றும் வலது பிரிவான கமனேவ், புக்காரின் போன்றோர் கட்சிக்கு வெளியில் இருந்து, சதிப்பணியில் இரகசியக் குழுக்களை அமைத்து நிலப்பிரபுக்களினதும் குல்லாக்களினதும் போராட்டத்துடன் கைகோர்த்து பாட்டாளி வர்க்க அரசை எதிர்த்தனர். இக்குழுக்கள் சில சோசலிசமயமாக்கலை திட்டவட்டமாக எதிர்த்தன. நிலம் கூட்டுடமையாக்கல் மற்றும் தனியார் லாபம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று பிரகடனம் செய்தனர். கூட்டுடமையாக்கல் தனிநாட்டில் சோசலிசத்தை கட்டும் பணியில் அமைந்தது, இது சர்வதேசியத்திற்கு எதிரானது எனப்பிரச்சாரம் செய்ததுடன், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பலாத்காரமாக அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நூலின் முந்தைய பகுதிகள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11